Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

தலையங்கம்


இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் குடியரசுத் தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் பலவிதமான குற்றச்சாட்டுக்களை அவர் மீது அடுக்கித் தள்ளினார்கள். அவரைப் பற்றித் தனியாக ஒரு இணைய தளம் கூட திறந்து வைக்கப்பட்டது. எல்லாவற்றையும் மீறி அரசியல் கூட்டல் கழித்தல்கள் சார்ந்த பெரும்பான்மை அவரை ராய்ஸினா குன்றில் குடியேற்றி விட்டது.

வடக்கு வாசல்


ஆசிரியர்
யதார்த்தா பென்னேஸ்வரன்

ஆலோசகர்கள்
பி.ஏ. கிருஷ்ணன்
இரா.முகுந்தன்
தமிழ்ச் சங்கம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஓவியம்
வெ.சந்திரமோகன்


தனி இதழ்: ரூ.10
ஆண்டுக் சந்தா: ரூ.100
ஈராண்டுச் சந்தா: ரூ.180
ஆயுள் சந்தா: ரூ.2500

தொடர்பு முகவரி
Vadakku Vaasal Publications
5210 Basant Road,
Near Karnail Singh Stadium
Paharganj, New Delhi-110 055
[email protected]

இனி பிரதீபா பாட்டீல் ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் அரட்டை அரங்கங்களிலும் பேசப்படும் பொருளாகிவிடுவார். மூன்றாந்தரப் பேச்சாளர்களுக்கு எல்லாம் பெண்மையின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துக் காட்டுச் சொல்ல ஒரு நேரடி உதாரணம் ஓர் ஐந்தாண்டுகளுக்குக் குறைவில்லாது கிடைக்கும். சில்லறைக் கவிஞர்களுக்கும் இனிக் கொண்டாட்டம் தான். இந்தக் குடியரசுத் தலைவர் சமாச்சாரத்தை வைத்தே அவர்களால் கொஞ்ச நாட்களுக்குக் கவிதைக் குப்பைகள் டன் கணக்கில் வெளித் தள்ளப்படும் பேராபத்து ஒன்றும் காத்திருக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் வன்முறையும் அங்கங்கு அவ்வப்போது தலைவித்து ஆடிக் கொண்டுதான் இருக்கின்றன. மறைமுகமான வகைகளில் பல உமைகள் அவர்களுக்கு மறுக்கப் பட்டுத்தான் வருகின்றன. ஒரு பெண் குடியரசுத் தலைவராக இப் பிரச்சினைகள் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும் பிரதீபா பாட்டீல். அனுபவம் மிக்க அரசியல் தலைவர் அவர். செய்வார். எதிர் பார்ப்போம்.

மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிகமாகப் பேசப்பட்டது. இதற்கு முன்பும் பல அரசியல் வாரிசுகளுக்கு இது போன்ற பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அரசியல் மற்றும் அதிகாரம் சார்ந்த குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அதிலிருந்து பெருமளவு அந்நியப்பட்டு தனக்கென ஒரு அடையாளத்தைத் தன்னுடைய தனித்துவத்தினால் நிறுவிக் கொண்டவர் கனிமொழி. பதவியேற்புக்குப் பின் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகளும் கடைப்பிடித்த நிதானமும் அந்தத் தனித்துவத்தை இவர் தக்க வைப்பார் என்பதையே காட்டின.

அதே நேரத்தில் இவருடைய குடும்பப் பின்னணி மற்றும் இவருக்கு கட்சி வழியாக அளிக்கப் பட்டிருக்கும் இந்தப் பதவி தில்லியில் பல புதிய அனுபவங்களைத் தரலாம். இனி கட்சி சார்புள்ள ஜால்ராக்களும் கலாச்சாரக் கைக்கூலிகளும் அவரைச் சுற்றி அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இது தில்லி மாநகரின் தனித்துவம். இதிலிருந்தும் அந்தியப்பட்டுத் தன்னுடைய தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் அவருக்கு. எதிர் பார்ப்போம்.

அன்புடன்
யதார்த்தா கி. பென்னேஸ்வரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com