Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

தொடர் கட்டுரை

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ணகோவிந்தன்

பொது நூலகங்கள் திறம்பட செயல்படும் முறைகள் :

அரசாங்கத்தாலும் மாவட்டத்தாலும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற மாவட்ட நூலகம் அம்மாவட்ட மக்களின் ஒவ்வொருவருக்கும் நலன் விளைவிக்கத் தோன்றியதாகும். பெருநகரங்களிலும் நூலகங்கள் பணியாற்றுதல் போலவே மாவட்ட நூலகமும் மாவட்டங்களிற் செயலாற்றுகின்றன.
இந்த நூலகத்தில் கிடைக்கின்ற வாய்ப்புகளையும், வசதிகளையும், அரசாங்கத்தின் உதவிநிதித் தொகையினையும் கொண்டுதான் தொண்டு புரிகின்றது.

மாவட்ட நூலகங்கள் திறம்படச் செயலாற்றப் போதிய தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்தொகுதிகளை, உள்ளூர் கிளைகள் ஒழுங்குப்பட பணிபுரிய வாய்ப்பளிக்கும் நல்ல அமைப்பு முறையும் இன்றியமையாதவை வேண்டப்படுவதாகத் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இல்லாமல் கண்ட கண்ட நூற்களைக் கொண்டிருந்தால் நூலகம் காகிதப் பூஞ்சோலையாகும். சிறந்த அமைப்பு முறையில்லாவிட்டால் நூலகத்தில் கட்டுப் பாட்டையோ ஒழுங்கையோ காணமுடியாது.

மாவட்ட நூலக ஆணைக்குழுவினரின் ஆலோசனைப் படியே மாவட்ட நூலகத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உள்ளூர் ஆசிரியர்களின் உதவியைக் கொண்டு வெளி யிடங்களில் நூலகத்திற்குரிய நூற்களைப் பெறுதல், மக்களுக்குக் கொடுத்தலும் ஒரு முறையாகும், மாவட்ட நூலக அமைப்பு முறை ஆணைக்குழுவினருடன் கலந்த பிறகு மாவட்டத்தில் நூலகங்களைத் தோற்றுவித்ததற்குரிய இடங்களை மாவட்ட மத்திய நூலக அதிகாரி (னுநயீரவல டுiசெயசயைn) தேர்ந்து எடுப்பார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இருந்து, தங்கள் ஊர்களில் இருந்து நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் அறிக்கை ஒன்று அனுப்பப்பட வேண்டும். அந்தந்த ஊர் மக்கள் தங்களுக்குள்ளே உள்ளூர்க் குழு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அக்குழு ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளூர் குழுவின் ஆட்சி முழுவதையும் கண்காணிக்கும் பொறுப்பு செயலாளரையேதான் சேரும். மாவட்ட நூலகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து நூற்களை பின்னர் தனிப் பெட்டிகளில் நல்ல பாதுகாப்புடன் ஊர் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

பள்ளிக்கூடங்களிலிருந்தோ வேறு வசதியான இடங் களிலிருந்தோ நூல்களை மக்களுக்குத் தர வசதி செய்யப்படும். நூலக குழுவினர் ஊர் மக்களுக்குப் புரியும் அரும்பணியினை உணர்ந்து மக்கள் தங்கள் ஆதரவையும் ஆசிரியர்கள் தமது அரிய ஒத்துழைப்பினையும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் தங்கள் முயற்சியையும் அளித்தால் இம்முறையில் நாம் பெரியதோர் வெற்றியை காண்போம் என்பது உறுதியாம். கிளைகள் நிறுவுவதில் வேறொரு முறையும் இருக்கிறது. ஆட்சித் துறையினை மேற்கொள்ள ஊர்ப்பகுதியில் ஒரு செயற் குழுவை ஏற்படுத்திய பிறகு நூலகங்களை ஏற்படுத்தல் நலமாகும். தொடர்ச்சியான குறையாத ஊக்கமும், தனிப் பட்டவர்களின் தளராத உழைப்பும் இந்த முறையை அமலுக்குக் கொண்டுவர இன்றியமையாது வேண்டபடுவதாகும்.

இந்த முறையில் ஊர் செயற்குழு ஓர் உறுதி வாய்ந்த அமைப்பாக மாறுகிறது. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை விளக்கமாகவும், தெளிவாகவும் தெரிவிக்க நல்ல வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

மாவட்ட நூலகத் தலைமை அலுவலகம் :

நூலகத் துறையில் பயிற்சியும் நல்ல அனுபவமும் மிக்கவர் நூலகத் துறைத் தலைவராக இருக்கவேண்டும். அவர் நூலகத் துறைப் பயிற்சி பட்டமும் பெற்றவராக இருந்தால் இன்னும் நலமாகும், குறைந்தது நூலகத் துறையில் ஓராண்டு அனுபவமாவது அவருக்கு இருத்தல் வேண்டும்.

பயிற்சி இல்லை என்றால் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், புத்தகங்களைப் பிரிவு செய்து நிரல் படுத்துதல், அலுவலகக் குறிப்பேடுகளைப் பாதுகாத்தல் முதலிய பல பணிகளை நூலகத் தலைவரால் செய்ய முடியாது போகும், மாவட்ட நூலக ஆய்வுக்குழுவிற்கும், அரசாங்கத்திற்கும், நூலக துறைத் தலைவர் பொறுப்பாளிகளாவார். நூலகத்தைக் குறித்த செயலாளர்கள் அனைத்திற்கும் அரசாங்கத்திற்கு விளக்கம் தரும் பொறுப்பு அவரைத்தான் சாரும்.

மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றூர்களிலும், பேரூர்களிலும் கிளை நூலகங்களை நிறுவதற்கும் அந்நூலகங்கள் நடை முறைகளை நன்கு கண்காணிப்பதற்கும் நூலகத் துணைத் தலைவர் தலைவாய்ந்தவராவார். இந்த விவரங்களில் ஆலோசனை தருவதற்கு மட்டுமே நூலகத் துறை முன்வரும். நூலகத் துறைத் தலைவருக்கு உதவியாக ஒரு கணக்காளரும், எழுத்தாளரும், தட்டச்சரும் இருபணியாளரும் இருவேலையாட்களும் பணியாற்றுவார். நூலகங்கள் அமைந்திருக்க வேண்டிய இடத்தைப் பற்றிய சிறுகுறிப்பு இனிப் பார்ப்போம்.

படிப்பகமாகவும், நூற்றொகுதிகளை அடுக்கி வைப்பதற்கு வசதியாகவும், பயன்படுத்துகின்ற ஒரு பெரிய அறை நூலகத்தில் அமைந்திருத்தல் வேண்டும். மூவாயிரம் சதுர அடிபரப்பளவுள்ளதாக அந்த அறை இருப்பது நல்லது. பதினாயிரம் நூற்களை வைப்பதற்கும், முப்பது பேர் அமர்ந்து அமைதியாகப் படிப்பதற்கும் ஏற்றவகையில் அந்த அறை அமையப் பெறும்.

அலுவலக வேலைக்கான அறை ஒன்று, பெட்டிகள் முதலியன போட்டுவைக்க ஒரு அறை, நூலகத் துறைத் தலை வருக்கு ஒரு அறை என மூன்று சிறு அறைகள் இருக்கவேண்டும். புத்தகம் வைக்கும் அலமாரிகள் ஏழு அடி உயரமும், ஆறறை அடி அகலமும் நூற்களை அடுக்கி வைக்கும் இடையீடுகளில் உயரம் ஒன்றறை அடியும் கொண்ட தாயிருந்தால் ஒரு அலமாரியில் ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைக்கலாம். புத்தக அலமாரிகளுக்கு இடையில் நாலரை அடி அளவு இடைவெளி இருக்கவேண்டும்.

ஓர் உறுப்பினர் வந்து அமர்ந்து படிக்க முப்பது சதுரஅடி பரப்புள்ள இடம் அமைய வேண்டும். நூற்களை வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தக அலமாரிகள் வேண்டப்படும். உள்ளூர் புற நூல் நிலையங்களில் அடிக்கடி தலைமை அலுவலகத்தால் புத்தகங்களை மாற்றப்படுமாதலால் தலைமை அலுவலகத்தில் ஒழுங்காகப் புத்தகங்களை அலமாரிகளில் அடிக்கி வைத்தல் வேண்டும்.

அலமாரிகள் பெரியதாகவும், அதிகமாகவும் இருப்பதைக் காட்டிலும் உயரமானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதை நினைவிற் கொள்ளவேண்டும். சிற்றூர்களிலும், பேரூர்களிலும் விளங்கும் நூலகக் கிளைகளுக்கு ஓர் உற்பத்திச் தொழிற்சாலையாக மாவட்டத் தலைமை நூலக அலுவலகம் விளங்குகின்றது. நூலகத்திற்குரிய பல முக்கிய குறிப்பேடுகளையும் கூட அஞ்சலட்டை அளவில் ஒழுங்காகத் தயாரித்து வைக்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com