Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

சமச்சீர் கல்வி - ஒரு அற்புதமான முயற்சி
- சி.டி. சனத் குமார்


என்னுடைய நெருங்கிய நண்பர் திரு.மங்கத்ராம் ஷர்மா ஐ.ஏ.எஸ். கிருஷ்ணகி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவராகத் திறம்பட செயலாற்றியவர். இவருடைய குழந்தைகள் புதுதில்லி, சென்னை, கோவை போன்ற ஊர்களில் மாறிமாறிப் படித்துக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் கிருஷ்ணகியின் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்கண்ட மூன்று ஊர்களிலும் தன்னுடைய இரு குழந்தைகளையும் CBSE பள்ளியில் படிக்க வைத்தார்.

Mangthram இந்த CBSE பள்ளிகள் நாடெங்கும் இருப்பதாலேயே பெற்றோர்கள் எந்த மாநிலத்திற்கு வேலை மாற்றல் ஆனாலும் அவர்களுடைய குழந்தைகளின் படிப்புக்கு எந்தவிதமான தடங்கலும் இருப்பதில்லை. இது மிகவும் முக்கியமான விஷயம்.

பல குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் பல ஊர்களுக்கு மாறுதல் ஆகிக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகளும் அவர்களுடன் ஊர் ஊராக சுற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு பதினைந்து வருடங்களுக்குள் குறைந்தது 6 அல்லது 7 பள்ளிகளில் அவர்கள் படித்திருப்பார்கள். உண்மையிலேயே அக்குழந்தைகளின் படிப்பும் மன வளர்ச்சியும் சிறிதளவாவது பாதிக்கப்பட்டிருக்கும். அதில் சந்தேகமேயில்லை.

குழந்தைகளின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமும் ட்ரான்ஸ்பர் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு அலுவலரை மாறுதல் செய்ய வேண்டுமென்றால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களது குழந்தைகளை சிறந்த பள்ளியில் சேர்க்க முடியும். 8வது மாதத்திலோ 10வது மாதத்திலோ மாறுதல் செய்தால் குழந்தைகளின் படிப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.

அரசு அலுவலர்களை மாறுதல் செய்யும்போது அவர்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படத்தான் வேண்டுமா? இந்த வகையில் பாதித்தால் அதற்காக நாம் வருத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு நல்ல முடிவெடுத்தே ஆக வேண்டும். இதே ஆள்பவர்கள் தலையாய கடமையாக எடுத்து செயல்பட வேண்டும்.

CBSE கல்வி ஸ்தாபனங்கள் நாடெங்கும் இருப்பதாலேயே பல இலட்சக்கணக்கான குழந்தைகளின் படிப்பு கெடுவதில்லை, தடைபடுவதில்லை. மேலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுவதில்லை, ஏனெனில் இந்தியாவெங்கும் உள்ள CBSE பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடப்புத்தங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. பல மேலைநாடுகளின் வளர்ச்சிக்கு இதுபோன்ற கல்வி முறை பெதளவிற்கு உதவியாக இருக்கிறது என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாடெங்கும் இல்லாவிட்டால் கூட ஒரு மாநிலத்திலாவது ஒரே மாதியான கல்வி பின்பற்றப்பட வேண்டும். உதாரணமாக தமிழ் நாட்டில் எடுத்துக் கொள்வோம். அரசு பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்க் பள்ளிகள் இவையல்லாமல் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள், இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கல்வி முறை. குறைந்தது மாநில அளவிலான பள்ளிகளாவது ஒரே முறை கல்வியை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி என்பது குழந்தைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகும். எல்லா பள்ளிகளிலும் ஒரே விதமான பாடங்கள், ஒரே விதமான கற்பித்தல் முறைகள். உண்மையிலேயே தனியார் பள்ளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. மாற்றத்தை மறுத்தால் காணாமல் போய் விடுவோமோ என்றும் சிலர் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இம்முறையில் எந்த குழந்தைகளுக்கு எந்தப் பாடத்தில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து அதிக அளவில் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இந்தப் பாடமுறை குழந்தைகளை கல்வியின் பால் ஈர்க்கிறது. புத்தகங்களையே சுமந்து வந்த அந்த குழந்தைகள் புத்தகம் இல்லாமல் அட்டைகள், வண்ண வண்ண அட்டைகள், பல வடிவங்களில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. மேற் குறிப்பிட்ட பலன்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் பணி மாறுதல் ஆனாலும் கூட குழந்தைகளின் படிப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படுவது இல்லை.

ஐ.ஏ.எஸ். படித்தவர்களின் அல்லது மிகவும் பணக்காரக் குழந்தைகள் மட்டுமே மத்திய அரசின் பள்ளிகளில் படித்து தங்களுடைய கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை போலவே சாதாரண அல்லது நடுத்தர வர்க்க குழந்தைகளின் படிப்பும் இந்த சமச்சீர் கல்வி முறையினால் மிகுந்த பயனடைவார்கள் அல்லவா?

ஒரு இலட்சம் பேர் வாழக்கூடிய ஒரு ஊரில் 12 பள்ளிகள் இருக்கின்றன. இதில் 8 தனியார் பள்ளிகள். இவைகளில் எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு விதமான கல்வி முறை. ஒவ்வொரு விதமான புத்தகங்கள். கற்பித்தல் முறையும் வேறு வேறு. ஒரு ஊரில் மட்டுமே இந்த நிலையென்றால் அந்த மாநிலத்தில் எவ்வளவு பள்ளிகள் இருக்கும்!

இவற்றிற்கெல்லாம் தேவைதான் என்ன? ஒருமுறை என இல்லாததால் தான் இந்த அவலமான நிலை. இந்த நிலை நம் நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. தனியார் பள்ளிகள் என வந்தவுடன் இது மிக அதிகமாகி விட்டது. நாடெங்கும் இல்லாவிடினும் ஒவ்வொரு மாநில அளவிலாவது ஒரு கல்விமுறை என்ற நிலை மாற வேண்டும். தனியார் அச்சிடும் புத்தகங்களுக்கு அளவேயில்லை. அவற்றில் தரமான புத்தகங்கள் என எடுத்துக் கொண்டால் மிக மிகக் குறைவு. ஒரு பக்கத்திற்கும் அடுத்த பக்கத்திற்கும் தொடர்பே இல்லாமல் கூட பல புகழ்பெற்ற நிறுவனங்கள் அச்சிட்டு விற்கின்றன, அதையும் பள்ளிகள் வாங்கி தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கின்றன. தவறு எங்கே இருக்கிறது என தெயாமலே கமிஷன் வந்தால் போதும் என நடத்தும் பள்ளிகள் பெருகி விட்டன.

அச்சிடும் புத்தகங்களை வாங்கும் பள்ளிகளுக்கு அதிகமாக கமிஷன் கொடுத்து விற்கும் நிலையில் எப்படி அப்புத்தகங்களில் தரம் இருக்கும்? 25 சதவிகிதம் என்றாலே அதிகம். இதில் 40 சதவிகிதம் கமிஷன் கொடுக்கிறோம். எங்களுடைய புத்தகங்களையே வாங்குங்கள் எனச் சொல்லி பள்ளிகளுக்கு புத்தகங்கள் சப்ளை செய்யும் அச்சிடுவோரும் இன்றளவில் ஏராளமாகப் போய்விட்ட நிலையில், அரசே அச்சிட்டு இந்த சமச்சீர் கல்வி முறையில் பள்ளிகளுக்கு விற்கும் நிலையில் இதைப்போல தரம் குறைந்த புத்தகங்கள் வெளிவர வாய்ப்பே இல்லை.

இந்த தமிழக அரசின் சமச்சீர் கல்வியினை மனதார வரவேற்போம். நாளை இந்தியா எங்கும் ஒரே மாதியான கல்வி முறை வரும் என உறுதியுடன் நம்புவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com