Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

புவனராஜன் கவிதைகள்

கறுப்பு தேவதையின்
சதுப்பு நில வீட்டிற்கு வந்திருந்தேன்
நிரந்தரவிருளில் இப்பிரபஞ்சம் ஆழ்கையில்
விழிப்பின் கேவல் ஒலி நிசப்தம் படிய
ஓவிய தீற்றல்களின் விழி
அங்கங்கிருந்து ஒளிர்ந்தது
மலைச்சரிவின் தொழு
சகதி குளம்புகளில்
விழும் கழுத்து மணிகள்
காடு பற்றின நெருப்பில் சிதறின
இருள் பூத்த
மரமலர்களின் செவ்வக கதவுகளை மீறி
லாயத்து புரவிகள்
நிசப்த மதில்களில் விரைந்தோடுகிறது
குறையவியலாத
தன்னொத்த சிற்ப வெள்ளி நாணயங்களை
அள்ளி வீசுகிறான் பராரி சிறுவன்
ஒளி சுழலும் திசையெல்லாம் முகம் திரும்பும்
விசித்திர ஓவியமாய்
உச்ச மகிழ்ச்சியோடு தேவதையின் முகம்
பரவசத்தில் சுழன்றாட
ஆயிரமாயிரம் இருளின் கண்கள் சோகம் விழுங்கி
அவளுடைய வெம்மையில்
நூலாம்படை படிந்திருந்தது
அவன் பச்சிலை ஓவியமாவதை அவதானிக்கிறாள்
உதிர்கையில்
நிற்கவியலாமல் விழும் கறுப்பு தேவதை
நானும் அவள் விரல்களையே பற்றியிருக்கிறேன்
யாளி மட்டும் பறந்து விடுகிறது
கண்களிருள.

*

அசைவற்றிருக்கும் மலைகள்
காலத்தை உண்கின்ற இவ்விரவில்
சரிவினில் துவங்கும் நிலத்தை
கடந்திடுவதாய் முடிவாயிற்று
காட்டின் வெம்மையில்
நீர் தேடியலையும் விலங்கரவங்களில்
நானறியாத காட்சிவெளி திரண்டு
மிரட்சியுற கார்முகில் விரைந்தோடுமவ்வேளை
சிலர்
நட்சத்திரங்களையும் மலையுதிர்த்த கனிகளையும்
சுரக்குடுவைகளோடு சுமந்து உச்சி விளிம்பில் திக்கற்று
வான்நிமிர்ந்தபடி கைகளை பிணைத்து நிற்கையில்
நீள்புகைவண்டியென கடந்தோடுகிறது
ஊற்றுக்கண்ணடைந்த தகிப்பில்
எட்டிப்பார்க்கும் பெயரில்லாத பூச்சியின்
மிகச்சிறிய கண்ணில் தெறித்திருந்தது
மிக ரகசியமாய் ஒற்றை துளி
விருப்பம் நசிந்தோய்கிற பாடலில்
துவங்குகிறது மழை உறங்கும் கடல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.