Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

அறிவுத்திருவிழா
காந்திகண்ணதாசன்

மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பப்பாசியின் தலைவரும் கண்ணதாசன் பதிப்பகம் உரிமையாளருமான திரு. காந்திகண்ணதாசன் அவர்களை உங்கள் நூலகத்திற்காக சந்தித்தோம். அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள்....

சந்திப்பு - எஸ். சண்முகநாதன்


பப்பாசி ஆரம்பித்து கடந்த 30 ஆண்டுகளில் சென்னையைத் தவிர வேறு நகரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது.

29-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சன்.டிவி நிருபர் என்னிடம் இதுபோல பிரம்மாண்டமான ஒரு புத்தகக் கண்காட்சி தென்தமிழகத்தில் நீங்கள் ஏன் நடத்தக் கூடாது? என்று கேட்டார். அது என் மனதினிலிருந்து கொண்டே இருந்தது. நிறைய நேரங்கள் நினைத்தும் யோசித்தும் பார்த்து கொண்டிருந்தேன். ‘முடியும்’என்று தோன்றினாலும் ‘முடியாது’என்று தோன்றுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் பப்பாசியால் இது நிச்சயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது. காலம் கனிந்து வந்தது. மதுரையில் புதிய ஆட்சியாளராக திரு. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் பொறுப்பேற்று கொண்ட பிறகு, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வழக்கமாக வரும் அவர், அதைப்போல் புத்தகக் கண்காட்சி மதுரையில் ஏன் செய்யக் கூடாது என்று நினைத்தார். எண்ணங்களின் வலிமை இதுதான். மதுரையில் புத்தகக் கண்காட்சி நடத்த பப்பாசிதான் சிறந்த நிறுவனம் என்று கருதி எங்களையும் நினைத்துக் கொண்டார். ஒரு நல்ல விஷயத்தைச் செயல்படுத்த நல்ல எண்ணம் இருந்தாலே போதும். மற்றவை தானாக நடக்கும்.

மதுரை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடத்துவதற்கு தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி...

மதுரைப் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடைபெறும். மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு தருகிறார்கள். அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சி பற்றிய செய்திகளைப் பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விளம்பரம் மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி என்பதற்கு 150 கடைகள் மட்டும் தருவதாக இருந்த நாங்கள் 180 கடைகள் வரை கொண்டு போயிருக்கிறோம். தமிழக அரசும் அனைத்து மாவட்ட நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு தருகின்றன. மிகப் பெரிய அளவில் தொலைக்காட்சி, கேபிள் டிவி, பத்திரிகைகள் என விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை இருக்கும் மக்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். வெற்றிகரமாக ஆகவே மதுரை புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் நடைபெறும்.

சென்னையை ஒப்பிடும்போது மதுரை புத்தகக் கண்காட்சி எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்.

சென்னையையும் மதுரையையும் புத்தக விற்பனையில் ஒப்பிட முடியாது. காரணம் சென்னையில் பல்வேறு மாநிலத்தவர்கள் அதிகமான அளவில் இருக்கிறார்கள். படித்தவர்களும், மிகப் படித்தவர்களும், கம்ப்யூட்டர் மென்பொருளில் வேலைப் பார்ப்பவர்களும், அதிகம் சம்பாதிப்பவர்களும் சென்னையில் இருக்கிறார்கள்.
மதுரைப் புத்தகக் கண்காட்சி என்பது தென் தமிழகத்துக்கு முதல் முயற்சி. இதில் மிகப் பெரிய அளவு விற்பனையைவிட மிகப் பெரிய அளவில் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு செல்கின்றோம். புத்தகங்கள் வாழ்க்கைக்கு மிகப் பெரிய அளவில் உதவும் என்கின்ற செய்தி இந்தக் கண்காட்சி மூலமாகத் தென்தமிழகம் முழுக்கப் பரவும், இவ்வளவு இலட்சக்கணக்கான இவ்வளவு வகையான புத்தகங்கள் தென்தமிழகம் காணப் போவது இதுதான் முதல்தடவை. ஆகவே சென்னையோடு ஒப்பிடுகையில் மதுரைப் புத்தகக் கண்காட்சி ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வுக் கண்காட்சியாகும்.

சென்னையை, மதுரையை அடுத்து வேறு நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்களா?

மதுரை ஆட்சியாளர் போல் நல்ல வாசக நண்பரும் புத்தகங்களை நேசிப்பவங்களும் கிடைத்தால் நிச்சயம் எங்களால் இன்னொரு புத்தகக் கண்காட்சி எங்கு வேண்டுமானலும் நடத்த முடியும்.

மற்ற நகரங்களில் தொடர்ச்சியாகப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதால் சென்னைப் புத்தகக் கண்காட்சி விற்பனை பாதிக்கப்படுமா?

நான் மூன்றாவது கேள்விக்குப் பதில் சொன்னது போல் எத்தனை புத்தகக் கண்காட்சிகள் இந்தியாவில் நடந்தாலும் எத்தனை புத்தகக் கண்காட்சிகள் தமிழகத்தில் நடந்தாலும், எத்தனை புத்தகக் கண்காட்சிகள் தனியார் நடத்தினாலும் பப்பாசியால் நடத்தப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி உலகத்திலேயே தனித்தன்மை வாய்ந்தது. சென்னை வாசகர்கள் எங்களது புத்தகக் கண்காட்சியை நேசிப்பவர்கள். ஆகவே சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விற்பனை மற்றப் புத்தகக் கண்காட்சிகளினால், மேலும் விழிப்புணர்வு பெற்று மிகப் பெரிய அளவில் புத்தக விற்பனையில் சரித்திரம் படைக்கும்.

எதிர் காலத்தில் புத்தக விற்பனை புத்தகக் கண்காட்சியை சார்ந்து இருக்குமா?

புத்தக விற்பனை என்பது படிப்பவரின் மன ஓட்டத்தைப் பொருத்தது. புத்தகக் கண்காட்சியில்தான் அவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசகர்கள் வருடந் தோறும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சி என்பது அந்த வாசகரைக் கவுரவப்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற ஒரு திருவிழாவாகும். இதன் செய்தி, “வாசகராகிய நீங்கள், தேடித் தேடி நூல்களை வாங்குகின்றீர்கள். உங்களுக்கு எங்களது அன்பைத் தெரிவிக்கும் முகமாகவும் உங்களுக்கு காணிக்கையாகவும் அனைத்துப் புத்தகங்களையும் உங்களது ஊரில் கொண்டு வந்து உங்கள் முன் வைத்திருக்கிறோம்” என்பதைக் காட்டுவதற்காகவே புத்தகக் கண்காட்சி. எக்காலத்திலும் புத்தகக் கண்காட்சி என்பது எங்களது வாசகர்களை கவுரவப்படுத்த மட்டும்தான். விற்பனை என்பது அதன் தொடர் நிகழ்வு புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், தனக்காகத் தான் இங்கே ஓர் “அறிவு திருவிழா” நடக்கிறது என்பது, வாழ்க அந்த வாசகர், வாழ்க பதிப்புத்துறை!

ஜெய்ஹிந்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com