Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

நூலகம் ஓர் அறிமுகம்

கிருஷ்ண கோவிந்தன்

கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம். எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப் பிடலாம். காரணம் சுமார் நானூறு நகரங்களில் பொது நூலகங்கள் பொலிவுடனும், புகழுடனும் சிறந்து விளங்கியுள்ளன. இம்முறையில் தான் 1846-ல் பம்பாயில் மக்கள் நூலகம் ஒன்று தொடங்கப் பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை, கல்கத்தா போன்ற நகரங்களிலும் ஓரிரு நூலகங்கள் தோன்றின என்பது வரலாறாகும்.

சென்னையில் அருங்காட்சியகத்தின் அருகில் எழில் மிகச் சிறப்புடன் விளங்கும் அரசு பொது நூலகமானது “கன்னிமாரா” நூலகமாகும். இதனுடைய வரலாற்றை மிகவும் சுருக்கமாகக் காணலாம்.

கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம். கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம்! முன்னேற்றம்! தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப் படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது. 1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.

குறிப்பு உதவி பணி

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் திருமூலர். இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

தமிழ்நாட்டுப் பொது நூலகங்களில் பணியாற்றி வரும் பயிற்சி பெற நூலகர்களுக்கு முதனிலை நூலக இயல் (ஊநசவகைiஉயவந in டுiசெயசல ளுஉநைnஉந) பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலங்களிலிருந்து படிப்பதற்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். வளர்ந்து வரும் நூலகப் பணியினையும், பயனையும் பண்பையும் பார்த்த அரசாங்கம் புதுக்கட்டடம் ஆண்டு தோறும் கட்டிக் கொடுத்து உதவி வருகின்றது. வளர்ந்து பணிக்கு ஈடுகொடுக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் குவியும் இந்திய நூல்கள் வைக்க, உறுப்பினர்களாகி வரும் வாசகர்களுக்கு ஏற்ப புதிய புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

“இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம் ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று! வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள். இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்!

கல்கத்தா நூலகம்: 1903-ல் ஜனவரி 30ல் கல்கத்தா இம்பிரியல் நூலகம் பொது மக்களுக்கு கட்டணமின்றி திறந்து விடப்பட்டது. வங்காள நூலகத்தின் தந்தை டாக்டர் இரவீந்திரநாத் தாகூராவர். வங்காள நூலகக் கழகம் என்றும் அழைக்கப் பெற்றது. இவ்வங்காள நூலகச் சங்கமானது பல நூலக மாநாடுகளை நடத்தி மக்களை நூலக உணர்வு உள்ளவர்களாக மாற்றியது. இம்மாநிலத்தில்தான் நம் நாட்டு தேசிய நூலகம் சிறப்புடன் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருக்கும் “ராயல் ஏசியாடிக் சொசைட்டி” நூலகமானது “இந்தியப் புராதன நூலகங்களில் ஒன்றாகும். இதன் வளர்ச்சிகளை 1912 லிருந்து 1929 வரை சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு மேல், இங்கிலாந்து நாட்டு மக்கள் நல்கி உள்ளனர். கல்கத்தாவிலிருந்தும் இந்தியப் பொருட்காட்சி சாலையிலும், சித்ர - சிற்பக் காட்சி சாலையிலும் கிடைத்ததற்கரிய நூல்கள் பல சேகரித்து வைக்கப்பட்டன.

பம்பாய் நூலகம்

இன்று இந்நகர் கல்வியிற் சிறந்த கவின்பெறு நகராய் விளங்கினாலும், தொடக்கத்தில் அரசியலார் நூலக வளர்ச்சிக் காக அவ்வளவு அக்கறை செலுத்தவில்லை. “அச்சகப் பதிவு சட்டத்தினால்” பம்பாய் மாநிலத்தில் வெளியிடப்படும் அத்தனை நூல்களும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவைகள் கொடுப்பாரும் எடுப்பாருமின்றி, ஓரிடத்தில் பயனில்லாது உறங்கிக் கொண்டிருந்தன. மராட்டிய நூலகச் சங்கம், குஜராத்திய நூலகச் சங்கம், கர்நாடக நூலகச் சங்கம் இம்மூன்று சங்கங்களும் முனைந்து நின்று நூலக வளர்ச்சிக்காக பாடுபடலாயின. மராட்டிய நூலகச் சங்கம், மராட்டி மக்கள் வாழும் பகுதிகளில் நூலக மாநாடுகள் பல கூட்டியும் நூலகப் புள்ளி விவரங்களைச் சேகரித்தும் மராட்டி மொழியில் எழுதப்பட்ட நூற்களை ஊர்கள் தோறும் அனுப்பி மக்களையும் படிக்கச் செய்தும் நூலகப் பணிபுரியலாயிற்று.

பம்பாய் நகரிலிருக்கும் “ராயல் ஏசியாடிக் சொசைட்டி நூலகம் இந்தியப் பெரு நூலகங்களில் ஒன்றாகும். இலக்கிய விஞ்ஞான, புதை பொருள் இன்ன பிறவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கி.பி. 1804-ல் இது தொடங்கப் பெற்றது. இருபத்தாறு ஆண்டுகள் கழித்து இது இலண்டன் “ராயல் ஏசியாடிக் சொசைட்டியின்” கிளையாக மாறி மாண்புடன் விளங்கலாயிற்று. தொடக்கத்தில் ஆண்டிற்கு 35,000 ரூபாய் வரை இதன் வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட்டது. இதன் புதைப்பொருள் சிற்பப் பகுதியானது இன்று வேல்சு இளவரசர் பொருட்காட்சி சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com