Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஏப்ரல் 2009
‘அன்னை’க்குப் பாடம் புகட்ட ‘அம்மா’வுக்கு ஓட்டு...!?
தீசுமாசு டி செல்வா

வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் கொடூரமாகத் தாக்கும் தமிழக அரசின் சீருடைக் குண்டர்கள்,
விசைத்தறி, பட்டறை தொழில்களைக் காலி செய்து பொழப்பக் கெடுத்த ஆர்க்காட்டாரின் மின்வெட்டு,
அம்பானி சகோதரர்களின் சம்பாதனை குறைந்து விடக்கூடாதென நிறுத்தி வைக்கப்பட்ட சிதம்பரத்தின் பெட்ரோல் விலை குறைப்பு,
சிறு வியாபாரிகளை தள்ளுவண்டிக்காரர்களாகவும், தள்ளுவண்டிகாரர்களை நடைபாதை வியாபாரிகளாகவும் தகுதி இறக்கம் செய்து விட்ட ரிலையன்ஸ் ஃபிரெஷ்,
விவசாயிகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம்...
மன்மோகன், கருணாநிதி கும்பலை விரட்டியடிக்க இவை போதுமானவைதாம். கெடுவாய்ப்பாக இவையெல்லாம் இத்தேர்தலில் பின்னுக்குப் போய், கடைசியில் காணாமலே போய்விட்டன.
‘ சமூக விழிப்புணர்வு’ கடந்த சில ஆண்டுகளில் அது குறித்த பல சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதால் தற்போதைய தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக மாறிவிட்ட ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு சிறு விவாதமாக கேள்வி பதில் வடிவில் இங்கே தருகிறோம்.

Jayalalitha and left parties 'அன்னைக்குப் பாடம் புகட்ட ’அம்மா’வுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்களே....

தேர்தல் முடிஞ்ச பிறகு ’அம்மா நடத்தப் போகும் பாடத்தை கைகட்டி, வாய் பொத்திக் கேட்கச் செவியுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள் தாராளமாக அம்மாவுக்கு ஓட்டுப் போடலாம்.

பழசை மறந்தவர்கள் பாடம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள தா. பாண்டியன், வரதராஜன் போன்ற காம்ரேடுகளை அணுக வேண்டும். தற்சமயம் சீட்டுக்காகப் போயஸ் கார்டன் வாசலில் ராப்பகலாய் அவர்கள் படுத்துக் கிடப்பதால் கட்சி அலுவலகத்தில் சந்திக்க இயலாது. ஒரு வாரமோ பத்து நாளோ பொறுத்தபின் முயற்சிக்கவும்.

“கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும்” என ரெட்டைக்குழல் துப்பாக்கியாய் முழங்கிய தங்கபாலுவும், ஜெயலலிதாவும் ஏன் வேறு வேறு கூட்டணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்?

இந்துத்துவா, மதமாற்றத் தடைச்சட்டம், பார்ப்பனியத் திமிர் அனைத்திலும் ஒத்த கருத்தும், ஒரே செயல்பாடும் கொண்ட சங்கராச்சாரி ஜெயேந்திரனும், ஜெயலலிதாவும் எதிரெதிர் முகாம்களில்தானே உள்ளனர்! அஜெண்டாவில் என்ன பின்னடைவு ஏற்பட்டு விட்டது?எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு, இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல்.

காங்கிரஸ் கூட்டணிக்குப் போன திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பேசுவார்?

இலங்கையின் இறையாண்மை குறித்து கண்ணீர் விடும் இந்தியா, சீனாவின் இறையாண்மை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதற்காக தலாய் லாமாவுக்கு தினமும் கிடா வெட்டு விருந்து வைப்பதை ஆதாரங்களுடன் மேடைதோறும் அம்பலப்படுத்துவார். அய்ரோப்பிய ஓடுகாலி என்.ஆர்.ஐ.களின் மயிரைப் பிடுங்குற டர்பன் மேட்டருக்காக, எந்திரிக்க முடியாத நிலையிலும் சர்கோசியைப் பார்த்து பிராது கொடுத்த மன்மோகனை சந்திக்கிழுத்து வசை பாடுவார்.

காங்கிரசுக்காரன் கடுப்பாகி, கட்டையைத் தூக்கிக் குறுக்கே போட்டால் அப்படியே குப்புறப்படுத்துக் கொள்வார். சிறுத்தை பயந்து புதருக்குள்ளே ஓடி பதுங்கி விட்டது என நாம் அவதூறு சொல்லக்கூடாது. 67 இல் காமராசர் சொன்ன ’படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் திட்டமாகவும் இருக்கக்கூடும்.

பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியது எதற்காக?

சத்தியமா ஈழத் தமிழர் பிரச்சனைக்காகத்தான். தட்டிக் கேட்காத மன்மோகன், தட்டிக் கொடுக்கும் பிரணாப், கள்ளத்தனமாக வழிநடத்தும் சோனியா, வாய்க்கொழுப்பெடுத்து திரியும் இளங்கோவன், சிதம்பரம்... கும்பலை எதிர்த்து அல்ல; பதவியைப் பறித்துவிடக்கூடாதென நாற்காலிக்குப் பின்னே பம்மிக் கொண்டிருக்கிறாரே... கருணாநிதி! அவரை எதிர்த்துதான் அணி மாறியிருக்கிறது பா.ம.க.

அதாவது, புருசன் அடிச்சது தப்பில்லை; கொழுந்தன் சிரிச்சதுதான் பிரச்சனையாம்! ஈழப் பிரச்சனையில் அய்யா எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் லட்சணம் இப்படித்தான். எல்லோரும் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கும் பந்தயத்தில் கருணாநிதியை மட்டும் ஜட்டி போட்டுக்கொண்டு ஓடச் சொல்கிறார் தமிழ் குடிதாங்கி மருத்துவரய்யா.

‘சேலை கட்டிய முசோலினி சோனியா’ என்பது இறையாண்மைக்கு எப்படி எதிராகும்?

கற்பு, ஒழுக்கம் இவைகளை பெண்களின் சேலைக்குள் ஒளித்து வைத்திருப்பதுதான் நம்ம ’கலாச்சாரமே! தேசத்தை ஒரு பெண்ணாக உருவகிப்பதால் இறையாண்மையும் அங்குதான் இருக்க வேண்டும். அந்த ‘நம்பிக்கையால்’தான் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பாரத மாதாவைத் தேடினார் நம் ‘தமிழினத் தலைவர்’. இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் அத்தலைவரின் சீடகோடியாக இருந்தவரல்லவா! சகவாச தோஷத்தால் இந்திய இறையாண்மையை சோனியாவின் சேலைக்குள் தேடிவிட்டார்கள்...

கறுப்பைக் கரைத்து காவியாக்கினார் அம்மா. கதராக்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

தேர்தல் நம்ம உள்ளூர் பிரச்சனை. அதைக் கணக்கில் கொண்டால் இலவச கலர் டி.வியும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் கொடுத்த கலைஞருக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது?

தாராளமாகப் போடலாம். எண்சாண் உடம்புக்கும் பிரதானம் சிரசு அல்ல; வயிறுதான் என்பதை ஒத்துக்கொண்டால்!

செருப்பாலடிச்சாலும் வாய்க்கு ருசியா கறியும் சோறும் ஆக்கிப் போட்டாரே ஆண்டை...! அடிமையா தொடர்வதில் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பும் பண்ணையடிமைகளின் விசுவாசத்தை ஐந்தாண்டுகளுக்கொருமுறை நிறுத்துப் பார்க்கக் கொடுக்கப்படும் வாய்ப்புதான் தேர்தலென்றால் இது மிகச் சரியே!

தமிழீழ ஆதரவாளர்களை கள்ளத் தோணியில் போய் போர் செய்யச் சொல்கிறாரே முதல்வர்?

இவர் பேச்சை நம்பி கள்ளத் தோணியில் ஏறி படையெடுத்துப் போய் பாளையம் இறங்கும் நம்ம ஆட்கள் அங்கே ராஜபக்சேவின் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்டால் பிரச்சனையில்லை. ’அன்னை திருட்டுத்தனமாக அனுப்பி வைத்திருக்கும் இந்தியக் கூலிப் படையோடு மோத நேர்ந்தால்...!

சகோதர யுத்தம் அல்லது பங்காளி யுத்தம் வந்து விடுமே! தமிழினத் தலைவருக்கு அது அலர்ஜி ஆச்சுதே!

கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி வைத்திருக்கிறாராமே விஜயகாந்த்?

கடவுளோடு கூட்டணி வைக்க சிதம்பரம் நடராசன் கோயிலுக்குப் போயிருந்தால் நேரடியாக கடவுளுக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடிச்சுக் கொடுத்திருப்பார்கள் தீட்சிதர்கள். டெல்லிக்குப்போய் காங்கிரசுக்காரன் காலில் ஏன் விழுந்து எழுந்தார்?

Karunanidhi and sonia gandhi சிதம்பரம் போனால் தட்சணை கொடுக்கணும், டெல்லியில் வாங்கலாம் என்பதால் இருக்குமோ!

தமிழ்ப் புத்தாண்டுக்குள் ஈழத் தமிழர்களின் கதையை முடித்துவிட ‘அன்னை’ உத்தரவிட்டிருக்கிறாராமே...?

‘மந்திரி குமாரி என்றொரு படம். கட்டிய மனையாளை மலையுச்சியில் தள்ளிக் கொலை செய்ய’வாராய் நீ வாராய் என பாடியபடியே கூட்டிச் செல்வான் கணவன் என்ற உறவு கொண்ட காதகன் ஒருவன். எதிர்பாராத திருப்பம் அங்கே. கொலைகாரனே கொலையாகிப் போவான்.

பதவிக்காலம் முழுக்க கடிதங்கள் வரைந்தே பிரச்சனைகளை தீர்த்துக் கட்டும் கலைஞர் இந்த விசயத்தில் மட்டும் தனது வழியை மாற்றி, ஒரு காலத்தில் தான் வசனம் எழுதிய மந்திரி குமாரி படப்பெட்டியை பார்சல் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம். வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையை திசை திருப்பியதாம் அரிச்சந்திரா நாடகம். சோனியா காந்தியின் பாதையை ஏன் மாற்றாது மந்திரி குமாரி?

“போர் என்றால் அப்பாவி மக்கள் மேலும் குண்டுகள் விழத்தான் செய்யும்” என ராஜபக்சேவின் கொலைவெறிக்குப் பரணி பாடிய ’அம்மா இன்று ஈழ ஆதரவுப் படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றிருப்பது காலம் செய்த கோலமா?

ஈராக்கிலும், ஆப்கானிலும் மிகப்பெரும் மனித உரிமை மீறலை நிகழ்த்தும் அமெரிக்கச் சண்டியரை ஈழப் பிரச்சனைக்குப் பஞ்சாயத்து பண்ண வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறவர்கள் ’அம்மா தலைமையின் கீழ் அணி திரள்வதில் கேவலம் ஒன்றுமில்லை.

அதே வேளையில் ’ஒரு மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என ஒற்றை வரியில் ஐந்தாயிரம் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தி திமிர் கக்கிய ஒருவரின் கோரச் சாவுக்காக ஒரு இனத்தையே காவு வாங்கத் துடிக்கும் போக்கிரிக் கும்பலுக்கும், இந்தத் தள்ளாத வயதிலும் அவர்களைத் தோள்மேல் தூக்கிச் சுமப்பவருக்கும், ‘அம்மா’ ஏற்று நடிக்கும் புதிய பாத்திரத்தை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை.

'காங்கிரசைத் தோற்கடிப்போம்' வசனம் ’ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவோம்' என்பதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறது?
மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அதைச் சொல்கிறது. எதிரிகளும், துரோகிகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக, ஒரே அணியில் கலந்து விட்டதால் இப்படிதான் சொல்ல முடியும். ஏனெனில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் பிள்ளையானும், கருணாவும்.

துரோகிகளாக இருந்தாலும் ’நம்மாளு எனும் இன உணர்வுடன் நெருங்கலாம் என்றால் அங்கே ஒரு ராஜபக்சேவும் இருக்கிறார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று சிக்கித் தவிப்பவர்கள் ஈழ மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களும்தான். ‘விடுதலையை வென்றெடுக்க தொடர்ந்து ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டும், ஓட்டுச் சீட்டையே ஆகச் சிறந்த ஆயுதமாகவும் முன்மொழிபவர்களுக்கு இந்தச் சிக்கல் கண்டிப்பாக வந்தே தீரும்.

கூட்டணியில் வைகோவுக்கு மட்டும் ஏனிந்த இழுத்தடிப்பு?

எடுக்கிறது பிச்சை; அதுல மொறப்பென்ன வேண்டிக் கெடக்கு? ‘கடைசியா வந்தவனுக்கெல்லாம் சுடுசோறு, எங்களுக்கு வெறும் பழையதுதானா?’ன்னு அழுது அடம்பிடிக்காம, நல்ல பிள்ளையா அம்மா போடுறத வாங்கிக்கனும். புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா சீரு செனத்திய வாங்கிட்டு நடையை கட்டினோமான்னு இருக்கனும், நம்ம ராமராசு அய்யா மாதிரி அத வுட்டுப்புட்டு போன தீபாவளிக்கு சீராட வந்த மருமகப்புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-05-05 06:27:00
porkkaiponds@yahoo.co.in

"எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு, இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல்."

Excellant!

TVS ARUL
2009-05-06 03:27:00
tvsarul@gmail.com

புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா சீரு செனத்திய வாங்கிட்டு நடையை கட்டினோமான்னு இருக்கனும், நம்ம ராமராசு அய்யா மாதிரி அத வுட்டுப்புட்டு போன தீபாவளிக்கு சீராட வந்த மருமகப்புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?

NALLA NAKKAL!

Dr. V. Pandian
2009-05-06 07:10:00
porkkaiponds@yahoo.co.in

Today's News!!!!!!!

பார்த்தார்களா? கருணாநிதியும் சொல்லிவிட்டார் தனி ஈழம் தான் தீர்வு என்று!

கண்கெட்டபின் 'சூரிய நமஸ்காரம்' என்பது இது தான். அவருடைய இந்த முடிவுக்குக் காரணம் இது தான்.

காங்கிரஸ்-திமுக எதிர்ப்பு அலை வெகு பலமாக வீசுகிறது. தேர்தலுக்குப் பின் ஆறு மாதங்களுக்குள் எப்படியும் இவரது ஆட்சி கவிழும் அல்லது கலைக்கப்படும். அந்த தேர்தலில், இதே அலையை வைத்துக்கொண்டு, இதே ஈழ நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அதிமுக அமோக வெற்றி பெரும். காங்கிரஸ் காரனின் காலை இவ்வளவு நாள் கழுவிக் கண்ட பலன் எல்லாம் இல்லாமல் போகும்.

நிதானித்துக் கொண்டார். ஆனால், வெகு தாமதமாக!!!

இருந்தாலும் அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அப்படியே இந்த அலையை மீண்டும் தனக்காக மாற்ற முடியும்.

ஜெயலலிதா தனி ஈழம் என்று சொன்னாரே தவிர, புலிகளின் மீதான தடையை நீக்குவேன் என்றோ, அல்லது புலிகளின் தலைமையில் தான் ஈழம் அமையும் என்றோ சொல்லவில்லை! அவ்வளவு எளிதாக அவர் சொல்லவும் மாட்டார். அது ஒரு பார்ப்பன Agenda!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புலிகளை முற்றாக அழித்துவிட்டு, தனி ஈழத்தை ஏதோ ஒரு கூறுகெட்ட பொம்மையின் தலைமையில் உருவாக்கி, ஈழ மக்களை வளரவிடாமல் தடுப்பது தான் பாரப்பன Agenda!!!!!!!!!!!!!!!!!

கருணாநிதி, காங்கிரஸுக்கு அஞ்சாமல், புலிகளின் மீதான தடையை நீக்குவேன் என்றும், புலிகள் தான் ஈழ மக்களின் ஒரே பிரதிநிதி என்றோ அறிக்கை விட்டால், அப்படியே தமிழ் மக்கள் இவர் பக்கம் சாய வழியுண்டு.

ஈழத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு தமிழனும் புலிகளையும் ஆதரிக்கிறான்.

அப்போது திகைத்து நிற்கும் பார்ப்பனீயம். ரொம்ப தமாஷாகவும் இருக்கும்.

இன்னும் ஒரே வாரம் தான் தேர்தலுக்கு இருக்கின்றது என்றுள்ளபோது, காலம் தாழ்த்தாமல் இப்போதே இவர் சொல்வது நல்லது.

எப்படியும் காங்கிரஸ் கடுமையாக, இந்திய அளவிலும், தோர்க்கப் போகிறது. இனி அவர்களுக்கு அஞ்சிப் பயனில்லை. காங்கிரஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமையப்போவது இல்லை என்பது வௌ்ளிடைமலை.

ராஜ தந்திரத்திலே படு தோல்வியைத் தழுவிய கருணாநிதியே, இப்போதாவது விழித்துக் கொள்வீரா?



Sarvachitthan
2009-05-06 08:14:00
sarvachitthan@gmail.com

As Dr Pandian says, Kalanjar still has time to regain his stand in Tamil Nadu politics, if he would take the right decision on Eelam Tamil issue.Talkings won't help them to survive,but he should take actions.

புதூர் சிபி
2009-05-09 12:46:00
pudursiphy@gmail.com

இலங்கைப்பிரச்சனை நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு பேட்டி கொடுத்துள்ளாரே? மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் விவசாயிகள் 1.5 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு செத்துப்போன பிரச்சனை அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக எழலாம். அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் ஆயுத ஏஜெண்டாகும் மன்மோகன் கனவை இடதுசாரிகள் கலைத்துவிட்டது கூட அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக எழலாம். அலைவரிசை ஒதுக்கீட்டில் இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு 1 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி சுருட்டியதை, அவர் தலித் அதனால் தான் குற்றம்சாட்டுகிறார்கள் என முதல்வர் கருணாநிதி அடித்த கமெண்ட் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக எழலாம்.காங்கிரசை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டுவேன் என்று சொன்ன திருமா, அப்படி செய்துவிட்டால் என்ற புரிதல் கூட தங்கபாலுவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். தனது சொந்த தொகுதி பிரச்சனைக்காக இதுவரை நாடாளுமன்றத்தில் பேசா மடந்தையாக தங்கபாலு இருந்தார்.ஆகவே, அவரை வெற்றிப்பெற விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் உள்குத்து தங்கபாலுவிற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். இலங்கைப்பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்காது என்று கிளி போல தாங்கள் பேசினாலும்," இலங்கைப் பிரச்சனைக்காக என் உயிரையும் தரத்தயார்" எனக்கூறி வாக்கிங் டைம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியின் தந்திரம் தங்களுக்குத் தெரியவில்லையே என்று ஆதங்கத்தில் தங்கபாலு நொந்தபாலாகி இப்படி சொல்லிவருகிறார்.

Karthik
2009-05-09 12:56:00
karthikrhce@gmail.com

Never Never This is PMK's self benifit. That is the mail reason. PMK is not wory about lankan tamil peoples. After lok saba election PMK and Aliance parties face showing .

Puram Boakku
2009-05-09 10:12:00
puramboakku@gmail.com

ஜெயலலிதாவை எந்த அளவுக்கு நம்பலாம் என்று தெரியாது. ஆட்சியில் இல்லாத போதே ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி விட்டு, அடுத்த நாள் காலையில் எல்லா அ.தி,மு,க எம்.பி. களும் ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொண்டு வாக்கு அளித்தது நாம் அறிந்ததே. அதே நேரம் சில விஷயங்களில் அவர் பிடிவாதமாக இருந்து இருக்கிறார்.

ஆனால் இந்த தேர்தலில் முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. அது "ஈழத்தில் அப்பாவி மக்கள் செத்து மடிவது, சோறு தண்ணி இல்லாமல் தவிப்பது இதெல்லாம் சாதாரண விஷயம் தானா? இல்லை மக்களால தாங்கிக் கொள்ள முடியாத விஷயங்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி.

'2004 ம் வருடத்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்ததும் பி.சே.பி கட்சி ஆட்சியை இழந்ததற்கும், காங்கிரெஸ் ஆட்சியை பிடித்ததற்கும் முக்கிய காரணம் தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் தான்' என்றே தேர்தல் அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.

எனவே தமிழ் நாடு எந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சோனியாவுக்கும் நன்கு தெரியும். ஆனால் ஈழப் பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், அதை கலைங்கர் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து, மொழிப் புலமையை வைத்து, கட்சி வலிமையை வைத்து சமாளித்து தங்கள் கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தந்து விடுவார் என்றே காங்கிரெஸ் கருதியிருக்கும்.

பதிலாக கலைங்கரை விட்டு பிரியாமல் அவருடன் கூட்டணியில் இருந்து தமிழகத்தில் அவருடைய அரசே தொடர நாம் உதவினால் போதும், மேலும் கலைங்கர் விரும்பும் மைய அமைச்சர் பதவிகளையும் தருவோம், கலைங்கர் தாங்கள் நம்பக் கூடிய, தங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத உறுதியான நண்பர் என்றே காங்கிரெஸ் கருதியது. அதை ஒகேனேக்கல் குடி நீர் திட்டத்தில் கலைங்கர் பின் வாங்கியதை வைத்து உறுதியாகிய‌து.

அதாவது கலைங்கரை தமிழக மக்களை விட சோனியாவும், காங்கிறேசும் நன்றாக புரிந்து கொண்டு விட்டன.

கலைங்கரோ, நான் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டு விட்டேனே, வண்ணத் தொலைகாட்சி பெட்டி, சமையல் எரி வாயு அடுப்பு இவ்வளவும் வழங்கி விட்டேனே. இதையெல்லாம் வாங்கிக் கொண்ட பின் ஓட்டைப் போட்டு விட்டு போக வேண்டியாய்து தானே, என் குடும்பம் மட்டுமே ஆண்டால் என்ன, ஜெயா என்ன ஒழுங்கா? என்பதாகவே உள்ளது.

என‌வே க‌லைங்க‌ரை ம‌ட்டும் த‌னிமைப் ப‌டுத்தி ப‌ழி கூறுவ‌து ச‌ரியா? என்ற‌ கேள்விக்கு ப‌தில் க‌லைங்க‌ர் தானே த‌மில‌க‌ முத‌ல்வ‌ர், க‌லைங்க‌ர் தானெ மைய‌ அரசின் பிர‌தான‌ காவ‌ல‌ர், க‌லைங்க‌ர் தானே காங்கிரெஸ் கட்சியின் மிக‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்‍, அவ‌ர் நினைத்து இருந்தால் அழுத்த‌ம் குடுத்து ஈழ‌த்தில் நில‌மையை மாற்றி இருக்க‌ முடியாதா என்ற‌ கேள்வியெ!

இந்த‌ தேர்த‌லில் ஜெயாவுக்கு விழும் ஓட்டுக்க‌ள், க‌லைங்க‌ர் ‍‍காங்கிரெச் கூட்ட‌னி ஈழ‌த்தில் ந‌ட‌த்திய‌ திருவிள‌யாட‌ல்க‌ளுக்கு எதிராக‌ விழும் ஓட்டுக்க‌ள்.

இந்த‌ தேர்த‌லில் க‌லைங்க‌ர் எவ்வ‌ள‌வு இட‌ங்க‌லை வெல்லுகிராரொ, அவ்வ‌ள‌வு தூர‌ம், த‌மில‌க‌ ம‌க்க‌ள், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌தை ஒத்துக் கொண்ட‌தாக‌வே அமையும்.

peri
2009-05-10 03:36:00
peri@accessdirectifa.com

Interesting one

Subavee Thaasan
2009-05-10 12:08:00
subaveethaasan@gmail.com

கலையரை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பவரும் இல்லை.கண்டபடி விமர்சிப்பவரும் இல்லை(மேடை நாகரீகம் சிறிதும் இல்லாமல்,வயதிற்கும்,அறிவிற்கும்,அனுபவத்திற்கும் சிறிதும் மதிப்பு கொடுக்காமல் ஏக வசனத்தில் விமர்சனம் செய்வது போல...).
அவரின் மீது எங்களின் விமர்சினத்திற்கும்,உங்களின் விமர்சினத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

அவர் பல விடயங்களில் மாற வேண்டும் என்பதின் அடிப்படையில் அமைந்ததே எங்களின் விமர்சனம்.
அவரை அடியோடு மாற்றிவிட வேண்டும்,அழித்து,ஒழித்து விட வேண்டும் என்பதின் அடிப்படையில் அமைந்திருக்கிறது உங்களின் விமர்சனம்.

கலையர் எது செய்தாலும் அதை நாடகம் என்றும்,தமிழின துரோகி என்றும்,பித்தலாட்டக்காரர் என்றும்,அம்மா எந்த நாடகம் அரங்கேற்றினாலும் அவர் பிடிவாதக்காரி அதனால் நம்பலாம் என்று அவரை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டே(சேது சமுத்துரத்திட்டத்தை ஆதரித்தது பின்னால் எதிர்ப்பது,ஈழம் என்ற வார்த்தையையே உபயோகிக்காமல் அவர்களின் விடுதலை அல்லது சுய நிர்ணயம் பற்றி ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல்,அதை பற்றி பேசாமல்,அதை பற்றி பேசினவர்களை பொடோவில் போட்டு,போர் என்றால் மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது என்று புது வியாக்கியானமும் கொடுத்து இன்று நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் திறனாய்வுப்படி ஓட்டு வங்கிக்காக ஈழ விடுதலை பற்றி பேசுவது) நீங்கள் இப்படி சப்பைக்கட்டு கட்டுவதே மேலே நான் சொன்ன விளக்கத்திற்கு சிறந்த உதாரணம்.

நாங்கள் விரும்புவது நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் வேண்டாம்,கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம்.

இன்றைய சூழ் நிலையில் அம்மா ஆட்சி மட்டும் இருந்திருந்தால் எந்த அளவுக்கு நம்மால் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க முடிந்திருக்கும் என்பதை நிச்சயம் உங்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
மேலும் அம்மா ஆதரவோடு மத்தியில் அமையும் ஆட்சி அமைந்தாலும்,அம்மா ஆட்சி இங்கே அமைந்தாலும் அவர் எந்த அளவுக்கு ஈழ தமிழர் விடயத்தில் பேசுவார் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்,அப்படி பேசுகிற பட்சத்தில் நீங்கள் அதற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டாமல் இருந்தால் சரி...

விடுதலைப் புலிகள் இல்லாமல் ஈழ விடுதலை என்பது இயலாதது என்று கூறி விட்டு அதிமுக விற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி அவர் கட்சியினரே அடிக்கப் பாய்ந்த, அய்யா 'பொடோவில் கைதான' நெடுமாறன் அவர்களுக்கும்,ஓட்டு பிச்சை கேட்டு,அம்மாவிற்கு பயந்து ஈழத்தமிழர் என்ற பெயரை இலங்கை தமிழர் என்று தம் அமைப்பிற்கு பெயர் மாற்றிய,'பொடோ புகழ்' வைகோ அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்பற்றியெல்லாம் விமர்சித்தால் நாங்கள் ஒருகாலத்தில் அம்மா அவர்களையும் விமர்சித்திருக்கிறோம் பேர்வழி என்று ஒன்று,இரண்டு இணையத்தளப் பக்கங்களை காண்பித்து விட்டு செல்வது.

உங்களில் யாருக்கும் ஈழ தமிழர் பிரச்சனையை விட இங்கெ உள்ள ஆட்சியை ஒழித்து விட வேண்டும் என்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பது கண்மூடித்தனமான உங்களின் விமர்சனம் மூலம் தெள்ளத் தெளிவாகவே விளங்குகிறது.
புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும்,இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும்(கருணா வழி தொட்ட சில உறுப்பினர்களை தவிர),ஈழத்தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திராசனிடமிருந்தும் கலையர் மற்றும் சுபவீ அவர்களுக்கு வரும் அழைப்புகளின் மூலம் உங்களின் ஆட்சியை தவிர வேறு ஆட்சியில் இந்த அளவுக்கு ஆதரவை,எழுச்சியை பெற முடியாது என்று கூறுவது மூலம் அவர்களின் ஆதரவு கிடைக்கவே செய்கிறது,ஆனால் உங்களின் கண்மூடித்தனமான விமர்சனங்கள்,எதிர்ப்புகள் நான் மேற்சொன்ன காரணத்திற்கு அடிப்படையாகவே அமைகிறது.

மேலும் சுபவீயைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி உங்கள் எவருக்கும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.அவரை மிகவும் நெருக்கமாகத் தெரிந்தவர் அடிப்படையில் ஒன்றை தெளிவு படுத்தும் கடமை என்னிடம் இருக்கிறது.ஒரு காலத்தில் கலையரையும் விமர்சனம் செய்து(கண்மூடித்தனமாக,கண்டபடி பிதற்றாமல்...)அம்மா அவர்களையும் எதிர்த்து பொடோவில் ஒன்றரை வருடம் சிறைத்துன்பம் அனுபவித்து,எந்த பதவி,பகட்டிற்கும் ஆசை படாமல் வாழும் அவரைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அம்மாவின் ஆட்சி காலத்தில் எல்லாம் பொட்டிப் பாம்பாய் இருந்து கொண்டு அய்யா ஆட்சிக்கு வரும்பொழுது எல்லாம்(கண்டுக்க மாட்டார் இல்லை மிஞ்சிப் போனால் 2 அல்லது 3 மாதம் சிறையில் போடலாம் அதுவும் கூட்டணிக் கட்சிகளுக்காக அவ்வளவு தான் என்ற தைரியத்தில்!?) வேட்டியை மடித்துக் கொண்டு விமர்சனம் செய்யும் உங்களுக்கு நிச்சயமாக இல்லை.சுபவீயைப் பற்றி எதுவும் தெரியாமல் கண்மூடித்தனமாக நீங்கள் விமர்சனம் செய்வதின் மூலமே தெரிகிறது,எதைப் பற்றியும் உங்களின் விமர்சனம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது!?

ஈழத் தமிழர்களுக்காக வீராவசனம் பேசிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து திமுக,அதிமுக,காங்கிரஸ் மற்றும் பிஜேபி எதிராக ஒரு அணியை உருவாக்கியிருந்தால் அதற்குத்தான் எனது ஓட்டு விழுந்திருக்கும்.இதைப் பற்றி விமர்சனம் செய்ய உங்களில் எவருக்கும் தோணவில்லையே...தயவு செய்து ஆக்கப் பூர்வ விமர்சனங்களை முன்வையுங்கள்,அழிவிற்கான விமர்சனங்களை,காட்டு மிராண்டித்தனமான விமர்சனங்களை கைவிடுங்கள்.

காங்கிரஸ் இலங்கைப் போருக்கு மறைமுக ஆதரவாக இருப்பது மறுக்க,மறைக்க முடியாத உண்மையே...அதற்காக 18 எம்.பிக்களை(மதிமுக,சிபிஎம்,பமக மற்றும் காங்கிரஸ் தவிர) திரும்ப பெறுவதன் மூலம் மத்தியில் ஆட்சியை கலைத்து விட முடியும் என்பது இயலாத காரியம் என்பது அனைவருக்கும் தெரியும்(மேலும் மா நில ஆட்சி இழப்பதை உங்களை தவிர எந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும் விரும்ப வில்லை என்பது இன்னொரு செய்தி)அவ்விதம் திரும்ப பெற்றாலும் கம்யூனிஸ்ட் வெளியில் சென்ற பொழுது காங்கிரஸ் தக்க வைத்தது போல தக்க வைத்து விடுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.....
சரி நாங்களும் ஒத்துக் கொள்கிறோம் கலையருக்கு குடும்ப ஆட்சி,பதவி வெறி இருக்கவே செய்கிறது,இதே விமர்சனங்களை அய்யா ராமதாஸ் மீது உங்களில் எவரும் சுமத்தாதது ஏன் என்று தான் தெரியவில்லை!?

1956 முதற்கொண்டு பல தீர்மானங்கள்,போராட்டங்களில் ஈடுபட்டு,1983 இல் தனித்தமிழீழம் தான் தீர்வு என்று முன் மொழிந்து,டெசோ என்பதன் சுருக்கமான தமிழீழ பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி தனித்தமிழீழத்தை ஆதரித்து பின்னாளில் சகோதர யுத்தத்தால் எம்.ஜி.ஆர் விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரிக்க ,கலையரின் ஆதரவாக சிறீசபாரத்தினத்தின் டெசோவை கலையர் ஆதரிக்க,அதற்குப் பிறகு சிறீசபாரத்தினத்தின் கொலைக்குப் பிறகும் திமுக வின் நிலைப்பாடு தனித்தமிழ் ஈழமாகவே இருந்தது,பின்னாளில் பத்மனாபா மற்றும் ராஜீவ் கொலைகள் போன்ற துன்பியல் நிகழ்வுகளுக்குப் பின்பு பல சந்தர்ப்பங்களில்,ஜெயின் கமிஷன் மூலமாகவும் திமுக பல இடர்ப்பாடுகளை சந்தித்து உள்ளது,2 முறை ஆட்சியயையும் இழந்துள்ளது(இப்பொழுது எதிர்ப்பவர்கள்,விமர்சிப்பவர்கள் அப்பொழுது ஒற்றை இடம் மட்டுமே ஜெயித்த திமுக விற்கு ஆதரவளித்துருக்க வேண்டிஅது தானே...).இன்றோ திமுக இருதலை கொள்ளி எறும்பாக இருக்கிறது,கோவி லெனின் தாகத்தில் சுட்டிக்காட்டியது போல அறிவுமதி கூறியது போல ஈழப் பிரச்சனைக்காக எம்.ஜி.ஆர் கொடுத்த தொகை அதிகம்,கலையர் கொடுத்த விலை அதிகம்,இதில் ஒரு சதவீதம் கூட ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாத அம்மாவிற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவது தான் வேதனையாக உள்ளது.

காங்கிரஸ் நிற்கும் இடங்களை தோற்கடிப்போம்,அதற்குப் பதில் அம்மாவிற்கு ஓட்டு என்பது முட்டாள்தனமான காரியமே......
மறுபடியும் கூற கடமைப்பட்டுள்ளேன்,,,,ஆக்கப்பூர்வ விமர்சனங்களை தைரியமாக எந்த காலத்திலும் முன் வையுங்கள்,கண்மூடித்தனமான,அழிவுப்பூர்வனமான விமர்சனங்களை கைவிடுங்கள்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP