Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஆகஸ்ட் 2007
நூல் அறிமுகம்

தமிழகத்தில் தீராத காவிரி நதிநீர் பிரச்சினை குறித்த குறிப்பிடத்தக்க நூல்

காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பினை அழகுற முக்கிய பகுதிகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

காவிரி வழக்கில் பன்னாள் மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள், ஒப்பந்த மீறல்கள், நடுவர் மன்ற ஆணை என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி தொடர்பான ஒரு ஆவணமாக இந்நூல் இருக்கும். நூல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தமிழில் வழக்றிஞர் எஸ்.நாகரன் பக்கங்கள் 96. விலை ரூ.50

வெளியீடு:
கருத்துப் பட்டறை
எண்2, முதல் தளம், மிதேஸ் வளாகம், 4வது நிறுத்தம், திருவாசகர், மதுரை.625006.
பக்கங்கள்: 96,
விலை: ரூ.50/
அலைபேசி: 9842265884

மான்சான்டோ விதைகளை எதிர்த்தும், அதன் பின்னணி குறித்தும் வெளி வந்துள்ள புதிய நூல்

இந்திய பாரம்பரிய விவசாயம், மரபணு மாற்று விதைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், எனத் தெரிவிக்கும் நூல்.

விவசாயிகள் விழிப்புணர்வு அடைய வேண்டிய அவசியம் பற்றியும் நூல் தெரிவிக்கிறது.

விவசாயிகளே விழுத்தெழுங்கள்.
ஆசிரியர்: இரா.ரவிக்குமார்,
வெளியீடு: கொங்கு மண்டல ஆய்வு மையம்,
உடுமலைப்பேட்டை.
பக்கங்கள்: 48.
விலை: ரூ.25.
போன்: 9894078256

அமர்த்தியா சென் இன்னும் ரீதியான ஒரு சமூகத்தை நோக்கி

பொருளாதார வளர்ச்சி குறித்த ஒட்டுமொத்தச் சராசரி அணுகல் முறையை சென் ஏற்பதில்லை. மொத்த தேசிய உற்பத்தி, சராசரி வருமானம் முதலான பொதுச் சராசரிகளின் மூலம் ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சியை அளக்க இயலாது. சென் முன் வைப்பது ‘தகுதியாக்கும் அணுகல் முறை'. மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சொல்கிற பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிப்பதோ, வெளிநாட்டு மூலதனம் வந்து குவிவதோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் மூலம் தொழில் மயமாவதோ, உயர்தொழில்நுட்பம் வளர்வதோ மட்டும் ‘வளர்ச்சி'க்கான அடையாளங்கள் அல்ல. வெறும் பொருளாதார அதிகரிப்பைக் காட்டிலும் வேறு பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதே வளர்ச்சி. வேறுபட்ட மனிதச் சாத்தியங்களில் கண்ணியங்களும் மக்களுக்குத் தடையின்றிக் கிடைக்கும் வகையில் அவர்களைத் திறனுடையவர்களாக்குவதே உண்மையான வளர்ச்சி.

ஆசிரியர்: அ.மார்க்ஸ்.
வெளியீடு: எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி642001.
பக்கங்கள்: 24 விலை: ரூ.10/
போன்: 04251.226012, 9865005084.

போபால் விஷவாயு படுகொலைகள்

ஒரு பிசாசைப் போல நகரத்தின் மக்களையெல்லாம் ஒரே ராத்திரியில் துரத்திக் துரத்திக் கொன்றது போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு. உண்மையில் இது விபத்துதானா?

இந்த நிமிடம் வரை தலைமுறை தலைமுறையாக, துயரங்களையே பரிசாக தந்து கொண்டிருக்கும் அந்த விபத்து நடந்து 20 ஆண்டுகள் கழிந்த பின்னும், கடும் பாதிப்புகளில் நொடிந்து கிடக்கும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இது போபால் துயரத்தைவிட கொடுந்துயரம்.

இந்த நூல் யூனியன் கார்பைடு கம்பெனி அந்த எளிய மக்களுக்கு வழங்கிய அவலமான பரிசையும், அதை எதிர்த்து அவர்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களையும் பேசுகிறது.

நூல்: போபால்
பக்கங்கள்: 32, விலை: 15
வெளியீடு: வாசல்
40 டி/4, முதல் தொளு வசந்தநகர்,
மதுரை62500
பக்கங்கள்: 32, விலை: ரூ.15/
போன்: 9842102133


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com