Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

அணுசக்தி 123 - அமெரிக்க இந்திய ஒப்பந்தம்

அமெரிக்கச் சர்வதேச அணுசக்தி உதவிச் சட்டத்தின் 123வது பிரிவின் விதிக்கு ஏற்ப அமெரிக்க அணுசக்தி பெற விரும்பும் நாடுகள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதுவரை இதனடிப் படையில் ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இராணுவத் துறையில் அல்லாது மக்கள் நலத்திற்காக அணுசக்தியைப் பயன்படுத்துதல் என்பது குறிக்கோள். இந்தியாவும் இப்பட்டியலில் இடம் பெறுகிறது.

ஏறத்தாழ ஈராண்டுகளாகப் பல்வேறு வழிகளில் - அரசியல் பொருளாதாரம், அரசு தந்திரம் என்னும் பல்வேறு துறைகளில், வழிகளில், பல்வேறு காலங்களில் அமெரிக்க இந்தியப் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் பலனாக இவ்ஒப்பந்தம் - 123 ஒப்பந்தம் உருவாயிற்று. அணுசக்தி மக்கள் அமைதி வாழ்வுக்காகப் பயன்படுத்தப்படும் என்னும் அடிப்படை நோக்கம் கொண்ட இந்த ஒப்பந்தத்தைப் பாரதிய ஜனதா கட்சி ஒரு புறமிருக்க, இடதுசாரிக்கட்சிகள், குறிப்பாகச் சீனா அமெரிக்க ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு எதிர்ப்பானேன் என்ற கேள்வி மக்களிடையே இயல்பாக எழுந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தைவிட இந்தியக் குற்றவியல் சட்டம், (Indian Penal Code 1872) மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது போலவே அமெரிக்க ஐக்கியக் குடியரசு அரசியல் சட்டத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது ஹைய்டு (Hyde) சட்டமாகும். சிலவிதிகள் அணுசக்தி ஒப்பந்தச் சட்டத்தில் இல்லையென்றாலும் சட்டவிதிகள் தாராளமானவை என்று கருதப்பட்டாலும் அமெரிக்கா வழங்கும் எந்த உதவியும் “ஹைய்டு” சட்டத்தின் நெறிப்படிதான் முறையாக நிறைவேற்றப்படும்.

மின்சக்தி நீர், காற்றாலை, சூரிய வெளிச்சம், அணு என்பனவற்றின் பயன்பாட்டிலிருந்து பெறப்படுகிறது தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் அணு உற்பத்தி ஆலை அமைந்தபோது இல்லாத விவாதமும் சச்சரவும் இப்பொழுது ஏன் என்ற வினாவும் எழும், ரஷ்ய நாட்டுடனான ஒப்பந்தங்கள் எவையும் நிபந்தனைகளின் அடிப்படையில் உருவானவையல்ல.

அமெரிக்க - இந்திய உறவுகள் வரலாறு மிகக்கசப்பானது. இந்தியச் சுதந்திரப்போர் நடைபெற்று வந்த காலத்தில் அமெரிக்காவுடன் ஆதரவு வலுவாக இருந்ததில்லை. இந்திய நாடு விடுதலை பெற்றுத் துணிந்து, தனித்தியங்கத்தொடங்கிய காலத்திலிருந்து பாகிஸ்தான் பிரிவினை முதல் இன்று வரை எழுந்துள்ள பாதுகாப்புக்குழு உறுப்பினர் பதவிபெறுவது வரையிலான பிரச்சனைகளைப் பொறுத்தவரை அமெரிக்கா பரிவு காட்டியதுமில்லை ஆதரித்ததுமில்லை. பிரிட்டன் ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை இழந்த பிறகு அமெரிக்கா அதன் இடத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு 60 ஆண்டுகளாக விடுதலை பெற்ற பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளும், மாற்றங்களும் உலக பயங்கரவாதம் தோன்றுவதற்கும் இதுவே காரணம். அமெரிக்கா உதவி எதுவாக எவ்வாறாக இருந்தாலும் அதன் உள்நோக்கம் உலகைக் கட்டியாள வேண்டும் என்பதுவே.

சீனாவை இந்தப் பிரச்சினையில் எந்தக் கட்சியும் வம்புக்கு இழுக்கத் தேவையில்லை. ஸ்டாலின் மறைந்த பின் சோவியத் நாட்டுக்கும் மக்கள் சீனத்துக்கும் ஏற்பட்ட பல்வேறுவகையான கருத்து வேற்றுமைகளால் உலகநிலை மாறியதை அனைவரும் அறிவர். இந்தியப் பொது உடமை இயக்கம் சிதறுவதற்கும், மதவாதசக்திகள் வளர்வதற்கும் 1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சீன எல்லைப்போர் ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது.

நீண்ட நெடுங்காலம் சீன மக்கள் விடுதலை இயக்கத்தை இந்திய மக்கள் ஆதரித்து வந்த போதிலும் பாகிஸ்தான் பிரிந்து இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சீனா பாகிஸ்தானைப் பல வழிகளில் ஆதரித்து வந்துள்ளது. அதற்கு உதவியும் வந்துள்ளது என்பதனை உலகம் அறியும். இப்போக்கு இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்குச் சங்கடத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மை. இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இந்தியச் சீன உறவுகளைத் திருத்திச் செம்மைப்படுத்தப் பலவாறு முயன்று வந்துள்ளதும் உண்மை. இந்தப் பின் புலத்தில் இந்தியப் பொதுவுடைமை இயக்கம் சீனாவிற்குப் பரிவான நிலை எடுப்பது ஏலாத செயல்.

சோவியத் நாட்டைத் தருணம் பார்த்து வீழ்த்திய அமெரிக்க உளவுத்துறை சீனாவிடமும் தன் கைவரிசையைக் காட்டாமலிராது. சீனாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும் இந்தியா ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் வான்படை, கப்பல் படைகூட்டுப் பயிற்சி நடத்துவது எவருக்கு எதிராக?

ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் தரமாட்டோம் என்னும் முடிவை இந்தப் பின்புலத்தில் கூர்ந்து கவனிப்பது நல்லது. அரசியல் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தாலும் பொருளாதாரத்தில் அமெரிக்காவோடு பிணைந்து கட்டப்பட்டுள்ளது என்னும் உண்மையை ஆஸ்திரேலியாவில் அண்மையில் தோன்றிய மக்கள் எழுச்சிகள் இதனை உறுதிசெய்துள்ளன. சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இந்திய அணு உலைகள் கண்காணிப்புக்கு, உட்படும் என்றும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

புதிதாக அணுமின் உலைகளில் மறுபயன் பாட்டுக்கு உண்டாக்கப்படும் உலைகளும் அவ்வாறு உடன் படும் என ஒப்புதலும் கூறுகிறது.

அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி அமெரிக்கா பிறநாடுகளோடு செய்துகொண்ட ஒப்பந்தம் மக்கள் பிரதிநிதி சபை செனட் என்னும் இரு அவைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் 2006 டிசம்பர் 18 அன்று முறையே 859 -18 85 - 112 என்னும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவுடனான 123 ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தின்படி அமைச்சரவை மட்டும் ஒப்புதல் தந்தால் போதும் இந்த வேற்றுமையைக் காங்கிரஸ் அல்லாத எல்லாக்கட்சிகளும் இந்தியா வெளிநாட்டோடு செய்துகொள்ளும் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வேண்டும் என்பதனை வற்புறுத்த காரணம்., இந்தியப் பிரதமர் ஆகஸ்டு 13 அன்று இவ்வொப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அது எவ்வகையிலும் இந்தியாவின் அணுகுண்டு சோதனையைத் தடுக்காது என்கிறார்.


ஈரான் அமெரிக்காவுக்கு அணு ஆயுத சோதனைக்குக் கட்டுப்படாததனால் ஈரானை அடக்குவதற்கு உலக அணுசக்தி அமைப்புக் கூட்டத்தில் அமெரிக்காவின் கடுமையான நிர்பந்தத்தின் காரணமாக இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை உருவாயிற்று. இந்தப் பின்புலத்தில் தான் அமெரிக்க இந்திய ஒப்பந்தம் பற்றிய நோக்கம், அச்சம் இயல்பாகவே பிறக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவின் தேவை என்று கருதுபவர்களும் அது எந்த விதத்திலும் இந்தியாவின் அணு ஆயுத சோதனையைக் கட்டுப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்து வருகின்றனர் அணுகுண்டு சோதனை 1974, 1998 ஆகிய ஈராண்டுகளில் நடைபெற்றதை மக்கள் அறிவர். ஆனால் இடதுசாரி இயக்கம் குறிப்பாகப் பொதுஉடைமை இயக்கமும் மனித சமூக நலன்களை முன்னிட்டு அணு ஆயுத உற்பத்தித் தடை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பல்லாண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளது.

ஒருபுறம் அணுவின் தீங்கைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் போதே மறுபுறம் அணுசக்தியின் பயன்பாடு எந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுவே இந்தியப்பொது உடைமை இயக்கத்தின் நிலைபாடு.

இனி 123 ஒப்பந்தம் கூறுவது என்ன? அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா மிஞ்சும் படி ஆக வேண்டும். ஆனால் அது எந்தவிதத்திலும் அமெரிக்காவின் தற்காப்பையோ, இறையாண்மையையோ பாதிக்கலாகாது. அதாவது அணுசக்தி பற்றிய வாணிப ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஊறுவிளைத்தலாகாது. இந்திய வெளிநாட்டுக் கொள்கை பிரச்சினைகள் பற்றி அமெரிக்கா குடியரசுத் தலைவர் நற்சான்று வழங்கி அமெரிக்கக் காங்கிரசுக்கு அறிக்கை தர வேண்டும். அமெரிக்கா இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்குத் துணைசெய்யும் அடுத்த பத்தாண்டுகளில் மின் உற்பத்திக்காக மட்டும் 12 லட்சம் கோடி டாலர் தேவைப்படும். இதில் அமெரிக்காவின் பங்கு கணிசமாக இருக்கும்.

அதாவது அணுமின்சக்தி உற்பத்தி 4000 மெகாவாட்டிலிருந்து 20,000 மெகாவாட்டுக்கு அதிகரிக்க வேண்டும். இதில் அமெரிக்காவின் பங்கும் தேவை. வேண்டிய எரிபொருள் கருவி காரணங்கள் எல்லாம்தர வேண்டியிருக்கும். இதுவே ஒப்பந்தம் கூறுவது பயன்பாட்டுப் பொருளியல் தோரியம் இந்தியாவில் போதிய அளவுக்குக்கிட்டும். உலக தோரிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 24 சதம்.

ஆனால் அதே போது இதைவிட முக்கியமான யுரேனியம் உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு ஒரு சதம் தான். எனவே யுரேனியம் பிறநாடுகளிலிருந்து பெற வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்குண்டு. அமெரிக்காவின் அணுசக்தி உதவி இயற்கை எரிவாயு. எண்ணெய் இரண்டின் தேவையை மிகுதியாகக் குறைக்கும். இதனாலேயே எரிசக்தி எண்ணெய் வளம் இந்தியாவில் தேவையான அளவு கிடைக்காததனால் அமெரிக்க இந்திய அணு மின் ஒப்பந்தம் வரவேற்கப்பட்டுப் பாராட்டப்படுகிறது.

செலவிடப்பட்ட எரிபொருளிலிருந்து புளுடோனியம் எடுக்க உரிமையில்லாததனால் ஒப்பந்தத்தால் அதிக பயன் கிடைக்க முடியாது. மேலும் செலவிடப்பட்ட எரிபொருளை மீண்டும் பயன்பாட்டுக்குத் தகுதியாக்க வேண்டுமானால் இதற்கும் தனிகவனமும் ஒப்பந்தமும் வேண்டப்படுகின்றன. மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் இயங்கும் அணுசக்தி உலைகளில் 14 சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் உட்படும் என்று இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

நலன்கள் ஒருபுறமிருக்க வழக்கமாகத் தொன்று தொட்டு நீர், சூரியவெப்பம், காற்றாலை மூலம் பெறப்படுகின்ற மின்சாரத்துக்குத் தேவையான உலைகள் இயந்திரங்கள் போன்ற வற்றை விட அணுஉலைக்குத் தேவையான இயந்திரங்களும் மூலப் பொருட்களும் வேறுபடுகின்றன. கழிவுப் பொருள்களை அகற்றுவதற்கும் தேவையானவற்றைப் பயன்படுத்துவதற்கும் தேவையில்லாதவற்றை அழிப்பதற்கும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான செலவினங்கள் மிகுதியாகயிருக்கும். அணு உலைகளால் ஏற்படும் கசிவினால் மனித குலத்துக்குப் பேராபத்து நேரிடும். ரஷ்ய நாட்டில் செர்னபில் ஆலைக் கழிவினால் ஏற்பட்ட தீங்குகள் உணரப்படுதல் வேண்டும்.

விபரீதங்களையும், ஆபத்தையும் தடுக்க அவற்றால் ஏற்படும் அழிவுகளைச் சரிசெய்ய தரவேண்டிய விலை மிக அதிகமிருக்கும். இவை எல்லாவற்றையும் தாங்கக்கூடிய மனிதத் திண்மையும் பக்குவமும் இந்தியா பெற்றுள்ளது என்ற போதிலும் ஒப்பந்தத்தின் பலனாகக் கிடைக்கும் நலன்கள் பிறமுறைகளில் பெறுவதைவிட குறைவாகவே இருக்கும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் “Marginale” நிலக்கரி பயன்பாட்டு வழி 66 சதவீதமும் சூரியசக்தி காற்றாலை வழி 26 சதவீதமும் அணுஉலைமூலம் 5 சதவீதமும் கிடைக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதும் அதனால் இந்தியா பயன் அடைவதும் அமெரிக்க நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட ஹைய்டு திட்டத்தினால் தீர்மானிக்கப்படும். இந்தியா சுதந்திரமாகத் தனித்து இயங்கும் உரிமையை இழந்துவிடும். மேலேழுந்தவாரியாகப் பார்க்குமிடத்து ஒப்பந்தம் நலன்களை விளைவிப்பதாகத் தோற்றமளித்தாலும் ஒப்பந்தத்தில் கையாளப்பட்டுள்ள சொற்களும் மறைந்திருக்கும் அமெரிக்காவின் நோக்கங்களும் இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கும். நாற்பது ஆண்டுகள் இந்தியா கட்டுப்பட்டிருக்க வேண்டிவரும்.

மிக முன்னேறிய நாடுகளும் அணுசக்திப் பயன்பாடு தீங்குவிளைவிக்கும் என்று உணர்ந்திருக்கும் போது இந்தியா ஒப்பந்தத்தை நிறைவேற்ற முற்படுமேயானால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போலாகும். எனவேதான் இந்திய இடதுசாரிகள் ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறார்கள். நோம்சோம்ஸ்கி போன்ற மேலை நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்திற்குத் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கின்றது என்றால் அது அவ்வவ்நாடுகளின் பொருளாதார வலிமையையும் திறமையையும் பொறுத்தது. மக்கள் சீனத்தின் நிலைமை இதுவே.

பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது என்றால் காரணம் வேறாக இருக்க வேண்டும். காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு நல்ல முடிவெடுக்கும் என்று கருதுவோம்.நிர்பந்தத்தின் காரணமாக இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை உருவாயிற்று. இந்தப் பின்புலத்தில் தான் அமெரிக்க இந்திய ஒப்பந்தம் பற்றிய நோக்கம், அச்சம் இயல்பாகவே பிறக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவின் தேவை என்று கருதுபவர்களும் அது எந்த விதத்திலும் இந்தியாவின் அணு ஆயுத சோதனையைக் கட்டுப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்து வருகின்றனர் அணுகுண்டு சோதனை 1974, 1998 ஆகிய ஈராண்டுகளில் நடைபெற்றதை மக்கள் அறிவர். ஆனால் இடதுசாரி இயக்கம் குறிப்பாகப் பொதுஉடைமை இயக்கமும் மனித சமூக நலன்களை முன்னிட்டு அணு ஆயுத உற்பத்தித் தடை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பல்லாண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளது. ஒருபுறம் அணுவின் தீங்கைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் போதே மறுபுறம் அணுசக்தியின் பயன்பாடு எந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுவே இந்தியப்பொது உடைமை இயக்கத்தின் நிலைபாடு.

இனி 123 ஒப்பந்தம் கூறுவது என்ன? அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா மிஞ்சும் படி ஆக வேண்டும். ஆனால் அது எந்தவிதத்திலும் அமெரிக்காவின் தற்காப்பையோ, இறையாண்மையையோ பாதிக்கலாகாது. அதாவது அணுசக்தி பற்றிய வாணிப ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஊறுவிளைத்தலாகாது. இந்திய வெளிநாட்டுக் கொள்கை பிரச்சினைகள் பற்றி அமெரிக்கா குடியரசுத் தலைவர் நற்சான்று வழங்கி அமெரிக்கக் காங்கிரசுக்கு அறிக்கை தர வேண்டும். அமெரிக்கா இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்குத் துணைசெய்யும் அடுத்த பத்தாண்டுகளில் மின் உற்பத்திக்காக மட்டும் 12 லட்சம் கோடி டாலர் தேவைப்படும்.

இதில் அமெரிக்காவின் பங்கு கணிசமாக இருக்கும். அதாவது அணுமின்சக்தி உற்பத்தி 4000 மெகாவாட்டிலிருந்து 20,000 மெகாவாட்டுக்கு அதிகரிக்க வேண்டும். இதில் அமெரிக்காவின் பங்கும் தேவை. வேண்டிய எரிபொருள் கருவி காரணங்கள் எல்லாம்தர வேண்டியிருக்கும். இதுவே ஒப்பந்தம் கூறுவது பயன்பாட்டுப் பொருளியல் தோரியம் இந்தியாவில் போதிய அளவுக்குக்கிட்டும். உலக தோரிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 24 சதம். ஆனால் அதே போது இதைவிட முக்கியமான யுரேனியம் உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு ஒரு சதம் தான்.

எனவே யுரேனியம் பிறநாடுகளிலிருந்து பெற வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்குண்டு. அமெரிக்காவின் அணுசக்தி உதவி இயற்கை எரிவாயு. எண்ணெய் இரண்டின் தேவையை மிகுதியாகக் குறைக்கும். இதனாலேயே எரிசக்தி எண்ணெய் வளம் இந்தியாவில் தேவையான அளவு கிடைக்காததனால் அமெரிக்க இந்திய அணு மின் ஒப்பந்தம் வரவேற்கப்பட்டுப் பாராட்டப்படுகிறது. செலவிடப்பட்ட எரிபொருளிலிருந்து புளுடோனியம் எடுக்க உரிமையில்லாததனால் ஒப்பந்தத்தால் அதிக பயன் கிடைக்க முடியாது. மேலும் செலவிடப்பட்ட எரிபொருளை மீண்டும் பயன்பாட்டுக்குத் தகுதியாக்க வேண்டு மானால் இதற்கும் தனிகவனமும் ஒப்பந்தமும் வேண்டப்படுகின்றன. மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் இயங்கும் அணுசக்தி உலைகளில் 14 சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் உட்படும் என்று இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

நலன்கள் ஒருபுறமிருக்க வழக்கமாகத் தொன்று தொட்டு நீர், சூரியவெப்பம், காற்றாலை மூலம் பெறப்படுகின்ற மின் சாரத்துக்குத் தேவையான உலைகள் இயந்திரங்கள் போன்ற வற்றை விட அணுஉலைக்குத் தேவையான இயந்திரங்களும் மூலப் பொருட்களும் வேறுபடுகின்றன. கழிவுப் பொருள்களை அகற்றுவதற்கும் தேவையானவற்றைப் பயன்படுத்துவதற்கும் தேவையில்லாதவற்றை அழிப்பதற்கும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான செலவினங்கள் மிகுதியாக யிருக்கும். அணு உலைகளால் ஏற்படும் கசிவினால் மனித குலத்துக்குப் பேராபத்து நேரிடும். ரஷ்ய நாட்டில் செர்னபில் ஆலைக் கழிவினால் ஏற்பட்ட தீங்குகள் உணரப்படுதல் வேண்டும். விபரீதங்களையும், ஆபத்தையும் தடுக்க அவற்றால் ஏற்படும் அழிவுகளைச் சரிசெய்ய தரவேண்டிய விலை மிக அதிகமிருக்கும்.

இவை எல்லாவற்றையும் தாங்கக்கூடிய மனிதத் திண்மையும் பக்குவமும் இந்தியா பெற்றுள்ளது என்ற போதிலும் ஒப்பந்தத்தின் பலனாகக் கிடைக்கும் நலன்கள் பிறமுறைகளில் பெறுவதைவிட குறைவாகவே இருக்கும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் “Marginale” நிலக்கரி பயன்பாட்டு வழி 66 சதவீதமும் சூரியசக்தி காற்றாலை வழி 26 சதவீதமும் அணுஉலைமூலம் 5 சதவீதமும் கிடைக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதும் அதனால் இந்தியா பயன் அடைவதும் அமெரிக்க நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட ஹைய்டு திட்டத்தினால் தீர்மானிக்கப்படும். இந்தியா சுதந்திரமாகத் தனித்து இயங்கும் உரிமையை இழந்துவிடும். மேலேழுந்தவாரியாகப் பார்க்குமிடத்து ஒப்பந்தம் நலன்களை விளைவிப்பதாகத் தோற்றமளித்தாலும் ஒப்பந்தத்தில் கையாளப் பட்டுள்ள சொற்களும் மறைந்திருக்கும் அமெரிக்காவின் நோக்கங்களும் இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கும். நாற்பது ஆண்டுகள் இந்தியா கட்டுப்பட்டிருக்க வேண்டிவரும்.

மிக முன்னேறிய நாடுகளும் அணுசக்திப் பயன்பாடு தீங்குவிளைவிக்கும் என்று உணர்ந்திருக்கும் போது இந்தியா ஒப்பந்தத்தை நிறைவேற்ற முற்படுமேயானால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போலாகும். எனவேதான் இந்திய இடதுசாரிகள் ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறார்கள். நோம்சோம்ஸ்கி போன்ற மேலை நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்திற்குத் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கின்றது என்றால் அது அவ்வவ்நாடுகளின் பொருளாதார வலிமையையும் திறமை யையும் பொறுத்தது. மக்கள் சீனத்தின் நிலைமை இதுவே. பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது என்றால் காரணம் வேறாக இருக்க வேண்டும். காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு நல்ல முடிவெடுக்கும் என்று கருதுவோம்.

கவிஞர் எச். ஜி. ரசூலின் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரை ஒரு ஆய்வரங்கில் படிக்கப்பட்டு, உயிர்மை இதழில் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் முன் வைத்த வாதங்களின் அடிப்படையிலே இந்தக் கட்டுரையை ரசூல் வடிவமைத்துள்ளார். இதற்கு தன்னிலை விளக்கமான ரசூலின் விளக்கத்தை பரீசிலிக்காமல் ஊர் விலக்கம் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு தனி நபருக்கான மத வாழ்வுரிமையை இந்த செயல் மறுப்பதாக உள்ளது. ஜனநாயகரீதியாக மாற்றுக் கருத்துகளை கேட்கவும், விவாதிக்கவும் நிலபிரபுத்துவ, முதலாளித்துவ சமூகத்தில் இடமில்லை என்பது மீண்டும் நிருபணம் ஆகியுள்ளது. இந்து அடிப்படைவாதம் எவ்வளவு தவறானதோ அதே அளவு இஸ்லாமிய அடிப்படை வாதமும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை ஆகியவைகளை கணக்கில் கொண்டு ரசூலின் மீது ஊர் விலக்க நடவடிக்கையை மறுபரீசலனை செய்ய உங்கள் நூலகம் கேட்டுக்கொள்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com