Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜுலை - செப்டம்பர் 2006
தலையங்கம்



ஆசிரியர் குழு

ச. தமிழ்ச்செல்வன்
நாறும்பூநாதன்
ஜா. மாதவராஜ்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
கமலாலயன்

நிர்வாகக்குழு

ந. பெரியசாமி
ப. சிவகுமார்
சி. சிறி சண்முகசுந்தரம்
இரா. ரமேஷ்

ஆசிரியர்

ஆதவன் தீட்சண்யா

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA

[email protected]
வெறும் பட்டப்படிப்பு அல்லது சட்டத்துறை படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்கும் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் கல்வி தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகிறார்கள். சர்க்கார் உதவியில்லாமல் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா. இது விஷயத்தில் அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் முன்வர வேண்டுமென்பது சரியானதும் நியாயமானதுமாகும்...

- அண்ணல் அம்பேத்கரின் இவ்வார்த்தைகள் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் பொருந்தும். உயர்கல்வியில் இடஒதுக்கீடு என்கிற கருத்து உருவாவதற்கும் நடமுறைக்கு வருவதற்குமான இடைவெளிதான் ஆதிக்கசாதியினரின் சாம்ராஜ்யம் பரந்து கிடக்கிறது. 1902 ஆம் ஆண்டு கோல்காபூர் சமஸ்தானம் தொடங்கி இன்று வரையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பொதுவளங்களையும், அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்டு வரும் எல்லா முயற்சிகளையும் தடுப்பதில் ஆதிக்க சாதியினர் சிறிதும் தயக்கம் காட்டியதில்லை. காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் மனிதகுலம் கைக்கொண்டிருந்த பகிரந்துண்ணும் மனோபாவத்தைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளாத அளவுக்கு அவர்களுக்கு சுயநலம் கொழுப்பாக ஊறிக்கிடக்கிறது உடம்பிலும் மூளையிலும்.

நேற்று வரை பூணூலாயிருந்தது இப்போது ஸ்டெத்தாஸ்கோப்பாகவும் இடஒதுக்கீட்டின் மென்னியை நெறிக்கும் பாசக்கயிறாகவும் மாறியிருப்பதை அவர்கள் டெல்லியில் நடத்திய ரகளை நிருபித்திருக்கிறது. அவர்களின் நூற்றாண்டு கால அகங்காரமும் வெறியும் வன்மமும் ஊடகங்களின் வழியே நம் எல்லோருடைய வீடுகளுக்குள்ளும் நுழைந்து சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. எல்லோரும் கோயிலுக்குள் வந்தால் தீட்டாகிவிடும் என்று ஒதுக்கிவைத்ததைப் போலத்தான். உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்று ஒதுக்குவதும் ஒதுங்குவதுமாகிய குணமே பார்ப்பனீயம் என்பது மறுபடியும் நிரூபணமாகி இருக்கிறது. பார்ப்பனீயம் என்பது மறுபடியும் நீரூபணமாகி இருக்கிறது. பார்ப்பனீய ஒடுக்குமுறையை எல்லாத்தளத்திலும் தக்கவைத்துக் கொள்ளும் பதைப்புடன் அடுத்தக் கல்வியாண்டின் போதும் ரகளை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இடஒதுக்கீட்டின் வரலாற்றையும் அதன் தேவையையும் நியாயத்தையும் உணர்கிற சக்திகள் அணிதிரள்வதற்கு இந்த அவகாசம் போதுமானதுதான்.

- ஆசிரியர் குழு

ஏப்ரல் - 06 இதழ்
ஜனவரி - 06 இதழ்
அக்டோபர் - 05 இதழ்
ஆகஸ்ட்-05 இதழ்
ஜூலை-05 இதழ்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com