Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

பனிக்குடம்

ஸமீரா

ஹே ஆட்ரிமிஸ்,*
மூளைச் சோறை மதனம்
செய்தூட்டி விடுகிறாயா?
யாருக்கில்லையென்பதோ?
யாருக்குண்டென்பதோ
கேள்விகளற்றுன்னிடமே....

திசைகளெட்டுமிங்குரசி
தினங்களற்ற பொழுதில்
குழந்தைகள்
குழந்தைகளைப் பெற்றெடுத்து
முலைதேடும் சாயுங்காலம்
விடிவற்ற இக்காலத்தில்
பூமியில் வடிந்த பிரளயம்
வெண்ணை திரண்ட விந்துக்கள்
அடைக்கப்பட்ட மழலைச் செவ்வாய்

விறைத்து நிற்கும் ஆண்குறிகள்
பயந்தோடும் குழந்தைகள்
பாயும் வால் முளைக்காத பூனைகள்
ஆண்மணம் கொண்ட மேகங்கள்
மரணம் கதைக்கும் கழனிகள்

துடிதுடிக்கும் சிறுமகள்
அகற்றப்பட்ட கால்களில்
மூச்சுத் திணறத் திணற....

காற்று கடன் கொண்டவளின்
இறுதி முனகல்
வளராத ஆழங்களின்
ரத்தச் சிகப்புத் தெறித்த
கீழ் வானம்

தாரைகைகள் வீழத் தொடங்கட்டும்
காற்று சனி கிரகத்தில்
அபயம் கொள்ளட்டும்
நீர் வற்றி மேகங்கள்
ஆகாமலிருக்கட்டும்

என்னைத் தருகிறேன்
காம இச்சைத் தீர்த்துக் கொள்
காம இச்சைத் தீர்த்துக் கொள்...

(*ஆட்ரிமிஸ் - கிரேக்க கடவுளான ஸீயஸின் மகள் ஞானத்தின் தேவதை.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.