மழை நீராட்டு!
- கன்னிக்கோவில் இராஜா
புதிய சுவீகரிப்பின்
உச்ச நிகழ்வைப் போல
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
உடல் முழுவதும்
மழையின் நீராட்டு!
எதிர்படுவோன் கரங்களில்
அடைக்கலம் புகுந்திருக்கும்
குடைகளை உதறுகிறது
என் மனம்!
தீண்டதகாதவராய்
பார்த்தொதுங்கும்
வேடிக்கை மனிதர்கள்
ஒதுங்குகிறார்கள்
தெருவோரக் கடைகளில்
மழைக்கஞ்சி!
மழைப்பூ மலர்ந்திருக்கும்
வான தோட்டத்தில்
பறக்க திறனின்றி
நனைந்தபடி ரசிக்கின்றன
பறவைகள்!
மழை நின்றதும்
பறந்து செல்கிறார்கள்
மனிதர்கள்!
நனைந்த சுகத்தில்
மெய்மறந்து நிற்கின்றேன்
சாலை நடுவில்!
சுவடிடுக்கில்
மெல்ல ஊர்கிற
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|