மிதக்கும் வதந்திகள்
- பொன்.வாசுதேவன்
நிழல் மிதிபடாத
மாலை வேளையில்
கண்களின் குளுமை
இதயத்தை நிரப்ப
இணைந்திணைந்து
செல்கின்றனர் நண்பர்கள்
முகம் உமிழ்ந்த
புன்னகையின் மிச்சமாய்
தொடர்கிறது உரையாடல்
களைப்பின்றி
அந்தரங்கப் பூக்கள் மலர
உன்னைப் பற்றி
என்னைப் பற்றி
அவரைப் பற்றி
இவரைப் பற்றி
யாவரையும் பற்றி
ஊற்றாய்ப் பரவுகிறது பேச்சு
கைப்பிடியளவு அள்ளிக் கொண்டு
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
வீதியெங்கும்
அணுவணுவாய் இறைத்தபடி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|