Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vanam
Vanam
செப்டம்பர் 2007

பயணி கவிதைகள்

பேருந்து

உஷ்ணம் உமிழ்ந்துகொண்டிருக்கும் பேருந்தில்
உடல்களின் சிதைவுகளுக்கிடையே
விதைப் பைகள் நசுங்கி
பிடிப்பற்றுத் தடுமாறும் அவன் கைகளில்
முன்னிற்கும் அவள் முலைகள் தட்டுப்படுகின்றன
குழந்தையைச் சாக்கிட்டு
அவள் தன் ஜாக்கெட்டைத் தளர்த்துகிறாள்
பின்னிருந்து பேண்ட் ஜிப்பைத் திறந்து
குறி துழாவும் மனிதனை
இவனால் திரும்பிப் பார்க்க இயலவில்லை
கீழே விழுந்த சில்லறைக்காக குனிந்த அவன்
இவள் பாவாடைக்குள் தேடிக்கொண்டிருக்கிறான்
அவளும் கால்களை அகட்டிக் கொடுக்கிறாள்
இந்த நேரத்தில்தான் வீரிடுகிறது குழந்தை
கழுத்தை நெக்கிறாள் அவள்
அனைத்தையும் கண்டு சாத்தானைப் போல புன்னகைக்கும்
நடத்துநர் விசில் ஊதுகிறார்
திரும்பிப் பார்க்காமல்
பாதையில் மட்டும் கவனம் வைத்து
பேருந்தைச் செலுத்துகிறார் ஓட்டுநர்
ஒரு கடவுளைப் போல.


ஊர்ந்து செல்லும் இரவு

சுயத்துடன் தொடங்கும் இப்புலர்காலையை
சுயபுணர்ச்சியுடன் தொடங்குகிறேன்
அலுவலகம் சென்று
என் சக அலுவலக மயிரான்களை
மாலை வரை சகித்திருந்துவிட்டு
வீதிகளில் வோட்காவும் விஸ்கியும் தேடி அலைகிறேன்
சாலைகளில் திட்டமிட்டே
பின்புறம் அசைத்துப் போகும்
பெண்களின் பிம்பங்களை
கழிப்பறைக்கு இட்டுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை
ஊர்ந்து செல்லும் இரவை
புகை பிடித்தே நகர்த்திக்கொண்டிருக்கும் போதே
இந்தத் தாயோளி காலை வந்தேவிடுகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.