தூரன் குணா கவிதைகள்
ஒரு கனவைப் போல்
காலம்
நம் நினைவுகளிலிருந்து தப்புகிறது
ஏறு வெயிலிடை பனித்துளி போலவும்...
கடந்த எதிர்
இரண்டுக்குமிடையே நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு
யுகங்களை ஊடுருவிக்கடக்கும் தாபம்
அரூப வெளியில்
இறைஞ்சுதலாய் அலையத் துவங்குகிறது
விகிதக் கணக்குகள்
வேறுபடத் துவங்குகையில்
பயம் மருவைப்போல் திரள்கிறது
கேள்விக்குறியின் சுழி
கழுத்தில் முயற் கண்ணியாகிறது
ஒவ்வொரு இரவிலும்
உறக்கத்தின் ஆழம்
குறையத் துவங்குகிறது
பிறகு நாம்
வாள் உயர்த்துகிறோம்
அத்தனை பயத்தோடு...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|