பா.ராஜா கவிதை
சாம்பல் நிறமணிந்த சிறுபறவை
ஆகாயத்தின் நிர்வாணத்திற்கு
ஆடையென அலைந்துலாவிக் கொண்டிருக்கும்
இம் மாலைநேரத்தில்
உனக்கென கண்ணன் பேக்கரியில்
காத்திருந்து சலித்து
கோபிக்க போனெடுத்து காதில் பொருத்தி
வானம் பார்க்கிறேன்
செல்போன் டவரில் அமர்ந்துவிட்டிருந்த
சாம்பல் பறவை
விருட்டெனப் பறந்த திசையிலிருந்து
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்
நீ...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|