Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

ஃபிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு என். சி. பி. எச். சார்பில் என். சி. பி. எச் செயல் இயக்குநர் திரு. ஜி. துரைராஜ் கலந்துகொண்டார். அவரை உங்கள் நூலகத்திற்காகச் சந்தித்தபோது,

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சி என்பது பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளருக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் மிக முக்கியமானது தான் என்றே நேரில் பார்க்கும்போது உணர முடிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு ‘கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கௌரவிக்கப்படும். இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இந்தப் புத்தகக் கண்காட்சி எட்டு அரங்கங்களில் அமைக்கப்பட்டிருந்தது. ஏழு அரங்குகங்களில் துருக்கி, ஜெர்மன், ஸ்பேனிஸ், உருது, சமஸ்கிருதம், ருஷ்யா, லத்தீன் என்று பல மொழிப் புத்தகங்கள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன. எட்டாவது பிரிவில்தான் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ்ப் புத்தகங்கள் காணப்படவில்லை. இக்குறை வருங்காலத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

பொதுவாக ப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சி என்பது பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நூல் ஆசிரியர்கள் சங்கமிக்கும் இடம் என்றாலும் அவரவர் புத்தகங்களைச் சந்தைப்படுத்தவும், மொழிபெயர்க்கவும் வாய்ப்பாக உள்ளது. இங்கே ஒரு நூலை மொழிபெயர்க்க, எவ்வளவு தொகை வேண்டும் என்று பேசி முடிக்கப்படுவதைப் பார்க்க முடிந்தது. அங்குள்ள பதிப்பாளர்களைப் பொறுத்தவரை நூலின் ஆசிரியருக்கும் எடிட்டருக்கும் முக்கிய பங்களிக்கப்படுகிறது. உலகமயமாக்கலைப் பற்றி அரசியல் ரீதியாகப் புத்தகங்கள் பெரும்பாலும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

இங்கு எல்லாத் தலைப்புகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. உலக அளவில் மார்க்சியப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்களான ஒசன் (Ocean Press) வெர்ஸோ, புளுட்டோ மற்றும் கியூபா, வெனிசூலா, வியட்நாம் ஆகிய நாடுகளின் நிறுவனங்களில் என். சி. பி. எச். முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தியது. வருகிற பிப்ரவரி மாதத்தில் கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க என். சி. பி. எச். க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடைசி இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர். கடைசி நாளன்று பதிப்பாளரோ அல்லது நூல் ஆசிரியரோ தாம் கொண்டுவந்த புத்தகங்களைத் திருப்பி எடுத்துச் செல்லாமல் அங்கேயே விட்டு விட்டுச் சென்றதைப் பார்க்க முடிந்தது.

‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’

என்று மகாகவி பாரதி சொன்னதற்கிணங்க இந்தப் புத்தகக் கண்காட்சி நம்முடைய, அயலாருடைய புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ள, புதிய நூல்களை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்தியாவிலிருந்து அதிகமாக டெல்லி பதிப்பகங்கள் வந்திருந்தன என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் வரலாற்றாசிரியர் சால் பிரடிலேண்டர் (Saul Friedlander) ‘நாசி இனப் படுகொலை’ பற்றி எழுதிய புத்தகத்துக்கு வருடாந்தர ‘ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில்’ முதல் பரிசான சமாதானப் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இவ்வரலாற்றாசிரியர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பரிசுத் தொகை 35,500 அமெரிக்க டாலர்கள் புத்தகக் கண்காட்சியின் கடைசி நாளன்று வழங்கப்பட்டது.

சால் பிரடிலேண்டர் அந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் மனக்குமுறல்களுக்கும், வேதனைக்கும் குரல் கொடுத்துள்ளார். அழிந்துபோன மக்களின் நினைவாக உள்ளது. வாழும் உரிமை பறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்குப் பரிசு அளிக்கப்பட்டது என German Book Trade Association தெரிவித்துள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com