Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

மாயா

அசுரன்

1

மாயாவுக்கும் எனக்கும்
ஓர் ஏழாண்டு பழக்கம்தான்

உங்களைப் போலவே
வெகுசாதாரணமாக
என்னைக் கடக்க முயன்றவள் மாயா

அதற்குமுன் பார்த்திருக்க
பலவாய்ப்புகளிருந்தும்
அன்றுதான் மாயாவைப் பார்த்தேன்

கடந்து போக பல வாய்ப்புகளிருந்தும்
என்னைக் கடக்க முடியாமல்
நின்று விட்டவள் மாயா

2

மாயா என்னிடம் உரையாடும் போதெல்லாம்
சூரியன் கடந்து போகும்
நிலவு கடந்து போகும்
நதியும் காற்றும் கடந்துபோகும்
உரையாடல் முடிந்து கண் திறந்து பார்க்கும் மாயா
காணாத என்னை
சூரியனில் - நிலவில் - நதியில் - காற்றில்
தேடி ஓடுவாள்

3

குழந்தை போல்தானென்றாலும்
மாயாவும் கதை சொல்வாள்
மாயாவின் கதை பறவைகள் பற்றியது
மாயாவின் பறவைகள் பாடுவதோ பறப்பதோ கிடையாது
மாயாவின் பறவைகள் என்னைப் போல்தான்
மாயாவுக்காக மட்டுமே பறவைகளாக இருக்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.