 |
தலையங்கம்
ஆசிரியர் குழு
ச. தமிழ்ச்செல்வன்
நாறும்பூநாதன்
ஜா. மாதவராஜ்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
கமலாலயன்
நிர்வாகக்குழு
ந. பெரியசாமி
ப. சிவகுமார்
சி. சிறி சண்முகசுந்தரம்
இரா. ரமேஷ்
ஆசிரியர்
ஆதவன் தீட்சண்யா
படைப்புகள் / நன்கொடை அனுப்ப:
PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA
pudhuvisai@yahoo.com
|
யாவிலும் மதிப்பற்றதாகிக் கொண்டிருக்கிறது மனித உயிர். மழையும் வதந்தியும் மக்களைக் கொல்லும் கொடிய ஆயுதமாகிவிட்டன. தொலைக்காட்சிகளின் வண்ணத்திரையில் நொதித்து மிதக்கின்றன எம் மக்களின் பிணங்கள்.
பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் கடந்த ஒன்பதாண்டுகளாய் நடந்துவரும் கேலிக்கூத்தின் அடுத்தக்காட்சி விரைவில். ‘தன்னெழுச்சியாய்ப் போராடும்’ தமிழ்மானக் காவலர்கள் அதேதீவிரத்தோடு இந்த கிராமங்களுக்கும் விரைந்தால் நலம். ஆனால் வண்டிகள் வேறுபக்கம் திரும்பிவிட்டன. மக்களை நோக்கி வருவதற்கு சாத்தியங்கள் குறைவு.
முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை பெருகும்போது அவர்களுக்குள்ளேயே ஒரு கோஷ்டி கிளம்பி அதிரடியாய் எதையாவது செய்து முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் குறைபாடுகளை நீக்கவும் அதற்குள்ளேயே வழிவகை இருப்பதாய் நிலைநாட்டுவது வாடிக்கை. பதினோரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பறிப்பும் அப்படியானதே. இனி படம் பிடிக்காத வகையில் இந்த கொள்ளை தொடரப்போகிறது. அவ்வளவே.
சுயநிதிக்கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் சாத்தியமாகியுள்ளது. ஆனாலும் இன்றளவும் நுழையமுடியாத கர்ப்பகிருகங்களாக மத்திய அரசின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் ஆதிக்கசாதியினரின் தனிக்கூடாரமாக நீடிப்பது குறித்த அவமான உணர்வு நம்மில் எத்தனைப்பேருக்கு?
எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமாகிவிட்டார். நல்லவிதமாய் நாலு போட்டோகூட எடுத்துவைக்காமல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியும் காலமாகிவிட்டார். இருவருக்கும் நமது அஞ்சலி.
-ஆசிரியர் குழு
அக்டோபர் - 05 இதழ்
ஆகஸ்ட்-05 இதழ்
ஜூலை-05 இதழ்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
 Tamil Magazines on keetru.com



















































|
|