Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

உப்பு
த.வி.வெங்கடேஸ்வரன்

சமீபத்தில் 4000 ஆண்டு பழமையான உப்பளங்களை வரலாற்று அறிஞர்கள் சைனாவில் கண்டுபிடித்துள்ளனர். மனித வரலாற்றில் உப்பின் பங்கினை கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. சீனாவில் கான்ஜிங் ஆற்றின் கரையில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த உப்பளம் சீன நாடுகள் உருவானதற்கு அடித்தள மாக விளங்கியது. இன்று வேண்டுமெனில் மென்பொருள், பெட்ரோல் முதலியன முக்கிய வாணிபப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆதி காலத்தில் உப்பு வியாபாரம்தான் முக்கிய வியாபாரமாக விளங்கியது. உப்பு வெட்டியெடுக்க அரங்கம் அல்லது உப்பு நீரை வற்ற வைத்து உப்பு உருவாக்கும் உப்பளங் களை உடைய நாடு வளமிக்கதாக விளங்கியது.

4700 ஆண்டு பழமையான பங்-டாசுகான்மூ எனும் சீன எழுத்தாளர் சுமார் 40 விதமான உப்புகளை குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பாபிலோனியா களிமண் ஏடு; எகிப்திய பேப்ரி எழுத்துக்கள் முதலியவற்றிலும் உப்பு; உப்பு செய்தல் குறித்த செய்தி உள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது தமிழர் முதுமொழி. உப்பு அற்ற பண்டம் உணவாகக் கொள்ள சுவையற்ற தாக இருக்கும் என்பது இதன் பொருள். சுமார் 1400 உணவுப் பொருட்கள் உப்பிட்டு செய்யப்படுகிறது. மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் உப்பு உள்ளது. சாதாரண வளர்ந்த மனிதர் ஒருவரிடம் சுமார் 250 கிலோகிராம் உப்பு இருக்கும். இந்த அளவு உப்பு இருந்தால்தான் அவரது ரத்த ஓட்டம் சீராக அமையும். உணவு செறிக்க இயலும்.

எகிப்திய மம்மி எனப்படும் உடல் பதம் செய்வதற்கு உப்பு பயன்படுத்தப்பட்டது. பல பண்பாடுகளில் உப்பு தூய்மையின் சின்னமாக விளங்குகிறது. வழிபாடு, சடங்குகள் முதலியவற்றில் உப்பு பங்கு வகிக்கிறது. உப்புக்கு துர்தேவதைகளை விரட்டும் பண்பு உண்டு என பழங்கால மக்கள் கருதினர். ஆகவேதான் ஜப்பான் முதலிய நாடுகளில் நல்ல காரியம் நடக்கும் இடத்தில் உப்பு தூவி தீய சக்திகளை அகற்றுவதாக கருதினார். “கண் வைத்தல் என்ற இந்திய கருத்திலும் உப்பு பங்கு வகிக்கிறது. உப்பு சுற்றி போட்டால் வைத்த கண் விலகும் என்பது நிலவும் கருத்து.
இன்றைக்கு மிக எளிதில் கிடைக்கும் பொருள் உப்பு. ஆனால் முற்காலத்தில் உப்பு மிக மிக உயர்வான மதிப்பு மிக்க பொருளாக விளங்கியது. எத்தியோப்பியாவில் சமீப காலம் வரை உப்பு கட்டி பணமாக புழங்கியது. ஏன் ஆங்கிலத்தில் சாலரி என்னும் சம்பளம் என்ற சொல் சால்ட் எனும் உப்பு என்ற சொல்லிருந்து பிறந்ததுதான்.

ரோமானிய வீரர்களுக்கு உப்பு வாங்குவதற்காக அளிக்கப்பட்ட மாதாந்திர தொகைதான் சாலரி என்று அழைக்கப்பட்டது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற கூற்று உணவு உண்டி கொடுத்து உதவுபவரை மறக்கலாகாது என்று குறிக்கிறது. பல பண்பாட்டிலும் ஒருவரிடம் உப்பு பெற்று உண்டு விட்டால் அவரை எந்தச் சூழலிலும் நண்பராக கருதி பாதுகாப்பு தரவேண்டும் என்ற நெறி உள்ளது.

ஆகவேதான் ராணுவத்தில் தேசத்தை உயிர்கொடுத்தும் பாதுகாப்போம் என உப்பு உண்டு சத்தியவாக்கு தரும் நிகழ்ச்சி சடங்கு உள்ளது. உப்பு என்பது உள்ளபடியே சோடியம் குளோரைடு என்கிற வேதிப்பொருள்தாம். இந்த வேதிப் பொருள் திடநிலையில் படிகங்களாக விளங்கும். நுண்ணோக்கி வழியாக பார்த்தால் கனசதுர வடிவில் உப்பு கட்டிகட்டியாக படிகமாக மிதக்கும்.

நீரில் எளிதில் உப்பு கரையும். உள்ளபடியே 00 வெப்ப நிலையில் 100 கிராம் நீரில் 35.6 கிராம் உப்பை கரைத்துவிடலாம். அதாவது நீரின் அளவைப்போன்று மூன்றில் ஒரு பங்கு! வெப்பநிலை உயர உயர உப்பு கரையும். அளவும் அதிகரிக்கும். 1000 வெப்பநிலையில் 39.2 கிராம் உப்பை 100 கிராம் நீரில் கரைத்து விடலாம்!

எளிதில் நீரில் கரையும் உப்பு ஆல்கஹாலில் எளிதில் கரையாது. ஹைடிரோகுளோரிக் அமிலத்தில் கரையவே கரையாது!
சுமார் 8010 சென்டிகிரேடு வெப்பத்தில்தான் உப்பு தன்திடநிலையிலிருந்து உருக ஆரம்பிக்கும். 14130 சென்டி கிரேடில்தான் உப்பு ஆவியாகும்!
இயற்கையாக கிட்டும் உப்பில் மெக்னீசியம் குளோரைடு, மெக்னீசியம் சல்பைடு, மெக்னீசியம் புரோமைடு முதலிய பொருட்களும் குறை அளவில் இருக்கும். இந்த மாசு இருப் பதன் காரணமாகவே உப்பு வெள்ளை வெளேர் என இல்லாமல் நீலம், மஞ்சள், ஊதா முதலிய நிறங்களின் சாயல் தரும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com