Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

இட ஒதுக்கீட்டுச் சட்டம்
எஸ்.எஸ்.இராஜகோபாலன்

இச்சட்டம் சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள பெருஞ்சீரழிவினைக் கவனிக்கத் தவறியுள்ளது. இன்று சிக்கலின்றி வெளியேறும் அறிவுத்திறன் மிக்க மாணாக்கர்க்கு மாறாக அறிவுக்குள்ளர்களையே (intellectual pygmies) உற்பத்தி செய்யும்.

ஒருவாராகக் கல்விக் கூடங்களில் இட ஒதுக்கீட்டிற்கானச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவர்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ளது. 80 கோடி மக்களை கேவலப்படுத்தும் ஆணவமும் செருக்கும் நிறைந்த இக்கூற்றிற்குச் சொந்தக்காரர்கள்.

“பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை / அணியுமாம் தன்னை வியந்து” என்று வள்ளுவர் வகுத்த இலக்கணம் அவர்களது சிறுமனதை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாக்கியங்களைத் திரும்பப் பெறுமாறு கூறி, தள்ளுபடி செய்யாது மனுவினை ஏற்றது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஒருதலைப்பட்சத்தைக் காட்டுகின்றது. 2000 ஆண்டுகளாக ஏறக்குறைய 50 தலைமுறையினர் சமூக மதிப்பும், கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தவுள்ள ஒரு சிறிய முயற்சிக்குக் கூட ஆதரவும் வரவேற்பும் கொடுக்காது எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.

மத்திய கல்வி நிலையங்கள் (சேர்க்கையில் ஒதுக்கீடு) சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்.

ஷரத்து 3 : அட்டவணை சாதியினருக்கு 15ரூ, அட்டவணை மரபினருக்கு 7.5ரூ, பிற்பட்ட வகுப்பினருக்கு 27ரூ என ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

ஷரத்து 4 : இச்சட்டத்தின்று மலைப்பகுதியிலுள்ள கல்வி நிலையங்கள், சிறப்பு மிக்கவைகளாக அறிவிக்கப்பட்டன. சிறுபான்மையோர், நிர்வாகத்திறனைப் பற்றும் மிக உயர் நிலையில், சிறப்புக் கல்வி அளிக்கும் படிப்புகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஷரத்து 5 : 1) பிற்பட்டவர்க்கான ஒதுக்கீடு அளிப்பதால், பிற சாதியினருக்கான இடங்கள் மறைக்கப்படாதிருக்க, இவ் உயர்நிலை கல்விக் கூடங்களின் இடங்கள் அதிகரிக்கப்படும். பிற வகுப்பினருக்கு 77.5ரூ ஒதுக்கீடு, 50.5ரூ ஆகக் குறையும். எனவே 77.5 / 50.5 = 154ரூ இடங்களாக அதிகரிக்க 54ரூ புதிய இடங்கள் உருவாக்கப்படும்.

ஷரத்து 5 : 2) நிதி ஒதுக்கீடு, உட் கட்டமைப்பு வசதிகள் பெருக்கம், கல்வி அளிப்பு தரத்தை பேணுதல் ஆகிய கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கண்ட இட அதிகரிப்பினை மூன்று ஆண்டுகளில் படிப்படியாகச் செய்யலாம்.

ஷரத்து 6 : இச்சட்டத்திலுள்ள 2007 ஆம் ஆண்டில் செயல்படுத்த உயர்கல்வி நிறுவனங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக அநீதிகளிலும், எல்லாவிதச் சுரண்டல்களினின்றும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர் முக்கியமாக அட்டவணை சாதியினரது நலங்களைப் பாதுகாப்பது, அரசியல் சட்டம் சரத்து 46-ன் படி அரசின் கடமையாகின்றது. அந்த ஷரத்தின் நோக்கங்களை நிறைவேற்ற எடுக்கப்படும் பல முயற்சிகளில் இச்சட்டமும் ஒன்று என்பதை கவனிக்க வேண்டும்.

வழக்குத் தொடர்ந்தவர்கள் ஏதேனும் பாதிப்புக்குள்ளா கின்றார்கள் என்றால் சிறிதும் இல்லை என்பதே புலப்படும். இன்று எத்தனை பேர்க்கு மத்திய உயர் கல்வி கூடங்களில் இடமளிக்கப்படுகின்றதோ, அதே அளவு இடங்களை உறுதி செய்யவே கூடுதல் இடங்கள் உருவாக்க ஏறக்குறைய ரூ.2000 கோடி செலவழிக்கப்பட உள்ளது. இத்துனை பெருந்தொகை அவர்களுக்காகவே செலவழிக்கப்படுகின்றது. சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது ஒதுக்கீடு மாறாத நிலையில், இச்சட்டத்திற்குத் தடை விதித்திருப்பதும், தடையை நீக்கக் கேட்டுக்கொண்ட மத்திய அரசின் வேண்டுகோளையும் நிராகரித்திருப்பதும் புரியாத புதிரே. தடை விதித்ததற்கு உச்சநீதிமன்றம் இரு காரணங்களைக் கூறியுள்ளது.

(1) 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையாகக் கொண்டது ஏற்கத்தக்கதல்ல.

(2) பிற்பட்ட சமூகத்தினரில் வளம்மிக்க பகுதியினரை அடையாளங் கண்டு ஒதுக்கீட்டிலிருந்து அவர்களை நீக்குதல்.

இவ்விரண்டு காரணங்களும் மெய்மை அடிப்படை யில்லாதவை. தகுந்த வாதங்களும் நடுவணரசு கொடுத்தும் அவற்றைப் புறந்தள்ளியது நியாய அடிப்படையில்லாதது.

1931க்கு பின்னும் சாதிக் கணக்கு எடுக்கப்படவில்லை. ஓராண்டில் விவரங்களை எதிர்காலத் தேவைகளைக் கண்டறிய சிறப்பான உலகந்தழுவிய புள்ளியியல் முறைகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி 1931 ஆம் ஆண்டின் விவரங்களை இன்றைய தேவைக்கு அனுமானிக்க இயலும். மேலும், சட்டம் கொணர 1931 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை மட்டுமின்றி மண்டல்குழு, தேசிய புள்ளி விவர நிறுவனம் (NSSO) ஆகியவற்றிகளினின்று பெறப்பட்ட விவரங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது. பிற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை ஏறக்குறைய 70ரூ ஆகும். ஆனால் இட ஒதுக்கீடு செய்திருப்பது 27ரூ. இதுவும் உச்சநீதிமன்ற ஒதுக்கீடுகள் 90ரூக்கு மிகக் கூடாதென்று விதித்திருப்பதால், அட்டவணை சாதியினர்க்கான ஒதுக்கீடு (15ரூ+7.5ரூ) போக மீதி 27.5ரூ உள்ளதால் 27ரூ என நிர்ணயிக்கப்பட்டது. மொத்த ஒதுக்கீடுகள் 50ரூக்கு மிகக் கூடாதென்று எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது? மண்டல்குழு நாடு முழுவதும் பயணம் செய்தும், மாநிலங்கள் பட்டியல்களை ஆய்ந்தும் பிற்பட்ட சமூகத்தினரை அடையாளம் கண்டு கொண்டது. அதனைப் புறந்தள்ளுவது ஏற்புடையதல்ல.

அடுத்த காரணமாகிய வளம் மிக்கவரை ஒதுக்கீட்டி லிருந்து நீக்கப்பட வேண்டும். பிற்பட்டவர்க்கு மட்டும் ஏன் இவ்விதி. பிற சமூகத்தினடரிடமும் வளம் மிக்கவரை மைய கல்விக்கூடங்கள் சேர்க்கையின்று ஒதுக்கி, அக்கல்வி நிறுவனங்கள் இடமில்லை என்று சொல்லியிருந்தால் புரிந்து கொள்ள முடியும். முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களும் ஒதுக்கீட்டினை பெரும்பலன் அடைந்த பகுதியினரை ஒதுக்கி, பயன் பெறாதவர்க்கு அளிக்கலாமென்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.

வளம் மிக்கவரை அடையாளம் காண்பது எளிதல்ல. பொருளாதார வசதி, கல்விநிலை, பெற்றோர்களின் பணிநிலை போன்றவை ஓரளவிற்கு துணை செய்யுமென்றாலும், ஒதுக்கீட்டின் அடிப்படையை தகர்க்கும் செயலாகவே அமையும். முன்னரே குறிப்பிட்ட வண்ணம் 50 தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டும், சமூகத்திலும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டும் உள்ள ஒரு பிரிவினர், 2000 ஆண்டுகளாக கல்வி பெற்று, சமூகத்தில் உயர்நிலையிலுள்ளவர் நிலைக்கு வர 50 தலைமுறைகளாக ஆகும். அதாவது 200 ஆண்டுகட்கு மேல் கல்வி தொடர்ச்சியாகப் பெற்ற பிரிவினரே வளம் பெற்றவர் எனலாம். இன்று ஒதுக்கீடு பெறும் சமூகத்தினர் 200 ஆண்டுகட்கும் முன்னரே கல்வி மறுக்கப்பட்டவராவார். மேலும் அரசியல் சட்டத் திருத்தங்களை ஒட்டிய வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே விசாரிக்கப் பட வேண்டும். ஆனால் தடையிலிருந்து தீர்ப்பு வழங்கிய அமர்வு இருவரை கொண்டதே.

கடந்தகால தீர்ப்புகள் பலவற்றையும் காணும் பொழுது, நீதிபதிகளின் தனிப்பட்ட சித்தாந்தங்கள், விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பு சட்டமன்றங்களுக்கே உண்டு. அவை நிறைவேற்றும் சட்டங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மீறுகின்றனவா என்று பார்த்து தீர்ப்புகள் வழங்கப் பெறவேண்டும். இச்சட்டம் அரசியல் சட்டத்தை மீறவில்லை.

இவற்றையெல்லாம் பார்க்கையில் நீதிமன்றம், பாராளுமன்றம் அரசு ஆகியவற்றிடையே நிலவ வேண்டிய உறவுகள் புதியதாக வரையறுக்கப்பட வேண்டுமென்பது தெளிவு. புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதே மக்களின் நல்வாழ்விற்கு உதவும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com