Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

நூல் அறிமுகம்

சித்திரமும் மவுஸ் பழக்கம் கோரல்டிரா விளக்கப் புத்தகம்

கடந்த காலங்களில் கணிப்பொறியானது கற்றறிந்தவர்களுக்கும் ஆங்கில அறிவு அதிக முள்ளோருக்கும் மட்டுமே பயன்படும் என்ற நிலை இருந்தது. பிறகு சற்றே கீழிறங்கி கூடிடிடள, ஊடிஅஅயனேள போன்றவற்றை புரிந்து கொள்ள அடிப்படை ஆங்கில அறிவு இருந்தால் போதும் என்ற நிலை வந்தது.

இப்போது அதுவும் கூட இல்லாமல் அழகு தமிழில் அனைத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது. கணிப்பொறி கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு விரிந்து பரவியுள்ளது.

கணிப்பொறித்துறை அச்சு ஊடகத் துறையிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போது குறுவட்டு எனப்படும் ஊனுயில் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை நேரத்தையும் இடத்தையும் செலவையும் வெகுவாக மிச்சப்படுத்துகிறது.

அவ்வாறு கணிப்பொறியில் பதிவு செய்யும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூலாக ஆசிரியரின் முதல் நூலான பேஜ்மேக்கர் அமைந்தது.

அதற்கு அடுத்த நூலான சித்திரமும் மவுஸ் பழக்கம் கோரல்டிரா விளக்கப் புத்தகம் புத்தக வடிவாக்கத் துறையில் உள்ளவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசையும் பெற்றது.
இப்போது அதற்கு அடுத்த பதிப்பான கோரல்டிரா 13 ஐ விளக்கும் நூலை வெளியிட்டுள்ளார் ஆசிரியர் வீரநாதன்.

சித்திரமும் மவுஸ் பழக்கம் என்ற தலைப்பிலேயே கோரல்டிரா 13 ல் உள்ள பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் கோரல்ஃபோட்டோ பெயிண்ட் குறித்த செயல்பாடுகள் பயன்பாடுகள் கடைசி அத்தியாயத்தில் அழகான வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் டூல் பாக்சில் உள்ள ஒவ்வொரு டூலின் செயல்பாடுகளும் ஒவ்வொரு கட்டளைகளும் அவற்றை இயக்குவது குறித்த விளக்கப்படங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. கணிப்பொறி வலைத்தளம் வழியாக உலத்தையே உள்ளடக்கி வைத்திருக்கிறது.

ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல் கோரல்ட்ராவின் பயன்பாட்டில் குறைந்த அளவே செயல்பாட்டில் வைத்துள்ளோம். நூலைப் படிக்கும்போதுதான் கற்றது மவுஸ் அளவு கல்லாதது கணிப்பொறி அளவு என்று ஒரு புதுமொழி உருவாக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நுணுக்கமாக ஒரு மாணவனின் கண்ணோட்டத்தில் ஆசிரியர் அனுபவத்தில் நூலை விவரித்திருக்கிறார். அச்சு ஊடகத்துறையின் அபார வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் அட்டைப் பட வடிவமைப்புக்கு அவசியம் தேவையான அடிப்படை நூல் என்று சொல்லலாம்.

சித்திரமும் மவுஸ் பழக்கம் கோரல்டிரா எக்ஸ் 3
ஆசிரியர் : ஜெ. வீரநாதன், விலை ரூ. 350,
வெளியீடு : பாலாஜி கணினி வரைக்கலைப் பயிலகம்,
167, போலீஸ் கந்தசாமி விதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோவை - 45,


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com