Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூலை 2007
நூல் அறிமுகம்

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

"பண்டிதர்களின் தமிழை பாமரர்களின் தமிழனாக்கினான். அத்தமிழின் கையைப் பிடித்து பாமரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து சேர்த்தான் என்பது வழக்கமாக பாரதிக்கு அவர் சீட கோடிகள் வைக்கும் ஓபனிங் ஷாட். அது உண்மையானால் வயக்காடுகளில், வரப்புறங்களில் ஓங்கிய பனை உச்சியில் விரிந்த கடல் பரப்போரங்களில் ஓயாத உழைப்பினூடே பாடும் பாமரனுக்கு பாட்டெழுதினார்களே. பாட்டைச் சொல்லிக் கொடுத்தார்களே அவர்களெல்லாம் யார்? அவர்கள் கற்றவர்கள் இல்லை, எனவே கவிஞர்களும் இல்லை. அப்படித்தானே.

ஆனால், இவர்கள் சொல்வது போல் மக்களுக்காக பாட்டெழுதிய பாரதி எங்கே எழுதினார்? படிப்பு மறுக்கப்பட்டதால் நூற்றுக்குத் தொன்னூறு பேர் தற்குறிகளாக இருந்த ஒரு தேசத்தில் படிப்பாளிகளும், வாசகர்களும் அக்ரஹாரங்களில் மட்டுமே நிரம்பி வழிந்த, சென்ற நூற்றாண்டில் அவர்களையே இலக்கு மக்களாக்கி நடத்திய சுதேசிமத்திரன், இந்தியா, விஜயா பத்திரிகைகளில்...''

பதிப்புரையில் தீ ஸ்மாஸ் டி செல்வா

ஆசிரியர்: மருதையன்,
வே.மதிமாறன்
வெளியீடு: குடியரசு பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு

நூல் கிடைக்குமிடம்:
12/1, முகமது உசேன் சந்து,
ராயப்பேட்டை, சென்னை 600 014.
பக்கங்கள்: 64 . விலை ரூ.25.
போன்: 9444337384 டார்வின்தாசன்

சச்சார் குழு அறிக்கை

சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, சேகரித்துள்ள முக்கியத் தரவுகள், முன்வைத்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.

சிறுபான்மையினர் பிரச்சனைகளில் ஆழ்ந்த அக்கறையும் விரிந்த எழுத்தனுபவமும் உள்ள அ. மார்க்ஸ், சச்சார் குழு அறிக்கையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதன் பரிந்துரைகளை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகள் குறித்த அறிஞர்களின் விமர்சனப் பார்வைகளையும் தொகுத்துள்ளார்.

1960 முதல் இந்திய முசுலீம்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள், சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத்திட்டம் முதலான இத்துடன் பின்னிணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள் சுதந்திரத்திற்குப் பிந்தைய முசுலீம்களின் நிலையை புரிந்து கொள்ளவும், உரிய கோரிக்கையை இன்று முன்வைக்கவும் பன்மைத்துவத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் உதவும்.

ஆசிரியர் : அ. மார்க்ஸ்
வெளியீடு : எதிர் வெளியீடு
கிடைக்குமிடம் :
305, காவல்நிலையம் சாலை,
பொள்ளாச்சி - 1
போன்: 04259 226012
பக்கம் : 139 விலை @ ரூ. 100

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதில்லை

"எங்களுக்கு கொக்கோ கோலோ வேண்டாம்
ஆற்றைக் கொடு.
எங்களுக்கு வலைகள் வேண்டாம் கடலைக் கொடு.
எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்
விவசாயத்தை கொடு.
எங்களுக்கு விபூதி வேண்டாம்
கருவறை கொடு.
எங்களுக்கு தரிசனம் வேண்டாம்
தில்லைக் கோயில் கொடு.
சொர்க்க வாசல் வேண்டாம்
சிறீரங்கம் கொடு.
எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்
அதிகாரம் கொடு''

ஆசிரியர்: துரை. சண்முகம்
வெளியீடு : மக்கள் கலை இலக்கிய கழகம்
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை, சென்னை - 2 போன் : 28412367
பக்கங்கள் @ 40 விலை @ ரூ. 15


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com