Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

எதிர்முகம்
- விழி.பா. இதயவேந்தன்


சற்றே நொடிந்து
கண்கள் அங்குமிங்குமாகத் திருப்பியபடி
கால்கள் வேகமாய்க் கடந்தபடி
எதிரே
தூரமாய் தலைப்படுகையில்
தெரிந்த மாதியும்
அறியாத மாதியும்
இருக்கிறது பார்ப்பதற்கு.

அவராக இருக்குமோ
இவராக இருக்குமோ
குழப்பத்தோடே நகர்கிறது
நடையுடன் சேர்ந்து மனசு.

லேசானப் புன்னகையோடு
வணக்கம் சொல்லியபடி
அருகில் கடக்கையில்
அவர் அவராகத்தான் இருக்கிறார்
நான் வேறாகத் தெரிகிறேன்.

மறுவணக்கத்தோடு நகர்தலின் குழப்பம்
தணிந்திருக்குமோ இல்லையோ
நானும்தான் கேள்விகளால் நிறைகின்றேன்.

என்றாலும் என்ன
எவராய்தான் இருந்தாலென்ன
பெரியோர் சிறியோர் என்பதல்ல
வணங்குதல் நம் மரபு
பண்பின் பிரமாண்டமான அடையாளம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.