Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

ஒற்றையடிப்பாதை
மா.காளிதாஸ்

பிரியங்களின் சாயல் தென்படும்
உன் முகத்துக்கு நேராய் போட்டுடைத்தேன்
ஒரு ரசம் போன கண்ணாடியை.
நின்று நிதானமாய்த் திருத்திக் கொண்டாய்
உன் மயிரை.
0
கைலியை அணிந்து கொண்டு
பொசுக்கென வெளியேறிவிடுகிறாய்.
திருத்த வேண்டியதைத் திருத்தி
மடிக்க வேண்டியதை மடித்து
அலச வேண்டியதை அலசி
உலர்த்த வேண்டியதை உலர்த்தி
நிமிர்ந்தால்...
பின்பக்கம் கைகட்டி
அடியாள் கணக்காய் நிற்கிறது
உன் உலகாயுதம்.
0
சுள்ளான்களைப் போல
கொஞ்சம் கொஞ்சமாக
உதிர்த்துப் போட்டுவிட்டதாய் அல்லது
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதான
வீராப்போடு வெளியேறுகிறாய்.
வளைந்து நெளிந்து சென்ற
அந்த ஒற்றையடிப்பாதையில்
லயித்துக் கிடக்கிறேன்
தன்னந்தனியாய்.
0

மாறாத பனிச்சிகரங்களில்
அலைந்து கொண்டிருக்கும் என் காமத்தின்
அதீத பாரம் தாங்காமல்
அறுத்து வீசினாய் ஒற்றை முலையை.
ஒதுங்கி நில்.
உறையலாம் அல்லது உறையச் செய்யலாம்
உன் பாதத்தில் படியும் நீர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.