Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

அயலகத்தில் தமிழ் புத்தகங்கள்
- எஸ். மணவாளன்

சிங்கப்பூர்

அழகான சிறிய தீவு நகரம் ஆகும். இங்குப் பேசும் மொழிகள் ஆங்கிலம்-சீனம்-தமிழ். பள்ளிகளில் இந்த மூன்று மொழிகளில் அவரவர்களுடைய தாய் மொழியில் படிக்கலாம். மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளனர். இங்கு இரண்டு பல்கலைக்கழகங்கள், 4 கல்லூரிகள், 50க்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த இடங்களில் தமிழ்த் துறை உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட புத்தகம், எழுதுபொருள் நிறுவனங்கள் உள்ளன. பள்ளிப்பாட நூல்களை அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர். இந்தியாவிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் புத்தகங்கள் இறக்குமதி செய்கிறார்கள். உணவுப் பொருள்கள் எல்லாம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். போக்குவரத்து வசதிகள் நன்றாக உள்ளன. “தமிழ்முரசு” என்னும் நாளிதழ் வருகிறது. தொழில்துறை நன்றாக உள்ளது. இது ஒரு வியாபாரத் தலமாகும்.

மலேசியா

இந்தியாவைப் போன்று ஒரு பரந்த நாடு. ஜொகூர், கிளாங், ஐ.பி.ஓ. பெனாங், கோலாலம்பூர், பிரிக்பீல்டு போன்றவை முக்கிய நகரங்களாகும். இங்கு மலாய், சீனம்-ஆங்கிலம்-தமிழ் நான்கு மொழிகள் உள்ளன. இன்னும் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்று கூறுகின்றனர். இங்கு 300க்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. “மலேசிய நண்பன்” எனும் நாளிதழ் வருகிறது. எல்லா இடங்களிலும் புத்தக வியாபாரிகள் பரவலாக உள்ளனர். புத்தகங்களையும் இறக்குமதி செய்கிறார்கள். தமிழ் நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கல்வி நிறுவனங்களில் நூலகங்கள் உள்ளன. பெனாங் ஒரு அழகான நகரம். இங்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். உணவுப் பொருள்கள் அநேகமாக எல்லாம் உற்பத்தி செய்கிறார்கள். தோட்டத் தொழில் முக்கியமாகும். இந்தியாவிலிருந்து பல வகையான பொருள்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

இலங்கை

வடகிழக்கு மாவட்டங்களில் அதிகமாகத் தமிழ்க் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் அம்பாறை போன்ற இடங்களில் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்குத் தமிழ் மொழி போதிக்கிறார்கள். தற்போது கல்வி நிறுவனங்களில் சிங்களம் பேசுகிறவர்கள் தமிழ்மொழி கற்கவேண்டும். தமிழ்மொழி பேசுபவர்கள் சிங்களம் கற்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இங்குச் சிங்களம்-தமிழ்-முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் வாழ்கிறார்கள். இலங்கை ஒரு சிறிய அழகான தீவு நகரமாகும். இங்கு இனப்பிரச்சினையில் மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இங்குத் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. விவசாயம் உள்ளது. வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் தமிழ் நூல்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. O level, A level, University என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை B.M.I.C.H.-ல் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி இடம் பெற்றது. இந்தியாவிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன. குறிப்பாக நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா, உலக சுகாதார நிறுவனம் போன்றவை இடம் பெற்றன. நியூ செஞ்சுரி புக் ஹவுஸூம் பூபால சிங்கம் புத்தக நிறுவனமும் இணைந்து புத்தகக் கண்காட்சியில் பங்கெடுத்தன. 455 அரங்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. 288 புத்தக வெளியீட்டாளர்களும் விற்பனையாளரும் கண்காட்சியில் கலந்து கொண்டார்கள். கண்காட்சியில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் நூல்களுக்குக் கடந்த ஆண்டு விற்பனை நன்றாக இருந்தது.

இந்த ஆண்டு விற்பனை இல்லை. காரணம் வடகிழக்கு மாவட்டங்களிலிருந்து மக்கள் வரவில்லை. அரசு பாடசாலை நூலகங்களுக்குக் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், பாடசாலைகளிலிருந்து சரியான முறையில் புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்த முடியவில்லை. இலங்கையில் பத்துக்கும் மேற்பட்ட Leading Book Sellers உள்ளனர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆண்டு தோறும் இலங்கையில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்று வருகின்றது. இருபதுக்கும் மேற்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை என்.சி.பி.எச். பதிப்பித்துள்ளது.

பாவை நிறுவனத்தின் மூலம் பதிப்பித்துள்ள பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நூல்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. NCBH-ல் பதிப்பித்துள்ள கதைகள், மருத்துவ நூல்கள், குழந்தைகள் நூல்கள், அறிவியல் நூல்கள், இறையன்பு - அப்துல்கலாம் நூல்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. இங்கு முக்கியமாக நல்ல இலக்கிய நூல்களுக்கும், இடது சாரி நூல்களுக்கும் - முற்போக்கு எழுத்தாளர்களின் நூல்களுக்கும் வரவேற்புள்ளது. அதே போன்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான தாமரை, அறிவுப் பதிப்பக நூல்களுக்கும் வரவேற்பு உள்ளது. என்.சி.பி.எச்-ன் சகோதர நிறுவனமான Progressive Pubishing House (P) Ltd. இலங்கையில் செயல்படுகிறது. இங்கு ஆங்கிலம், தமிழ்-சிங்களம் ஆகிய மொழிகளிலுள்ள நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமாகிய டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய “Wings of Fire” எனும் நூலைச் சிங்கள மொழியில் Progressive Pubishing House-ம் இணைந்து பதிப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் தற்போது புத்தகங்கள் நன்றாக அச்சடிக்கிறார்கள். இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். எடுத்துக்காட்டாக பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் மௌனகுரு, டொமினிக் ஜீவா, புலவர் கனக ரத்தினம், பேராசிரியர் மூக்கையா, பேராசிரியர் சண்முகதாஸ், அகஸ்தியர், தில்லை நடராஜா, செங்கை ஆழியான் போன்றோர். இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர்.

இலங்கையில் பதிப்பிக்கும் நூல்களை இந்தியாவில் விற்பனை செய்யப் புத்தக வியாபாரிகள் முன் வரவேண்டும் என்கிறார்கள். மேலும் இந்திய அரசு இலங்கையில் வெளியாகும் நூல்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிவழங்க வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இங்கு “வீரகேசரி”, “சுடர் ஒளி”, “தினகரன்” போன்ற தமிழ் நாளிதழ்கள் வெளிவருகின்றன. “மல்லிகை” என்னும் மாத சஞ்சிகை வெளிவருகிறது. என்.சி.பி.எச். நூல்களுக்கும் அதேபோன்று, சமூக விஞ்ஞானம், தாமரை, உங்கள் நூலகம் போன்ற சஞ்சிகைகளுக்கும் நல்ல இலக்கிய நூல்களுக்கும், அறிவியல் நூல்களுக்கும், பாட சம்மந்தமான நூல்களுக்கும், குழந்தைகள் நூல்களுக்கும் நல்ல வரவேற்புள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com