Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007
தலையங்கம்

போனவருடம் செத்த ஒரு இலக்கியப்பிணத்தை இன்னும் புதைக்காமல் ஊர்ஊராய் தூக்கிப்போய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, அடுத்ததாய் கிடைத்தி ருக்கிறார் நகுலன். இலக்கியவாதிகளின் கண்ணீரில் எல்லா பத்திரிகைகளும் நைந்துவிட்டன. இந்த ஒப்பாரி அரசியலைப் பற்றிய உணர்வேதுமின்றி இதே தருணத் தில் இறந்துவிட்டார் ஏ.பி.வள்ளிநாயகம். கதை கவிதை என்று தத்துபித்தாக எதையாச்சும் எழுதித் தொலைக்காமல் ஒடுக்கப்பட்டோரது வரலாற்று மீட்புக்கான ஒரு சமூகநீதி எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்துவிட்ட தால் இலக்கியவாதிகள் தரப்பு ஈ காக்கையும் எட்டிப் பார்க்கவில்லை. சாவிலும் சாதி பார்க்கிறதோ இழி மனம்? அமரர்கள் வள்ளிநாயகம், நகுலன் இருவருக்கும் அஞ்சலி செய்கிறது புதுவிசை.


ஆசிரியர் குழு

ச. தமிழ்ச்செல்வன்
நாறும்பூநாதன்
ஜா. மாதவராஜ்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
கமலாலயன்

நிர்வாகக்குழு

ந. பெரியசாமி
ப. சிவகுமார்
சி. சிறி சண்முகசுந்தரம்
இரா. ரமேஷ்

ஆசிரியர்

ஆதவன் தீட்சண்யா

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA

pudhuvisai@yahoo.com

ஏப்ரல்- 07 இதழ்
ஜனவரி- 07 இதழ்
அக்டோபர்- 06 இதழ்
ஜூலை - 06 இதழ்
ஏப்ரல் - 06 இதழ்
ஜனவரி - 06 இதழ்
அக்டோபர் - 05 இதழ்
ஆகஸ்ட்-05 இதழ்
ஜூலை-05 இதழ்
இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் எழுத்தாளர் களுக்கு 'இலக்கியத்தில் கால் நனைப்பு கொண்ட அரசியல்வாதிகள்' என்ற அவப்பெயர். ஆளுங்கட்சிக்கு ஜய்யாங்ஜப்பாங் என்று ஜால்ரா அடித்து தலையங்கமோ, முதல்வர் வீட்டாளுகளைத் துதித்து ஆறேழுபக்க கட்டுரையோ எழுதுவோரை என்னவென்று அழைக்க? இலக்கியத்தில் காலையும் மற்றதையும் முழுதாக நனைத்துக்கொண்ட- அரசியல் நோக்கமற்றவர்கள் என விளிக்கலாம்போல. திராவிட இயக்க அரசியலை எப்போதும் அசூயையோடு விமர்சித்த ஒரு பத்திரிகை இப்போது பொழியும் பாராட்டுமழையில் அண்ணா அறிவாலயமே அடித்துக்கொண்டு போய்விடும்போல. ‘காக்காப் பிடி இலக்கியம்’ என்ற இந்த புதுவகைமை நமக்கு பிடிபடாவிடினும் எதற்கும் இருக்கட்டுமெனச் சொல்லிவைப்போம்- கனிமொழிக்கு ஆயிரம் ஜெ. (இதுவேறு ஜெ)

பொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம். அருந்ததியர் வாழ்வுரிமைக்காக சிபிஐ-எம் நடத்திய சென்னைப் பேரணி அவ்விருப்பத்தின் முன்னறிவிப்பு. கையால் மலமள்ளுவதை ஒழித்தல், மாற்றுத்தொழில், உள் ஒதுக்கீடு ஆகிய அருந்ததியர் கோரிக்கைகளுக்கு புதிய அழுத்தம் பிறந்திருக்கிறது.

காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லாமதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் குடிக் கலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்துத்வாவின் இஸ்லாமிய எதிர்ப்பு துவேஷங்களை எதிர்கொள்ளும் தற்காப்புணர்வில், அதேவகைப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் தலை தூக்கும் என்பதின் வெளிப்பாடான இந்நடவடிக்கையை புதுவிசை வன்மையாக கண்டிக்கிறது. குர்ரானிய வசனங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை எவ்வகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்று அவர் அளித்த விளக்கத்தை ஏற்று அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தக்கலை ஜமாத்தாரை கேட்டுக்கொள்கிறோம்.

- ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
T.SURESH RAJAN
2007-11-02 01:14:00
SURESH_TAMIL04@YAHOO.COM

ARUMAIYANA THALAIYANGAM.UNMAYANA KATTURAI.PALLAN PARAIYAN AND MUSLIM INTHA ULLAGATHIL MATRA SAMUTHAYATHILIRUNTHU KAI VIDAPATTAVARGAL.ANNAL ATHAI KAPPATRA PORADA COMMUNIST ONDRU THAN SARIYANA THEERVU.

S. Veeramani
2007-12-11 03:47:00
veeramani1107@yahoo.com

கீழத் தஞ்சையில் கம்யூனிட்ஸ்ட்டுகளுக்கு பள்ளன் பறையன் கட்சி என்று பெயர். அதே தஞ்சை மாவட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்குள் சென்று விட்டாள் அங்கு பார்ப்பான் கட்சி.
திரிபுராவில் வங்காளிகள் மத்தியில் அது பழங்குடியினர் கட்சி. பழங்குடியினர் மத்தியில் அது வங்காளிகள் கட்சி.
இப்படி ஏதேனும் ஒரு விதத்தில் தாழ்த்திக் கூறுவதே நுனிப்புல் மேய்பவர்களின் பேச்சு.
லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிற ஒரு அரசியல் சமுகத்தில் கட்சி தருகிற குறைந்த பட்ச படியை அல்லது ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு தலைநகர் புதுடில்லியில் உள்ள பொதுச் செயலாளராக இருந்தாலும் சரி அல்லது மாநில முதல்வர்களாக இருந்தாலும் சரி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஒரு தலைமுறைக்கு முன் சாப்பாட்டிற்கேத் திண்டாடிய பேர்வழிகள் அரசியலில் புகுந்தபின் கோடிகோடியாய் கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் காலடிகளில் வீழ்ந்து கிடக்கவும் அவர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டுக்காக அவர்களைப் புகழ்வதற்கும் தயங்கிட மாட்டார்கள்.
ஆயினும் இத்தகைய லஞ்ச ஊழலால் புரையோடிப்போயுள்ள இந்த சமுதாயத்தில்தான் செங்கொடி இயக்கம் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அன்புடன்
ச.வீரமணி
புதுடில்லி.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP