|
வெறுங்கூட்டின் காப்பாளர்கள் ந.பெரியசாமி
மயிருக்கும்
மத அடையாளமிருக்க
பிடுங்கிய பையிலிருந்து
துணிமணிகளை உருவி வீசும்
காக்கிக்காரர்களை நினைக்க
நீண்டுகிடக்கும் பயத்தால்
பயணங்களை ஒத்திப்போடுவதும்
குழந்தைகள் வீறிட்டு அழ
பதறியெழச் செய்யும்
ரோந்து வாகன அலறலும்
பாலம் பஸ் நிலையம்
மூலைமுடுக்கு ஆலயங்களில்
இயல்பு வாழ்க்கை தொலைவதென
சாதிய இடிபாடுகளிலிருந்து
சமத்துவமிக்கதோரு மாபெரும் தேசத்தை
கட்டியெழுப்ப வாழ்ந்தவரின் நினைவுநாளில்
திட்டமிட்டு நடந்த மீறலை
வேடிக்கை பார்த்த அரசு
விடிய விடிய விழித்து
உண்டாக்கிய புண் ஆறிடாது
ஆண்டுதோறும் நினைவில்
நெருப்பூற்றிக் கொண்டிருக்கிறது.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|