Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ணகோவிந்தன்

பொது நூலக வளர்ச்சி / லண்டன் மாநகரில் இந்திய நூலகம்

இதற்கு இடையில் கம்பனியார் லண்டனிலேயே இந்திய நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினர். பழம் பொருள் நிலையம் ஒன்றை இதனுடன் இணைத்து, இவ்விரண்டுக்கும் தலைவராக ‘சார்லசு வில்கின்’, என்பவரை நியமித்தனர். இவருக்கு 200 பவுன்கள் ஆண்டுச் சம்பளமாகக் கொடுத்தனர்.

முதலில் இங்கு வந்து சேர்ந்த பொருள்கள் மூன்று யானை மண்டை ஓடுகள் தான். பாரசீகத்தில் எழுதப்பட்டது “மொகல் சரிதம்” அடங்கியதுமாகிய கையெழுத்துச் சுவடிகள் பின்பு இங்கு அனுப்பப்பட்டன. “ராபர்ட் ஆர்ம்” என்பவர் பல அரிய நூல்களைத் திரட்டித் தந்தார். “மேசர்பீட்சன்” என்பவரால் திப்பு சுல்தானின் நாட்குறிப்பும், “வெள்ளைக்காரனைக் கீழே தள்ளி அறைவது போல் அமைக்கப் பெற்ற ஒரு புலியின் பொம்மையும் அனுப்பப்பட்டன”.

மேலும் பல மண்டை ஓடுகளும், பழைய நாணயங்களும் சிலைகளும், திராவகத்தில் போட்டு வைத்த பறவைகளும் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டன. இந்தியாவில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள் நூற்களையும், ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்து அனுப்பினர்.

இதில் குறிப்பிடத்தக்கவர்கள் : கர்னல் மெக்கென்ஸி, வாரன் ஏசுடிங்சு, ஹாஜ்சன், பிலிப்பிரான்சு, லீடன், சர்வில்லியம் ஜோன்சு, கோல்ரூப், கர்னல் பவர் போன்றவர்களாவர்.

இதற்கிடையில் கி.பி. 1867ல் இந்திய நூற்பதிப்புச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன்படி இந்தியாவில் வெளியிடப்படும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு படி இந்திய அலுவலக நூலகத்திற்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இதனால் எண்ணிறந்த நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றன. எனவே சட்டத்தில் ஒரு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

அதன்படி புத்தகப் பட்டியல் மாத்திரம் அனுப்பப்பட்டது. அந்த பட்டியலிலிருந்து தேவையான புத்தகங்கள் மட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டன. கி.பி. 1836ல் இதன் அதிகாரி யாக ஹொரேசு ஏமன் என்பவர் பதவியேற்றார். பொருட்காட்சி சாலையும், நூல் நிலையமும் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கி.பி. 1858ல் முதல் இதன் ஆட்சி பொறுப்பை ஆங்கில கம்பெனியிடமிருந்து அரசியலாரே ஏற்றுக் கொண்டனர். இந்த நூலகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் தரப்பட்டிருக்கும் கணக்கின்படி, இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட நூல்களும், 20,000க்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகளும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நூலகத்தில் இருந்த தமிழ் நூற்கள், ஏட்டுச் சுவடிகளின் எண்ணிக்கை 15,000 ஆகும்.

மேற்கூறிய நூலகமும், பொருட்காட்சி நிலையமும் இன்று நம் அரசியலாரிடமே திருப்பித் தரப்பட்டு விட்டன என்று அறிகையில் பெருமகிழ்வு கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தியக் குடி அரசில் சென்னை மாநில நூலகச் சட்டம் (Madras Public Libraries Act).

துள்ளித்திரியும் இளமைக் காலத்தில் பள்ளியில் நாம் பயிலும் கல்வி, பள்ளிப் படிப்பதற்குப் பின்னும் வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து கற்றாலொழியப் பயனற்றதாகி விடுகின்றது. பள்ளிப் படிப்பு முடிவு பெற்றதும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கலாம், ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணப்பாடுபடும் அவர்களுக்கு உலகில் வெளியாகும் நூல்கள் அனைத்தும் வாங்கிப் படிப்பதற்குரிய வழியோ வசதியோ இல்லை. பொருளாதாரத் துறையில் பின் தங்கிக்கிடக்கும் இச்சமூகம் நூல்களை விலை கொடுத்து வாங்கிப் பெறுதலும் இயலாது.

எனவே இக்குறையினைப் போக்கவும் நாடெங்கும் அறிவு நீரோடையைப் பாய்ச்சவும் ஏற்பட்டதே பொது நூலகமாகும். இவ்வுண்மையை உணர்ந்த நம் அரசியலார் பொதுமக்கள் நலனுக்காகப் பல பொது நூலகங்களைத் திறக்க வேண்டுமென் பதற்காக கி.பி. 1948ல். நூலகச் சட்டத்தினைக் கொண்டு வந்தனர். நூலகங்களின் வளர்ச்சியின் பொருட்டு இந்திய மாநிலங்களில் முதன் முதலாக நூலகச் சட்டத்தினைக் கொண்டு வந்து வெற்றியும் பெற்றது சென்னை மாநிலமாகும் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி பொங்குகிறது. கி.பி. 1950லிருந்து இச்சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1954 ஏப்ரல் 25ல் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி இந்தியாவில் வெளியிடப்படும் அத்தனை நூல்களையும் வெளியிடுவோர் அனைவரும் கல்கத்தாவிலிருக்கும் நம் தேசிய நூலகத்திற்கு ஒவ்வொரு படி அனுப்புதல் வேண்டும். மேலும் இனி நம் தாயகத்தில் டில்லி, பம்பாய், சென்னை நூலகங்களிலும், கல்கத்தா தேசிய நூலகத்தைப் போல், தேசிய நூலகங்கள் தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களுக்கு மேற்சொன்ன முறையில் நூல்களை அனுப்புதல் வேண்டும்.

சென்னை “கன்னிமாரா” நூலகமே, சென்னை மாநிலத் தாய் நூலகமாகும். டில்லியிலுள்ள இந்தியச் செயலகத்தார் (Secretariate Library) நூலகமே, டில்லியில் தலைமை நூலகமாகும்.

மேற் சொன்ன மசோதாவைக் கொண்டு வந்தவர், இந்தியக் கல்வி அமைச்சர் பாராளுமன்றச் செயலாளர் டாக்டர் ‘மன்மோகன்தாசு’ ஆவார். இந்த மசோதாவினை ஆதரித்து, முடிசூடாமன்னன், பண்டித நேரு பேசிய பின்னர் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. நேரு பேசுகையில் “இனி நம் தாயகத்தில் கல்கத்தாவிலிருப்பதைப் போன்று பம்பாய், சென்னை, டில்லி என்ற மூன்றிடங்களிலும் தேசிய நூலகங்கள் இருக்கும் என்றும், பதிப்பகத்தார் நான்கு படிகளை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் இது பதிப்பகத்தாருக்குச் செலவில்லாத சிறந்ததொரு விளம்பரமாகும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்து மாவட்ட நூலக அமைப்பு முறை எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்பது பற்றி ஆராய்வோம்.

தொடரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com