Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ணகோவிந்தன்


பொது நூலகத்துறை வளர்ச்சியில்

நூலகத்தில், தொடர்கட்டுரை நூலக அடுக்குகள் எப்படி அமையவேண்டும் என்பதை பார்ப்போம்.

இனி நூல்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து நூலகங்களில் வைப்பது, குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வைப்பது நாட்டுக்கும் மட்டுமின்றி மக்களுக்கும் நலம் விளைப்பதாகும். எல்லாப் பொருள்களைப் பற்றிய நூற்களையும் ஓரளவு வாங்கி வைக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எடுத்துச்செல்வதில் மக்கள் ஒரு ஒழுங்கினைக் கண்டுபிடிக்கவேண்டும், படிக்க வேண்டும் என்ற உணர்வும் பெறவேண்டும். விலையினை மட்டும் பொருளாக வைத்துப் புத்தகங்களை வாங்குவது கூடாது.

நல்லப் புத்தகங்களை உரிய விலை கொடுத்து வாங்க வேண்டும். விலைகளைக் கணக்காகக்கொண்டு புத்தகங்களை வாங்குவது பொருளாதாரத்தின் பகுதியாதலால் இதற்கு உரிய அக்கறையைச் செலுத்துதல் வேண்டும்.

மக்கள் மனங்கவரும் நூல்களைப் பற்றிய கருத்துக்கள் அறிந்து அதற்கேற்றபடி நூல்களை வாங்கவும், எல்லாத் தலைப்புகளை (subjects) பற்றிய நூல்களைப் பெறவும் முற்படவேண்டும்.இதனால் மக்கள் மனங்கவரும், நூல்களை மட்டுமே வாங்கவேண்டும் என்பதில்லை.எண்ணிக்கைக் குறைவு என்றாலும் எல்லாப் பொருட்களையும் பற்றிய புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன என்ற மனநிறைவு மக்களுக்கு ஏற்படவேண்டும்.

நூலகத்தில் “உயிருள்ள நூல்கள் உள்ளன” என்று ஊரார் உரைக்கவேண்டும்.

புத்தகங்களை வாங்கிப் பதிவு செய்யவும், பிரிவுப்படுத்தி வைக்கவும், நூலகங்களில் உரிய அக்கறை செலுத்தப்படவேண்டும். இந்த முறையில் கவனம் செலுத்தப் பட்டால்தான் நூலகத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நூலக ஆட்சித்துறையில் பின்வரும் ஐந்து பகுதிகள் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும்.

அவை :-

1). நூல்களைத் தருவதும், திரும்ப பெறுவதும் பற்றிய குறிப்புகள் எழுதிவைத்தல் (issues and return). 2). நூல் களை வாங்கிச் செல்பவர் பெயர்பட்டியல் (issues and register) உரியவற்றைப் பரிவுசெய்தல். 3). குறிப்பிட்ட நாளில் நூல்களைத் திருப்பித் தராவிட்டாலோ, நூல்களைத் தொலைத்து விட்டாலோ, அதற்குரிய அபராதம் விதித்தல். 4). நூலகத்தின் செலவுக்கணக்கு விவரம் தயாரித்தல். 5. பிற செலவினங்களைப் பற்றிக் குறிப்புகள் எழுதுதல்.

நூல்களைப் பிறருக்கு வழங்குவதில், பெரிய நூலகங் களிலும் சரி, சிறிய நூலகங்களிலும் சரி சீட்டு முறைதான் கையாளப்படுகிறது. நூலக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு ‘சீட்டுகள்’ (Box libraries) கொடுக்கப் பெறும். இரண்டு சீட்டுக்கள் கொடுக்கப்பட்டால் இரண்டு நூல்களை, ஒருவர் எடுத்துச் செல்லலாம்.

நூலகத்திற்குச் சென்று இரண்டு நூல்களை ஒருவர் எடுத்துச் செல்ல விரும்பினால், இந்த இரணடு சீட்டுக்களையும், நூல்கள் வழங்குபவரிடம் தந்துவிடுதல் வேண்டும், நூல்கள் வழங்குபவர் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, பின் புத்தகத்தின் அட்டையின் உட்புறத்தில் அட்டைப் “பையில்” சொருகி வைக்கப்பட்டிருக்கும் புத்தக சீட்டை (Book card) எடுத்து டிக்கட்டுடன் இணைத்து வைத்து, ஒழுங்கான முறையில் அடுக்கி வைத்துவிடுவார். புத்தக சீட்டானது, புத்தகத்தின் பெயர், அதன் ஆசிரியர், வகைப் படுத்திய எண் (classification number) வரிசை எண் (accession number) இவைகளைக் குறிக்கும் உறுப்பினர் டிக்கெட்டில் உறுப்பினர்களைப் பற்றிய முழு விபரமும் குறிக்கப் பெற்றிருக்கும்.

இந்த இரண்டு காரணங்களின் உதவியால், எடுத்துச் செல்லப்பட்ட புத்தகத்தின் பெயர், புத்தகம் எடுத்துச் சென்றவர் பெயர், எவரும் எளிதில் அறிந்துகொள்ளலாம். புத்தகத்தை திரும்பித் தரும்பொழுது, டிக்கெட்டோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும், புதியச் சீட்டினை எடுத்துப் பழைய படியும் புத்தகத்தில் வைத்து பின் ‘டிக்கெட்டு’ அதற்குரியவரிடம் திரும்பித்தரப்படும்.

2. இரண்டாவது முறை.

சிறு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு புத்தகங்களை வழங்குவதற்கும் இப்பட்டியியலில் (issue register) உறுப்பினர் பெயர், வயது, தகுதி, முகவரி முதலியன குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களிடமிருந்தும் காலம் தாழ்த்துபவர்களிடமிருந்தும், அபராதத்தொகை பெறுவதை ஒரு சிலர் விரும்பாமலிருக்கலாம், எனினும் நூலக ஒழுங்கு முறைக்கு அது ஏற்றதாகும். புத்தகத்தினை எடுத்துச் செல்பவர், புத்தகத்தினை தொலைத்தால் அதற்குரிய விலை யினைத் தந்திடல் வேண்டும். அன்றாடம் ஏற்படும் தபால் செலவு போக்குவரத்துச் செலவு போன்றவைகளுக்கு ரசீதுகள் வைத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் பின்னர் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.

நூல்களை நூலகங்களுக்கு அனுப்பி, புத்தகம் பரிமாற்றம் முறை (Exchange Of Book periodicals)

நூலகங்கள் தாங்கள் வைத்திருக்கும் நூல்களைப் பிற நூலகங்களுக்கு அனுப்பி புத்தகப் பரிமாற்றம் செய்தல் நூலகத்துறையில் சிறப்பான இடத்தைப் பெறும். நூலகங்கள் இவ்வாறு புத்தகங்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னால் தங்கள் நூல்களைச் சிறுசிறு தொகுப்பாகப் பிரித்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு தொகுப்பும், ஒவ்வொரு பெட்டியில் அடங்கிவிடும். இவ்வாறு பெட்டிகளில் அடங்கும் நூல் தொகுதிக்கு ஆங்கிலத்தில் ‘Box libraries’ என்று கூறப்படும். கையடக்கமான பதிப்பு என்று குறிப்பிடுவது போல, இந்த நூல் தொகுதியினைப் பெட்டியினுள் அடங்கும், அடக்கமான நூலகம் என்று கூறலாம்

இத்தகைய நூலகங்களுக்குத் தனித்தனியான புத்தகப் பட்டியலும், பதிவு எண்ணும் தரப்படுகின்றன. ‘அ’ எண்ணுள்ள பெட்டி கிளை நூலகத்திற்கு அனுப்பிவிட்டால் அப்பெட்டி திரும்ப வந்த பிறகுதான் ‘ஆ’ எண்ணிட்ட நூலகம் மீண்டும் அனுப்பப்படும். இங்ஙனம் சுற்றி வரும் நூலகங்களால் நாட்டில் பெரும் பயன் விளையும், சொந்தமாக ஊர்தி வைத்துக் கொண்டு, இவைகளை அனுப்ப முற்படுவதைக்காட்டிலும், புகை வண்டிப் போக்குவரத்துப் பெரு நலம் பயன் ஏற்படும்.

காரணம் சிற்றூர்களிலும், பேரூர்களிலும் கிளை நூலகங்கள் பரவி இருப்பதால் முன் குறிப்பிட்ட முறையில் எளிதில் பெட்டி நூலகங்களை அனுப்ப வாய்ப்பு அளிக்கின்றன. அனுப்பிடும் பெட்டியின் மீது அச்சிட்ட தாளை ஒட்டி முகவரியினைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

அனுப்பப் பட்ட நூல்கள் பயன்படுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னால் மீண்டும் நூல்களை அனுப்புதல் கூடாது.

புத்தக எண்ணிக்கைக்கும், மக்கள் மன வளத்திற்கும் ஏற்பப் பெட்டி நூலகத்தினைப் பயன்படுத்துவதற்குரிய காலத்தைத் தலைமை நூலகம் ஆராய்ந்து குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக் காட்டு நூறு புத்தகங்களைக்கொண்ட பெட்டி அனுப்பப்படுவதனால், மாதத்திற்கு ஒரு ஏடு மாற்றிக்கொள்ளலாம். நாம் முன்பு கூறியதுபோல தலைமை நூலகம், கிளை நூலகங்கள் பயன் படுத்தும் மக்கள் கருத்திற்கு ஏற்ப, காலத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

புத்தகங்களைத் திருப்பி அனுப்பப் பட்டப் பிறகு அவைகளைத் தலைமை நூலக அலுவலகம் சரிபார்த்துப் பதிவு செய்கிறது. புள்ளி விவரக் கணக்கிற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. புத்தகங்கள் காணாமற்போனாலும், பாழ்பட்டாலும் அதற்குரிய விளக்கங்களைத் தராதுபோனால் அவைகளைப் பற்றியும், அந்த நூலகத்துறை அதிகாரி பற்றியும் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட வேண்டும்.

மாவட்ட நூலகத்துறை அதிகாரியை அணுகுவது எவ்வாறு?

உள்ளூர் நூலகக்குழுவினரும், உள்ளூர் நூலக அதிகாரியும், மாவட்ட நூலகத்துறை அதிகாரியும் (Dt.librarian) தொடர்புகொள்வது இன்றியமையாததாகும். காரணம், அந்தத் தொடர்பில்தான் நூலகத்துறையில் நல்ல முடிவு காணப்படும். மாவட்ட நூலகத்துறை அதிகாரி அந்தத் தொடர்பை விரிவுப்படுத்திக்கொள்ள சிற்றூர்களிலும், பேரூர்களிலும், விளங்கும் கிளை நூலகங்களுக்குச் சென்று உள்ளூர் நூலகக் குழுவின் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மக்களிடையில் நூலகத்துறை அதிகாரி நெருங்கிப் பழகுவதன் மூலம், மக்களுக்குத் தேவையான நூல்களைப் பற்றியும், நூலகம் பயன்படவேண்டிய முறைகளைப் பற்றியும் கேட்டறிந்து நூலகத்துறைக்கு ஆவணம் செய்திட முடியும். ஒவ்வொரு இடத்தைச் சேர்ந்த மக்களுக்கும் ஒவ்வொரு விதமான மன உணர்வு இருத்தல் உலக இயல்பு. அதை அறிந்துக்கொண்டு மக்கள் மன உணர்விற்கு ஏற்ப நூலகத்தை விரிவுபடுத்தவேண்டும். சிற்றூர்களிலும், நூலகங் களை ஏற்படுத்துவதோடு எழுதப் படிக்க மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரூர்களில் வேண்டுமானால் இந்தப் பிரச்சாரம் தேவையற்றதாக இருக்கலாம்.

கல்வித்துறையில் இருண்டு கிடக்கும் இந்தியாவில் நூற்றுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு பேர்தான் படித்தவர்கள், இந்த நிலையில் அறிவுத்துறையின் வளர்ச்சிக்குச் சிற்றூர்களிலும் பிரச்சாரம் சிறந்த அளவில் வேண்டப்படுகின்றன.

அந்தப் பணியினால் கல்லாமை என்னும் பிணி போக்கப்படும். அறியாமை என்னும் மூடுபனி விலக்கப்படும். பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி அறிவு வளர்ச்சிக்கும் அரிய வழிகாட்டியாகவும் நூலகம் விளங்குகின்றது என்று மக்கள் எண்ணி அறிவாலயத்தின் மூலம் அன்புகொண்டு அறிவது நூலக அதிகாரியின் கடமை என கைக்கொள்ளல் வேண்டும்.

கிளை நூலகங்கள் செய்யவேண்டிய பணி

ஊர்க்கிளை நூலகங்களின் குழுக்கள் தங்கள் கருத்துக்களையும், தேர்வுகளையும் அவ்வப்போது தலைமை நூலக அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். குறிப்பிட்ட காலங்களில் கிளை நூலகங்கள் தங்கள் கருத்துக்களை அறிக்கைகளாகத் தருதல் சில இடங்களில் உண்டு, சில நேரங்களில் தலைமை நூலக அலுவலர்கள் கூட கிளை நூலகங்களுக்கு அறிக்கை அனுப்புமாறு கேட்பது உண்டு. அந்த அறிக்கை, நூலகம் பயன்படும் முறைகளையும், ஆலோசனை களையும், மக்கள் விரும்பும் நூல்களையும் அவர்கள் விரும்பும் கருத்துக்களையும், கல்வி வளர்ச்சிக்காக நூலக உதவிபுரியக் கூடிய நிகழ்ச்சி இருந்தாலதனையும் குறிப்பிடல் வேண்டும். சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு குழுவும், தாங்கள் புரிகின்ற பணி, தங்கள் பகுதிக்கு மட்டும் என்று எண்ணாமல் பொதுவான நூலக வளர்ச்சி துறைக்கே தங்கள் பணி அழகிய அணியிடும் என்று எண்ணி ஓயாது உழைக்கவேண்டும் என்பது நூலகத்துறையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

எனவே நூலகத்துறையின் அமைப்பு முறையும், செயல் முறையையும் விரிவாகப் பார்த்தோம், இனி நூலகத்தை நவீனப்படுத்தும் முறையைப் பார்ப்போம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com