Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
தேவேந்திர பூபதி கவிதைகள்

வெள்ளி வீதி

மறுபடியும்
சில இரவுகளை எனக்குத் தருவது
உனது பெருந்தன்மை தான்
வாழைக்குருத்துக்கள்
சில அங்குலம் வளர்ந்துவிடுகிற இரவை
நீயின்றி வைத்து நான் என்ன செய்வது
பழஞ் செய்யுள்கள் எழுதித் திரிந்த
சங்ககாலத் தோழிகள்
இந்த நகரத்தில் எந்தத்தெருவில் வசிக்கிறார்களோ
நள்ளிரவு தாண்டியும்
உனது அழைப்பு ஒலிக்கிறது
தீராத கோபத்தையும்
அது இன்னிசையாக்கிவிடுகிறது
நான் உறங்கத் தவிக்கிறேன்
சீதோஷ்ணம் இதமாக இருக்கிறது
இந்த இரவை
கடந்த முத்தத்தின் பரவசத்திற்காக
விட்டுக் கொடுத்தமைக்கு நன்றி
விழித்திருந்து நீ எழுதும்
கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

அடையாத கபாடம்

எனது சன்னல்கள் தட்டப்படுகின்றன
கதவுகள் திறந்திருக்கும் போதும்
வாசலில் வரவேற்க நான் நின்றிருந்தாலும்
எனது சன்னல்கள் ஏனோ
பெருஞ்சத்தத்துடன் தட்டப்படுகின்றன
சன்னலைத் தட்டுபவர்கள் பற்றி
என்ன சொல்வது
பலநேரம் ரகசியமான மெல்லிய ஓசைகள்
திடீரென அதிகாரத்துடன் பலமான தட்டல்கள்
நாசூக்காய் அழைக்கும் பரிச்சயமான தட்டல்கள்
ஏக்கம் நிறைந்த சுண்டிவிடும் ஒலிகள்
துப்பறியும் பொருட்டான பெருமூச்சுகள்
சத்தம் மட்டும் தாளவில்லை
எல்லாச் சன்னல்களையும் திறந்துவைத்தால்
யாருமில்லாத வீடெனத் தெரிந்துவிடும்
என்றாலும்
தற்சமயம்
ஒரு சன்னலை திறந்து
மற்றொன்றை மூடுகிறேன்

வாத்துகளை நடத்திச் செல்பவன்

நண்பகல் சாலையில் விரைந்து விடுபடுகின்றன
பெயர்ப்பலகைகள்
தொலைதூரம் கடந்த கொக்குகள்
தென்னையில் பூத்திருக்கக் கண்டேன்
எனது வாகனம் சாலை வழிகளை
இழுத்துச் சுருட்டுகின்றன சக்கரத்தில்
இன்னுமொரு உலகத்தில் சந்திக்க
என்ன இருக்கிறது
வாத்துகளை நீண்ட கழியில்
நடத்திச் செல்கிறவன்
கண்திறக்காத பூங்குஞ்சுகளை
கைப்பையிலிருந்து எடுத்துக் காண்பிக்கிறான்
திரும்புவதெனில்
போய்ச் சேருமிடமோ
வந்து சேருமிடமோ
பூமி சுற்றும்போது
சாலைகள் எந்தத் திசையில் நகருகின்றன
அந்த கொக்குகள் எப்போது பறக்கும்
வாகன ஓட்டுநரிடம் பதிலில்லை
இவ்வுலகில்தான்
தினந்தினம் நிகழ்கின்றன இவையனைத்தும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com