Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மார்ச் 2009
உயர்நீதிமன்ற வன்முறை சீருடை ரவுடிகளின் வெறியாட்டம்
யாக்கன்

1947-ல் இந்தியப் பிரிவினை நடந்து முடிந்த சில நாட்களில், இந்திய - பாகிஸ்தான் எல்லையோரங்களில் வரலாறு காணாத கலகம் பொங்கி வெடித்தது. பஞ்சாபிலும் லாகூரிலும் கழிவு நீர்க் கால்வாய்களில் ரத்தம் ஓடியது. படுகொலை செய்யப்பட்ட மக்கள் வீசியெறிந்த குப்பைகளாக தெருக்களில் சிதறிக் கிடந்தனர். கற்களாலும் தடிகளாலும் அடித்துக் கொல்லப்பட்ட உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிந்து கிடந்தன. கண்களும் கை கால்களும் இன்றி பெண்களும் குழந்தைகளும் இறந்து கிடந்தார்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் இரத்த வெறிபிடித்த வேட்டை நாய்களைப் போல இரவிலும் பகலிலும் கொலை ஆயுதங்களுடன் கூச்சலிட்டபடி சுற்றித் திரிந்தனர். இந்துக்களைக் கண்ட மூஸ்லீம்களும். முஸ்லீம்களைக் கண்ட சீக்கியர்களும் மரண ஓலமிட்டபடிச் சிதறி ஓடினர்.

துப்பாக்கிகளாலும் கூரிய ஆயுதங்களாலும் மக்களைக் கொலை செய்த கும்பல்களில் சீருடையணிந்த காவலர்களும் இருந்தனர். கராச்சியிலும், சிம்லாவிலும் பணியிலிருந்த அனைத்துக் காவலர்களும் பணிய¤லிருந்து திடீரென விடுப்பு எடுத்துக் கொண்டனர். மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படாத அந்த விடுப்பு, காலவரையின்றி நீடித்தது. விடுப்பு எடுத்த காவலர்களோ, சீருடைகளைக் கழற்றிவிட்டு, துப்பாக்கிகளுடன் கிராமங்களுக்குள் நுழைந்து வேட்டையாடினர். பஞ்சாபில் மட்டும் 25,000 சீக்கியக் காவலர்கள் ஒரே நாளில் தங்கள் பணியை விட்டு நின்றனர். பின்னர் ரத்த வெறிகொண்ட வேட்டை நாய்களாக மாறினர்.

ஆங்கில ஆட்சியதிகாரத்திலிருந்து மீண்ட இந்திய காவல்துறைக் காவலர்கள் நடத்திய மாபெரும் படுகொலை நிகழ்வு அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆயினும் ரத்தம் ருசித்த வேட்டை நாய்களின் நாக்கு மடியுமோ! பைபிளில் கூப்பட்டிருந்தபடி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்ற கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த பயங்கர வன்முறை நடந்து அறுபத்தியிரண்டு ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஆனால், நாட்டின் காவல்துறைக் காவலர்களின் வெறியுணர்வு மட்டும் இன்றுவரை குறைந்தபாடில்லை. Ôஎன் கவுண்டருக்குப்Õ பெயர்போன தமிழ் நாட்டு காவல்துறைக் காவலர்களோ வெறியுணர்வின் உச்சத்தில் நிற்கிறார்கள்.

1997-ல் கூலி உயர்வு கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க, நெல்லை - தாமிரபரணியாற்றுப் படுகையில் ஊர்வலமாகச் சென்ற தோட்டத் தொழிலாளர்களை, குழந்தைகள், பெண்கள் என்று கூடப் பாராமல், பொங்கிப் பெருகி வந்த ஆற்றுக்குள் அடித்து விரட்டி பதினேழு பேரைப் படுகொலை செய்தது போல... தமிழ்நாட்டு காவல்துறை காவலர்கள் எதையும் இப்போது செய்யவில்லை. புறம் கை கட்டப்பட்டு, மண்டியிடச் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட அயோத்தியாநகர் வீரமணியிலிருந்து, மணல் மேடு சங்கர் வரை யாரேனும் உயிர் மீண்டு எழுந்து வந்து சாட்சி சொல்லவா போகிறார்கள். இருபத்தைந்து கொலைகள் உட்பட இரு நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைச் சுமந்து இருபத்தைந்து ஆண்டுகாலம் ராஜாவாக வாழ்ந்த வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும், திடுமெனவொரு நள்ளிரவில் கொன்றுவிட்டதாகச் சொல்லிக் கதையளந்த விஜயகுமாருக்குப் பாராட்டு விழா எடுத்தல்லவா Ôஅம்மாÕ பட்டை தீட்டினார். சுவர் தாண்டுவோரைக் குறிவைத்துப் பாயவேண்டுமல்லவா விசுவாசமான வெறிநாய்கள். வழக்கு, தீர்ப்பு, விசாரணை, என அலைச்சல் ஏதும் இல்லாதபடி, வன்மமும் வெறியுணர்வும் கொண்ட காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் புகுந்த உடல்களில் கொப்பளிக்கும் குருதி காலத்திற்காக காத்திருக்காதா என்ன?

ஆனாலும், மேசையின் மீதிருநது விழும் ரொட்டித் துண்டுகளுக்காகக் காத்திருக்கும் நாய்களுடன் எஜமானர்கள் கைகளாலும், வாய்களாலும் அறிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தோட்டத்தில் இன்னொருவர் மருத்துவமனையில். அப்படியெழுதப்பட்ட வாயறிக்கையன்றின் விளைவுதான், கடந்த பிப்ரவரி. 19. அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த காவலர்களின் கொலைவெறித் தாக்குதல். அந்தத் தாக்குதல் வழக்கறிஞர்களின் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல! நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த நீதித்துறையுமே காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. வழக்கறிஞர்களை நசுக்குவதற்கு முயற்சிக்கும் காவல்துறை நடத்திக் காட்டிய வெள்ளோட்டம் அது. அல்லது சுதந்திர இந்தியாவில் நீதித்துறையை எதிர்த்து காவல்துறை நடத்திய முதல் கலகம் அது.

Police Attack சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அந்தத் தாக்குதலுக்கான மூலகாரணமாக இருந்தவர், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கத் திரியும் சுப்ரமணிய சுவாமியும் அவரது நெருங்கிய சகாக்களான ஜெயலலிதா, இந்துராம், தினமலர், கிருஷ்ணமூர்த்தி, சோ ராமசாமி போன்றோர் எப்போதும் தமிழர் நலன்களுக்கு எதிராகவே பேசி வருபவர்கள். அண்மைக் காலமாக ஈழ மண்ணில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு வரும் சூழலில் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சுப்ரமணியன் சுவாமியும் அவரது சகாக்களும் தமிழர்களின் தேசிய இன உரிமை உணர்வுகளை கொச்சைப்படுத்தி எழுதியும் பேசியும் வருகின்றனர். தமிழீழம் குறித்து கொதிப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். நீண்ட காலமாக தமிழ் மக்களின் தேசிய இன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் தமிழ் விரோத சக்திகளை ஒடுக்க, தமிழினக் காவலர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, இன உணர்வுகளைக் கொச்சைப் படுத்த வேண்டாம் என ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

ஈழம் காக்க எதிரிகளின் உடம்பில் நெருப்பிட வேண்டிய வீரம் செறிந்த தமிழ் இளைஞர்கள் தம் உடலைப் பொசுக்கிக் கொள்ளும் கொடிய சோகத்தைச் சந்தித்து வரும் தமிழக மக்களின் இன உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் பேசியும் எழுதியும் வரும் பார்ப்பனக் கும்பலை ஒடுக்க இளைஞர்கள் நேரடி நடவடிக்கையில் இறங்குவது இயல்பானதுதான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் தேசிய இன உரிமைகள் குறித்து கொச்சைபடுத்தும் நோக்கில் மனம் போனபடி பேசித் திரியும் அரசியல் போக்கிலிகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகிறார்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடந்து கொண்டிருப்பது அதுதான். சிதம்பர நடராசர் கோவிலை தமிழக அரச தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை ஏற்று, சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியத் தீர்பபை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த சுப்ரமணியன் சாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அத்தகையதே!

தமிழ் இனத்திற்கு எதிராக தமிழ் மொழிக்கு எதிராக, தமிழர் நலன்களுக்கு எதிராக நீண்ட காலமாக சதிச் செயல்களில் ஈடுப்ட்டு வந்த சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டதை அறிந்து பார்ப்பன ஜெயலலிதாவை விட முதுபெரும் தமிழினத் தலைவர், கருணாநிதிக்கு இரத்தம் கொதித்தது ஏன் என்று தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உயர்நீதி மன்ற நீதிபதிகள் முன்பு விரட்டி, விரட்டி செருப்பாலும், அழுகிய முட்டையாலும் அடிபட்ட சுப்ரமணிய சுவாமி, தன்னை அழுகிய முட்டையால்தான் அடித்தார்கள் என்று ஊடகங்களுக்கு வெளிப்படை யாகத் தெரிவித்த போதிலும் கொலை முயற்சி நடந்ததாக வழக்குப் பதிவு செய்தது காவல் துறை. அழுகிய முட்டையால் கொல்ல முடியுமா? அதுவும் சுப்ரமணிய சுவாமியைக் கொல்ல முடியுமா? தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை சுப்ரமணிய சுவாமியிடம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்கள் என்று எண்ணுமளவிற்கு, தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. ஜனதா கட்சி என்ற பெயரில், உயர்நீதி மன்றத்தில் அவர் வாங்கிய அடி, மிதி, முட்டை வீச்சுக்களைவிட குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, தரகு அரசியல் செய்து பிழைத்துவரும் சுப்ரமணிய சாமியை இந்தியா அறிந்த தலைவர் என புகழ் பாடுகிறார் கருணாநிதி.

தாக்குதல் நடந்த மறுநாளே, வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை யிலடைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. உயர்நீதி மன்றத்தில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களைத் தீவிரமாக முன்னின்று நடத்திவரும் வழக்கறிஞர் களை பிணையில் வெளிவர முடியாத குண்டர் சட்டத்தில் சிறை வைப்பதன் மூலம், உயர்நீதி மன்றத்திற்குள் நடை பெற்று வரும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே தமிழினத் தலைவரின் நோக்கம். அதற்காகவே விரிவான திட்டங்களைத் தீட்டி, செயலில் இறங்கியது தமிழக காவல்துறை.

திட்டமிட்டபடி, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றும் காவல் உயர் அதிகாரிகள் அனைவரும் பிப்ரவரி 19-அன்று உயர் நீதிமன்ற பகுதிக்கு வந்து சேர்ந்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், துப்பாக்கிகள், சிறைபிடித்து ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன் அதிரடிப் படை, கலவரத் தடுப்புப்படை உட்பட நெற்றிமட்டத் தடிகளுடன் அய்நூறுக் கும் மேற்பட்ட காவலர்கள் உயர்நீதி மனற் வளாகத்திற்குள் குவிக்கப்பட்ட னர். 20 வழக்கறிஞர்களைக் கைது செய்ய, 1000க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்தது ஏன் என்ற கேள்வியை நாம் நாட்டின் முதுபெரும் முதலமைச்சரிடம் எழுப்பலாம். ஆனால் காவல்துறைத் தலைவரிடமாவது, நகர ஆணை யரிடமாவது கேளுங்கள்; நான் மருத்துவ மனையில் இருக்கிறேன் என்பார் அவர்.

சுப்ரமணிய சுவாமி மீதான தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்ய, உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை அதிகாரிகளும் திரளான காவலர்களும் சென்றனர். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் மீறி, வழக்கறிஞர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டினர் காவலர்கள். சுப்ரமணியன் சுவாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்த பின்னரே தங்களைக் கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியதை அலட்சியம் செய்தனர் காவல் அதிகாரிகள். வழக்க றிஞர்களை அடித்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வெளியேறினர். அதில் வழக்குப் பதிவு செய்யப்பட்£த வழக்கறிஞர்களும் இருந்தனர். அதோடு காவல் அதிகாரிகளும் திரும்பி வந்திருந்தால் நிலைமை அடங்கியிருக்கக் கூடும். ஆனால் எஜமானர் இட்ட கட்டளையை நிறை வேற்றாமல் வரமுடியுமா? மேலும் நான்கு பெண் வழக்கறிஞர்களைக் கைது செய்வோம் என்று காவல்துறையினர் தெரிவித்த போதுதான் மோதலுக் கான சூழ்நிலை உருவாகியது.

சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநில காவல் துறைத் தலைவர் ஜெயின் ஆகியோ ரின் கட்டளைகளுக்காக, குவிக்கப் ட்டிருந்த காவலர்கள் துடிப்பாய் காத்திருந்தார்கள் கையில்தடிகளுடன். சட்ட விரோதமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்து, அதிரடியாக வழக்கறிஞர் ளைக் கைது செய்ய, காவலர்கள் காட்டிய தீவிரம், வழக்கறிஞர் களுக்குக் கொதிப்பை உருவாக்கியது. அமைதியான முறையில், வழக்கறிஞர் கள் உறுப்பினராக உள்ள சங்க நிர்வாகிகளிடமோ, அல்லது இந்திய வழக்கறிஞர் சம்மேளனத்திடமோ பேச்சு வார்த்தை நடத்தி வழக்கறிஞர் களை கைது செய்திருக்க முடியும். அப்படிப்பட்ட முயற்சிகள் எதையும் கருணாநிதியோ, ராதாகிருஷ்ணனோ, ஜெயினோ முன்னெடுக்காமல் விட்டதற்கு ஒரு ஆழமான காரணம் உண்டு. ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் வழக்கறிஞர்களை ஒடுக்க வேண்டும் என்பதே அது!

Police Attack காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்படுத்திய மோதல் சூழலை, ஊடகங்கள் ஒளிபரப்பிய நேரடிக் காட்சிகளைக் கண்டவர்களால் புரிந்து கௌள முடியும். 20 வழக்கறிஞர்களைக் கைது செய்து கொண்டு சென்ற பிறகும் ஏன் காவலர்கள் நீதி மன்ற வளாகத்திற்குள் குவிக்கப்பட்டார்கள்? தாக்குதல் நடத்த ஆணைகளை எதிர்பார்த்தபடி காத்திருந்த காவலர்களை வெளியேறும்படி வழக்கறிஞர்கள் கூச்சலிட்டனர். சிலர் கல்லெறிந்தார்கள். பதிலுக்கு காவலர்களும் கல்லெறிந்தனர். நீதி மன்ற வளாகத்திற்கள் இருபெரும் படையணிகள் மோதலுக்குத் தயாராவது போலிருந்தது அது. இளம் வழக்கறிஞர்கள் சிலர் காவலர்களை வெளியேறும்படி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். எதிரே திரளாக தடிகளுடன் நின்று கொண்டிருந்த காவலர்கள் அதிகாரிகளின் ஆணைக்காக காத்திருந்தனர். கிரா மங்களில் நடக்கும் சாதிச் சண்டை யையத்ததாக அது இருந்தது.

திடுமென அது நிகழ்ந்தது. பின்னாலிருந்த காவல் துறை உயரதிகாரிகளின் ஆணையைக் கேட்டவுடன், கையிலிருந்த தடிகளை உயரே தூக்கிக்கொண்டு ஓங்காரத்துடன் கூச்சலிட்டபடி வழக்கறிஞர்ளைத் தாக்க காவலர்கள் ஓடினார்கள். கொலைவெறியுடன் ஆயுதங்களுடன் ஒடிவந்த காவலர்களைக் கண்டு நீதிமன்றத்தின் நான்கு திசைகளிலும் சிதறி ஓடினார்கள் வழக்கறிஞர்கள். முயல்களை விரட்டிக் கொண்டு ஓடும் வெறிநாய்களைப் போல காவலர்கள் வழக்கறிஞர்களை விரட்டிக் கொண்டு ஓடினர். கையில் சிக்கியவர்களின் தலையை குறிவைத்துத் தாக்கினர். கண்ணில் சிக்கியவரையெல்லாம் கைத்தடியால் அடித்துச் சிதைத்தனர். வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதி மன்ற அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், வழக்குக் காரணமாக நீதி மன்றத்திற்கு வந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அலறித் துடிக்கத் துடிக்கத் தடிகளால் அடித்து நொறுக்கினர். இரக்கமற்ற ரவுடி களின் கொலைவெறித் தாக்குதல் போலிருந்தது அது. அடிக்குப் பயந்து சுவரின் மேல் ஏறிநின்ற வழக்கறிஞர் ஒருவரை, இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் கீழிருந்து கல்லால் எறிந்த கொடுமையை நாடே பார்த்தது.

காவலர்களின் கையில் சிக்கியவர்கள், தாக்க வேண்டாம் எனக் கெஞ்சியவர்கள், தப்பி ஓடுகையில் தடுக்கி விழுந்தவர்கள், ஓட இயலாதவர்கள், ஒளிந்தவர் கள் என அனைவன் தலைகளைக் குறிவைத்து தாக்கினார்கள் காவலர்கள். பெரும்பாலான வழக்கறிஞர்களின் மண்டை உடைந்து இரத்தம் ஒழுக அங்குமிங்கும் ஓடியதை விவரிக்க வார்த்தைகளால் இயலுமா? ஊழலும் ஒழுக்கக்கேடும் நிறைந்து பிதுங்கம் தமிழ்நாடு காவல்துறை காவலர்கள், காலம் காலமாக தமிழகக் கிராமங்களில், ஆதரவற்ற ஏழை எளிய சேரி மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்டதையெல்லாம் அடித்து நொறுக்கிக் காலித்தனம் செய்யும் போதெல்லாம் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்ததால்தான் என்னவோ, உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் வாகனங்களைத் தேடித் தேடி அடித்து நொறுக்கி னார்கள் காவலர்கள். இரண்டு சக்கர வாகனங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. வன்மம் நிறைந்த உடம்புகளோடு, தெறிக்கும் கண்களுடன் கையில் Ôலத்திÕ யுடன் வெறிபிடித்துத் திரிந்த காவலர்களைக் கண்ட உயர்நீதிமன்றமே நடுங்கியது.

தாக்குதலுக்குப் பயந்து உயிர் தப்பித்துக் கொள்ள தலைமை நீதிபதியின் அறைக்குள் ஓடி ஒளிந்தனர் வழக்கறிஞர்கள். நடந்து கொண்டிருக்கும் தாக்குதலைக் கேள்விப்பட்டு நேரில் கண்டறிய வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் கடுமையாகத் தாக்கப்பட்டார். தான் ஒரு நீதிபதி என்று கதறியபடி சொல்லிய போதும் காவலர்கள் அடியை நிறுத்தவில்லை. தலைமை நீதிபதி முகோபாத்யா உட்பட லத்தி அடிக்குப் பயந்து ஓடி ஒளிந்த கொடுமை நடந்தது. காவல்துறை எத்தகைய கொடிய ரவுடிகளைக் கொண்டிருக்கிறது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்போதாகிலும் உணர்ந்து கொண்டிருப்பார்கள். மாநிலத் தலைநகரில் அனைத்து ஊடகங்களும் நேரலை ஒளிபரப்புகிறார்கள் என்று நன்றாக அறிந்திருந்தும், அத்தகையத் தாக்குதலை நடத்துகிறார்கள் என்றால், கிராமங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத சேரிகளில் எப்படிப்பட்ட ஒடுக்குமுறையைக் காவலர்கள் நடத்தியிருப்பார்கள் என்று நீதிபதிகள் சிந்திக்க வேண்டும்.

மிகப்பெரும் கலவரச் சூழலை திட்டமிட்டே உருவாக்கி, பழிவாங்கியிருக்கிறார்கள், சென்னை மாநகர காவலர்கள். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய தடியடித் தாக்குதலை நிறுத்திவிட்டு, உயர்நீதிமனற் வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வாய்மொழி ஆணையிட்ட பின்னரும், காவல்துறையினர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறவில்லை. சேம்பர்களுக்குள்ளும், பாரிமுனைத் தெருக்களிலும் வழக்கறிஞர்களை ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட அவமானத்தை சென்னை வழக்கறிஞர்கள் ஒருபோதும மறக்க மாட்டார்கள்.

மாநில காவல்துறை தலைவருடனும், மாநகர காவல் ஆணையரிடம், மாநில தலைமைப் புலனாய்வு அதிகாரியிடமும் நேரடி ஆலோசனை செய்த பிறகே பெரும் திரளான காவல் படையை ஆயுதங்களுடன் அனுப்பிவைத்தார் கருணாநிதி. சுப்ரமணிய சாமியிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கட்டளையிட்டார். அவரது கட்டளையின்படியே அனைத்தும் நடந்தன. ஆனால் தாக்குதல் நடந்த அன்றே, வயது முதிர்ந்த அந்த பழம் பெரும் தலைவர் கபட நாடகம் ஆடத் துணிந்தார். ஆம்புலன்சிலாவது வந்து சந்திப்பதாக தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். அதையே அறிக்கையாகவும் தந்தார். ஆனால் காவல் அதிகாரிகளோடு கூட்டுச் சதி செய்த அவரது நாடகம், அவர் அளித்த இரண்டாம் நாள் அறிக்கையில் அம்பலமானது. காவல்துறை யினரும் வழக்கறிஞர்களும் சமாதானமாகப் போகவில்லை யெனில், மருத்துவ மனையிலேயே உண்ணாநிலை இருக்கப்போவதாக அறிவித்தார். வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்நாளிலேயே சந்தித்திராத அந்த கொடூரத் தாக்குதலை மறந்து, காவல்துறை யினரோடு சமாதானமாகப் போகவில்லை யெனில் நான் உண்ணாநிலை இருப்பேன் என்று மிரட்டுவதற்கு கருணாநிதியால் மட்டுமே முடியும்.

Police Attack ஈழ இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டமாக மாறறி, மத்திய அரசைப் பணிய வைக்கத் துப்பில்லாத கருணாநிதி, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற் காக நடைபெற்றுவரும் கொஞ்ச நஞ்ச போராட்டங் களையும் நசுக்க இது போன்ற நான்காம் தர முயற்சி களைச் செய்கிறார். ஆனால் உறுதியாகச் சொல்வோம்! இம்முறை காவலர்கள் அடித்த ஒவ்வொரு அடிக்கும் கருணாநிதி பதில் சொல்லியாக வேண்டும். அடித்த காவலர்களும், ஆணையிட்ட அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கறிஞர்களின் தன்மானப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள அந்தத் தாக்குதல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலைக கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. இந்திய வழக்கறிஞர்கள் சம்மேளனம் (ஙிசிமி) தாக்குதல் நடத்திய காவல் துறையினரை வன்மையாகக் கண்டித்துள்ளது. சென்னையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் வழக்கறிஞர்கள். அரசு வழக்கறிஞர்கள் தாக்குதலைக் கண்டித்து பதவியை துறக்க ஆரம்பித்துள்ளனர். நிலைமை இவ்வாறு தீவிரமாகும் நிலையில் ஒப்புக்குக் கூட தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி ஒருவரைக் கூட இடைநீக்கம் செய்ய கருணாநிதி முன்வரவில்லை.

வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டிக்கத் துணிந்த ஜெயலலிதா வழக்கம் போல் கருணாநிதி ஆட்சியைக் கலைக்கக் கோரிக்கை வைத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் களங்கமில்லாமல் இருந்த காவல்துறையை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் ரவுடிகள் துறைÕயாக மாற்றி விட்டார் கருணாநிதி என்கிறார். நக்சுப் பாம்பொன்று கக்கும் விஷம் போல் உள்ளன அவர் வார்த்தைகள். தனது வார்த்தைக்குக் கட்டுப்படாத எவரையும், ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், அச¤ரியர்கள் பத்தி¤ரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயகவாதி கள் என அனைவரையும் அடித்து நொறுக்கி, ஒடுக்கிய ஜெயலலிதா இதே காவலர்களைக் கொண்டுதானே அய்ந்தாண்டு கால எதேச்சதிகார ஆட்சி நடத்தினார்.

குடிநீருக்காக, கூலி உயர்வுக்காக, சாலைகளுக்காக, பேருந்திற்காக வேலை வாய்பிற்காக வீதிகளில் திரண்டு, ஜனநாயக வழியில் போராடும் மக்களை கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கும் துணிச்சலை காவலர்களுக்கு உருவாக்கிவிட்டது. ஜெயலலிதாதானே! ஜனநாயக நாட்டில் போராடும் மக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று வெட்கமில்லாமல் பேசும் துணிச்சல் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கு வரும். இரும்புக் கரம் என்று அவர் சொன்னது உருண்டு திரண்ட அவரது கைகளையா! இல்லை ஏவல் நாய்களாக வேலை செய்யும் காவலர்களையா! தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கம் கிராமத்தில் சேரி மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து காவலர்கள் சூறையாடியபோது, இவர்தானே முதலமைச்சர். ஒன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைப்பது போல, வழக்கறிஞர்களையும் ஜெயலலிதா ஏமாற்ற முடியுமா? வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலுக்காக அவர், கருணாநிதியை பதவி விலகச் சொல்லுவது, பிணம் தின்னும் கழுகை விரட்டும் ஓநாயின் உளறலுக்கு ஒப்பானது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் சீருடை அணிந்த ரவுடிகளால் சென்னை உயர்நீதிமனற் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைப் போன்றதொரு நிகழ்வு நடைபெற்ற தில்லை. அத்தகைய தாக்குதலைக் கண்டித்து ஒரு வார்த்தை வட பேசாமல் இந்திய நாட்டின் தலைமை நீதிபதி கள்ள மவுனம் காட்டி வருகிறார். வழக்கறிஞர் களோடு, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்திருக்க வேண்டிய தலைமை நீதிபதி அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் நிலைமைகள் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்குச் சாதகமாக இல்லையென்றே தோன்றுகிறது. இரண்டு மாத காலமாக நீடித்து வந்த வழக்கறிஞர் களின் ஈழத் தமிழர் வேலை நிறுத்தத்தைச் Ôசட்ட விரோதமானதுÕ என்று ஏன் அற¤விக்கவில்லை எனக் கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. வழக்கறிஞர்களின் யூகங்களின் படியே கலவரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த முகோபாத்£ய அளித்தி ருக்கும் அறிக்கை முக்கியப் பங்காற்றப் போகிறது.

தற்போது மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷனை நியமித்துள்ளது. முதற்கட்டமாக இரண்டு இணை கமிஷ்னர்கள், மூன்று துணை கமிஷ்னர்களை சென்னைக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய உத்தரவு இட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் காயத்திற்கு போதுமான நிவாரணம் கிடையாது. உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் முடிவுகளும் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை தடுக்கக்கூடும். ஆனாலும், நீதிமன்ற அலுவலர்கள், அவர்களின் வாகனங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கிய காவர் துறையினரைக் கண்டிக்க இந்தியத் தலைமை நீதிபதி தயக்கம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசிற்கு அறிவிக்கப்படாத ஆயுத உதவி களையும் அளித்து தமிழ் மக்கள் விரோத ஒப்பந்தத் தையும் செய்து கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள் மீது நீதிமன்றங்களில் விசாரனை நடந்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்க்க வழக்கறிஞர்கள் முன்வரவேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தியதன் மூலம், காவலர்களுக்கு இணையான வன்முறையாளர்களாக வழக்கறிஞர்கள் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சித்தரிப்புகள், காவல்துறையினரின் ரவுடி மன நிலையை ஒழித்துக் கட்டுவதற்கு ஒருபோதும் பயன்படாது. தங்களின் அனைத்து வன்முறைகளுக்கும் காவலர்கள் கூறும் ஒரே பதில் சட்டம் ஒழுங்கு. அந்த சட்டம் ஒழுங்கை காவலர்கள் எவ்வாறெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதை நீதிபதிகளுக்கு உணர வைக்கும் ஆற்றல் வழக்கறிஞர்களிடமே உண்டு. அத்தகைய முயற்சிகள்தான், ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கூட்டுச் சேர்ந்து அப்பாவி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை முறிக்க முடியும்.

தீவிரவாதிகள் தாக்குதல் உலகளாவிய பயங்கர வாதம் என்று சொல்லிக் கொண்டு, காவல்துறையை அதிநவீன ஆயுதபாணியாக மாற்ற, பல்லாயிரம் கோடி திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்க்ளை ஒரே இணையத்தில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மூலம் இந்திய அளவில் காவல் துறையை ஒருங்கிணைக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நம்புகிறார். அவரது நம்பிக்கை அற்பத்தனமானது.

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பராமரித்துவரும் காவலர்கள், அடிப்படை மனிதத் தன்மையற்ற, மனித நாகரீகத்தை மதிக்காத கும்பலாக இருந்து வருகிறார்கள். கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியில், காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அந்த உண்மை விளங்கும். ஊழலும் ஒழுக்கக் கேடும் திறமைக் குறைவும் உடல் பலவீனமும் கொண்ட காவலர்களை திருத்தும் வேலையை சிதம்பரம் முதலில் தொடங்க வேண்டும். சாதி,மத வெறியுணர்வு நிலையிலிருந்து காவலர்களை மீட்க வேண்டும். காவலர் களுக்கென்று தனிக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, காவலர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூகத் தளத்தில் உள்ள பெரும் குறைபாடுகளைக் கண்டறியும் சமூக அரசியல் அறிவு காவலர்களுக்கு ஊட்ட வேண்டும். உலக நாடுகள் எல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிககும் அக உணர்வு காவலர்களுக்குள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பெண்களையும் குழநதைகளையும் நலிந்த மக்களையும் மதித்து பழகும் பண்பு காவலர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். உலகளாவிய மனித உரிமைகள், நவீன ஜனநாயக மரபுகள், சிந்தனைப் போக்குகள் அனைத்தையும் அறிந்தவர்களாக நாட்டின் காவலர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இல்லையேல், எத்தனை நவீன ஆயுதங்களை வழங்கினாலும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்கதலைக் கண்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி, தனது கைத் துப்பாக்கியையும் கூடவே துருத்தித் தள்ளிய தனது தொந்தியையும் நீட்டிக்கொண்டு மிரட்டிய டி.ஜ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்ற கோமாளிகளையே சிதம்பரத்தால் உருவாகக் முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com