Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

Market Guruக்களும் மங்காத்தா ஆட்டமும்

ஆறுநாட்கள் வேலை செய்தால் ஒருநாள் ஓய்வு கேட்டு தொழிலாளர்கள் போராடியதெல்லாம் பழங்கதை. இப்போது வாரத்தில் மூன்றுநாள் வேலை நான்கு நாட்கள் கட்டாய ஓய்வு. சில தொழிற்சாலைகளில் தினசரி ஒரு மணிநேரம் கூடுதலாய் வேலை பார்க்கவைத்து வாரஓய்வு இரண்டு நாட்களாக்கப்பட்டுள்ளது. ஆலை இயங்குவதை விட மூடிக்கிடந்தால் ஏற்படும் நஷ்டம் குறைவு என்பதாலேயே இந்த ஏற்பாடு. மூன்று ஷிப்டுகள் என்று இயங்கிய தொழிற்சாலைகள் ஒன்று அல்லது இரண்டாக குறைத்துக்கொண்டன. உற்பத்தித்திறனும் வேகமும் திட்டமிட்டே மட்டுப்படுத்தப்படுகிறது.


ஆசிரியர் குழு

எஸ்.காமராஜ்
உதயசங்கர்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
சாம்பான்
ரா.ரமேஷ்

நிர்வாகக்குழு

ந. பெரியசாமி
ப. சிவகுமார்


ஆசிரியர்

சம்பு

சிறப்பாசிரியர்

ஆதவன் தீட்சண்யா

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA

[email protected]

புது விசை - முந்தைய இதழ்கள்
ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்பு மின்றி துரத்தியடிக்கப்பட்டுவிட்டனர். எக்ஸிகியூட்டிவ், மேனேஜர் (தமிழில் சொன்னால் அவர்களுக்கு பிடிக்காதுபா) போன்ற நிர்வாகத்தரப்பினருக்கு ஊதியத்தில் 10 முதல் 40 சதம்வரை வெட்டு, கார் பறிப்பு - இப்படி தொழிற்பேட்டை முழுக்க 'கட்டு - வெட்டு' என்பதே தப்பிக்கும் மார்க்கமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பரபரவென்று ஷிப்டுக்கு ஓடி அதே பரபரப்போடு வீடு திரும்ப பழக்கப்பட்ட தொழிலாளியின் மனம், வாரத்தில் நான்குநாட்கள் மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கழிக்கும் வெறுமையில் பேதலித்து மருகுகிறது. என்னதான் நிரந்தரத் தொழிலாளியென்றாலும் எத்தனை நாளைக்கு சும்மா வைத்து வெட்டிச்சம்பளம் தருவது எனச் சொல்லி “ஒன்றுமில்லை போய்விட்டுவா” என விரட்டி யடிக்கப்படும் பிச்சைக்காரர் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமா என நொறுங்கிக் கொண்டுள்ள தொழிலாளியின் மனஉளைச்சலை எந்த பிரத்யேக கருவி கொண்டும் அளவிட்டுவிட முடியாது. ஊதியத்திற்குமேல் கிடைத்து வந்த மிகுதி நேரப்படி, இன்சென்டிவ் போன்ற கூடுதல் வருமானங்கள் நின்று போனதால், அவற்றைக் கொண்டு இதுவரை அடைபட்டுவந்த கடன்கள் மென்னியைப் பிடிக்கின்றன.

பெரிய தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கிவந்த சிறு, குறுதொழிற்சாலைகளின் தற்காலமே இருண்டு விட்ட நிலையில் எதிர்காலம் பற்றி கவலைப்படுவதும்கூட அனாவசியம்தான். இட்டுக்கட்டி ஏற்றப்பட்ட ரியல் எஸ்டேட் வியாபாரமும் அதலபாதாளத்திற்குள் உறைந்து விட்டது. இப்படியான திகிலூட்டும் வீழ்ச்சிகளின் களம், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் அமெரிக்கா அல்ல. அதன் இளைய பங்குதாரராகவோ, எடுபிடியாகவோ மாறிவிட துள்ளியலையும் இந்தியா விலிருக்கும் ஒசூர் தொழிற்பேட்டையின் நிலவரம்தான் இது. ஒரு சோற்றுப் பதம்.

இவ்வளவுகாலமும் தொழிலாளர்களையும் அரசையும் சுரண்டிக் கொழுத்த முதலாளிகள், இன்றைய நெருக்கடி யிலிருந்து தப்பித்துக்கொள்ள தொழிலாளர்களின் வாழ்வை பணயம் வைத்து சொக்கட்டானை உருட்டத் தொடங்கியுள்ளனர். இதன்பொருட்டு அவர்கள் மேற் கொண்டிருக்கும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் கேண்டீனில் வழங்கப்படும் அப்பளமும் ஊறுகாயும்கூட ஆடம்பரப் பட்சணமாய்த் தெரிய அவையும் நிறுத்தப் பட்டுவிட்டன இப்போது. இந்த ஆண்டு, பொங்கலுக்கு பத்துநாள் கட்டாய விடுமுறை. பொங்கலோ பொங்கல்.

உலகமே ஒரு சந்தை, அதில் உன்னையே நீ சரக்காய் மாற்றி விற்றுக்கொள்வதில்தான் உன் எதிர்காலமே இருக்கிறது என்று சுதந்திரச் சந்தையில் விலைபோவது குறித்து ஓயாது உபதேசங்களை அருளிவந்த Market Guru ஒருவரும் இப்போது தென்படுவதில்லை. அமெரிக்காவில் அடி விழுந்தால் ஒசூரில் முதுகுத்தோல் உரியும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு கீழ்ப்படுத் தியதன் சீரழிவை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக் கிடக்கும் இந்தக் கட்டத்திலாவது, ஒரு சுயசார்பு பொரு ளாதாரத்தையும் அதை வளர்த்தெடுப்பதற்கான அரசியல் முன்மொழிவுகளையும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியச் சமூகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com