Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ணகோவிந்தன்

பொது நூலக வளர்ச்சி / நூலக அமைப்பு முறை

பார் முழுவதும் அறிவுத் தெளிவும், கருத்து விளக்கமும் பரவ வழிவகுப்பன நூலகங்களாகும். ஏழை, பணக்காரர், கற்றோர், கல்லாதார், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி உலக மக்களை அனைவருக்கும் நூலகங்கள் அறிவு எனும் விருந்து அளிக்கின்றன. ஆராய்ச்சி வல்லுநர்களும் அறிஞர் பெருமக்களும் தாம் கண்டதையும், கேட்டதையும் கருத்தால் அறிந்ததையும் கொண்டு இறவாத உலக இலக்கியங்களை இயற்றுக்கின்றனர். அத்தகைய அருமைமிக்க புத்தகங்கள் என்ற புதுமை மலர்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைதான் நூலகம் ஆகும். வண்டு வண்ண மலர்தனை நோக்கி ஓடுதல் போல, வையகமும் நூலகத்தை நோக்கி ஓடுகிறது.

பொது நூலகங்களை அவை ஆற்றும் பணிகளைக் கருத்தில்கொண்டு அ) தேசிய மைய நூலகம், ஆ) மாநில மைய நூலகம், இ) மாவட்ட மைய நூலகம், ஈ) கிளை நூலகம், உ) இயங்கும் நூலகம் என்று வகைப்படுத்தலாம்.

தேசிய மைய நூலகம்

நாட்டின் நூலகப் பணியின் முதல் நூலகமும் வழிகாட்டி நூலகமும் தேசிய மைய நூலகமாகும். இந்த நூலகம் நாட்டில் நடக்க வேண்டிய பணிகளை வகுத்தும், தொகுத்தும், நெறிப் படுத்தியும், செயல்படுத்தியும் வரும். நாட்டில் வெளியாகும் நூல்களின் உரிமைப்படி பெறுவதும் நூற்றொகை வெளியிடுவதும், பழைய நூல்களைக் காப்பதும் பிற நூலகங்களுக்கு நூலக நுணுக்கங்களை விளக்குவதும், அறிவுரை (ஹனஎiஉந) தருவதும் இதன் செயல்களாகும்.

இவை தவிர வெளிநாட்டு தேசிய மைய நூலகங்களோடு தொடர்புகொண்டு, நமக்குத் தேவையான அறிவுச் செல்வங் களை அந்த நாடுகளின்று பெறுவதும், பிற நாடுகளுக்குத் தேவைப்படும் அறிவுச் செல்வங்களை அவைகளுக்கு வழங்குவதும், இதன் பணிகளாகும். இந்திய தேசிய மைய நூலகப் பணியைக் கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகம் ஆற்றி வருகின்றது.

மாநில மைய நூலகம்

நூலகப் பணியாற்றுவதில் இரண்டாவது இடம் வகிப்பது மாநில மைய நூலகமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாநில மைய நூலகம் செயல்பட்டு வருகின்றன. இது மாநில நூலகப் பணியினைச் செவ்வனே ஆற்றுவதற்கு உதவுகிறது. இந்த நூலகம் தலைக்குமேல் உள்ள தேசிய மைய நூலகத்தையும், தனக்குக் கீழ் இயங்குகின்ற மாவட்ட மைய நூலகங்களையும் தொடர்பு கொண்டும், அவற்றோடு இணைந்தும் செயல்படுகிறது.

மாநிலத்தில் வெளியிடப்பெறும் நூல்களின் உரிமைப் படியைப் பெறுவதும், மக்களுக்குப் பயன்படும் அயல்நாட்டு நூல்களை வாங்குவதும், மாநிலத்திற்கான நூற்றொகையை வெளியிடுவதும், மாவட்ட மைய நூலகங்களுக்குத் தேவைப் படும் நுணுக்கமான அறிவுரைகளைக் கூறுவதும், மாநில நூலகப் பணிகளை உருவாக்கி நெறிப்படுத்தி அவற்றைக் கண்காணித்துச் செயல்படுத்துவதும் இதன் முக்கிய பணி களாகும்.

மாவட்ட மைய நூலகம்

நூலகச் சேவை புரிவதில் மூன்றாம் இடம் வகிப்பது மாவட்ட மைய நூலகமாகும். மாவட்ட நூலகப் பணியின் தலைமை இடமும் இதுவே ஆகும். இந்த நூலகம் மாவட்டத்தின் தேவைகளை உணர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிளை நூலகங்களையும் புதிய நூலகங்களையும் திறந்து செயலாற்றுவது இதன் முக்கிய பணிகளாகும். இம்முறையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட மைய நூலகங்கள் பணியாற்றி வருகின்றன.

கிளை நூலகம்

நூலகப் பணியில் நான்காம் நிலையில் இருப்பது கிளை நூலகமாகும். ஏறத்தாழ 5000 மக்கட் தொகை வாழும் இடங்கள் எங்கணும் கிளை நூலகங்கள் தொடங்கப் பெற்றுள்ளன. மாவட்ட மைய நூலகத்தின் கீழ்ச் செயல்படும் இக்கிளை நூலகங்கள் தமக்கு வேண்டிய நூல்களை அவைகளிடமிருந்து பெற்று தமது இடத்திலுள்ள மக்களுக்குப் பணியாற்றி வருகின்றன.

ஊர்ப்புற நூலகங்கள்

நூலகப்பணி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ் அரசால் ஆணையிடப் பெற்றுப் திறக்கப்பட்டவை ஊர்ப்புற நூலகங்கள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 625 ஊர்ப்புற நூலகங்கள் திறக்கவும், இரண்டாவது கட்டமாக 867 ஊர்ப்புற நூலகங்களைத் திறக்கவும் அரசு அனுமதி அளித் துள்ளது.

நடமாடும் நூலகங்கள்

கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் வழி, நூல் பெற முடியாதவர்களுக்கு உதவும் வகையில் உருவானதே நடமாடும் நூலகங்களாகும். நடமாடும் நூலகங்கள் மாவட்ட மைய நூலகம் அல்லது கிளை நூலகத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் நூல்களைக் கொண்டு வந்து கொடுக்கும். அந்நூல் களைப் படித்து முடித்த வாசகர்கள் அவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வந்து கொடுத்துத் தங்களுக்குத் தேவை யான புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம். இன்றைய உலக மக்களின் வாழ்க்கையும், அவர்தம் முன்னேற்றத்தையும், விவசாயம், அறிவியல் தொழில் நுட்பங்களையும் நேரடியாகத் தெரிந்துகொள்வதும் என்பது சாத்தியமில்லாத செயலாகும். அவற்றை எளிய முறையில் தெரிந்துகொள்வதற்கும் அதன் வழி கிராமப்புற மக்கள் பண்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு முன்னேற்ற வழியில் செல்லவும் நூல் நிலையங்கள் உதவுகின்றன.
இன்றைய பொது நூலகங்கள் சமுதாயத்தின் அறிவுக் கருவூலமாய், மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்கல்வி பெறும் பல்கலைக்கழகமாய், அரசியல் உரிமைகளையும், கடமைகளையும் தெளிவுபடுத்துகின்ற நல்லாசிரியனாய், தொழில் துறை கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞானப் புதுமைகளையும் ஒன்று சேர்த்துத் தொழில் அதிபர்களுக்குக் கொடுத்துதவி நாட்டின் வளம் பெருக வழிக்காட்டியாய், கலை, கலாசாரம், இலக்கியச் செல்வங்களை எல்லாம் சேகரித்துப் போற்றிப் பாதுகாக்கும் காவலனாய், ஓய்வைப் பயனுள்ள வழிகளில் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுவதற்கும் வாய்ப்பளித்து, விழிப்புணர்வு பெற்ற பண்பட்ட சிறந்த மக்களினம் உருவாவதற்கும் மையமாய் விளங்குதல் வேண்டும் என அறிஞர் பெருமக்கள் விரும்புகின்றனர். இச்சிறப்புகள் அமைய திகழ்வன நூலகங்கள் ஆகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com