Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

ஆவியாதல்
சக்தி ஜோதி

மெல்ல விரிகிறது சிறகுகள்
உடலில் இருந்து
கனமற்றுப்போன உருவம்
சிறகுகளின் இசையில்
மயங்கிக் கட்டுப்படுகிறது
காற்றில் மிதக்கத் தொடங்கியபின்
நட்சத்திரங்கள் கைகளுக்குள் சிக்குகின்றன
ஒன்று இரண்டு மூன்று என நிராகரிக்கின்றேன்
ஒரு பந்தை எறிவதென்பது
அப்படியொன்றும் கடினமானதல்ல சிறகுகள் அசைந்தபடி
உடலை நகர்த்திக் கொண்டேயிருக்க
திருப்தியற்ற மனம்
கணக்கற்ற நட்சத்திரங்களைக் கடக்கின்றது
காற்று
நீர்
நெருப்பு
ஏதுவுமற்ற நட்சத்திரங்களில்
அலைந்து அலைந்து
தாகம் பெருகுகிறது
இன்னுமொரு நட்சத்திரம் தூரத்தில்
தாகம் தீர்க்கும் நட்சத்திரம் நெருங்க
உடல் தணலாய் மாறி
எழும்புகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com