Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
கண்ணீர் வணக்கம்

விதைகளாய் மண்ணில் விழுந்து மறைந்த
புலிகளே! உங்கள் பாதம் வணக்கம்- வீரக்
கதைகளாய் எங்கள் நெஞ்சில் நிறைந்த
புயல்களே! எங்கள் கண்ணீர் வணக்கம்!

அனல் மழை என குண்டுகள் பொழிந்து
ஆயிரமாயிரம் எறிகணை சொரிந்து
பசியெனும் புதுவகை ஆயுதம் தரித்து
பகைவனால் அழியுண்ட மக்களே வணக்கம்!

புதைகுழி யாவும் விதைகுழியாகும்-எம்
பூமியில் மறுபடி பூக்களும் பூக்கும்
தலைமுறை உங்கள் கனவினைக் காக்கும்-விழி
மலர்ந்துமே உங்கள் கல்லறை பாடும்!

கடந்த 3 வருடங்களாக சிங்கள இனவாதம் தொடுத்த போரினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட, அல்லலுற்ற லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்களுடன் சமூக விழிப்புணர்வு தனது துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.