Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

சாக்கிய முனி புத்தர்
முருக சிவக்குமார்

பழங்கால இந்தியாவில் - தற்போதைய நேபாளத்தில் உள்ள நகரான கபிலவஸ்துவில் சாக்கியர் இனத்தில் பிறந்து, முனிவரான புத்தரை சாக்கிய முனி என்றும் மக்கள் அழைக்கின்றனர்.. என்று தொடங்கும் இந்நூலில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும், போதனைகளையும், பௌத்த சங்க விதிமுறைகளையும், பௌத்தத்தைப் பற்றிய ஐயங்களையும் விளக்கங்களையும், புனிதத்தலங்களையும் இந்நூல் கூறுகிறது.

சாக்கியர்களின் கபிலவஸ்து நாட்டையும், கோலியர்களின் ராமகாம் நாட்டையும் ரோகிணி நதி எல்லையாகப் பிரித்தது. ரோகிணி நதியின் நீரை இரு சாராரும் பாசனத்திற்காகப் பயன்படுத்தி வந்தனர். இதனால் அடிக்கடி பூசல்களும், சண்டைகளும் வந்தன. பருவமுறை வைத்து நீர் பாய்ச்சினாலும் சண்டை தீர்ந்த பாடில்லை. அதனால் கோலியர்கள் மீது படையெடுப்பதாகச் சாக்கியர்கள் முடிவெடுத்தனர். இதைச் சித்தார்த்தான் தடுத்தார். அதையும் மீறி போர் தொடுப்பதாக முடிவு எடுத்தனர். இதனால் மனமுடைந்த சித்தார்த்தன் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகள் இந்நூலில் உள்ளன.

மேலும் இந்நூல் முன்னுரையில் பேரா. அ. மார்க்ஸ் குறிப்பிடுகையில் ‘இங்கு வாழும் பௌத்தம், நடைமுறையிலுள்ள பௌத்தம், பௌத்தத்தை நாம் கோட்பாட்டு ரீதியாக ஒரு மதமல்ல, அது ஒரு நெறிமுறை, மார்க்கம் என்றெல்லாம் விளக்கம் சொன்னபோதிலும், நடைமுறையில் இன்று அது ஒரு மதம். அம்மதத்தைப் பின்பற்றுவோருக்குக் கடவுள் புத்தர்’ என்கிறார்.

இந்நூலில் உள்ள பௌத்தம்: ஐயங்களும், விளக்கங்களும் என்ற தலைப்பில் இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் பௌத்தம் வளர்ந்திருக்கிறதே என்ற கேள்விக்கு இந்நூலில் சரியான பதிலாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் இலங்கையில் நடக்கும் போராட்டத்தின் பெருபாண்மை ஒ சிறுபாண்மை என்கிற ஒரு பகுதியாகக் கொண்டால் கூட மதத்திற்குள் நடக்கும் போராட்டமாக இந்நூல் ஆசிரியர் மேற்கொண்டிருந்தால் வேறுசில விடயங்கள் கிடைத்திருக்கக்கூடும்.

பக்கத்துக்குப் பக்கம் பல்வேறு புத்தர் படங்களுடன், அழகிய வடிவமையும், படிக்க இலகுவாக அமைந்துள்ளது இந்நூல்.

சாக்கிய முனி புத்தர்
ஆசிரியர் : முருக சிவக்குமார்,
வெளியீடு : விகடன் பிரசுரம்,
757, அண்ணாசாலை, சென்னை - 600 002.
விலை : ரூ 60/-



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com