Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

ஆஸ்த்மா
ராதா

ஆஸ்த்மாவினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நோயாளிகள் சகஜ வாழ்க்கை வாழமுடியும். ஒவ்வாப் பொருட்களைத் தவிர்த்து விடுவதன் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

கிரேக்க மருத்துவரான ஹிப்போகிரேட்ஸ் மூச்சுவிடுவதற்குச் சிரமம் ஏற்படுவதை ஆஸ்த்மா என்ற பெயரால் குறிப்பிட்டார். ஆஸ்த்மா என்பதற்கு மூச்சு வாங்குதல் அல்லது வாயினால் மூச்சு விடுதல் என்று பொருள். ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூச்சுவிடும் போது wheeze எனப்படும் கீச்சுச் சப்தம் நோயாளி உணருவ தோடல்லாமல் அதன் பாதிப்பு அதிகமாகும்போது அருகிலிருப்பவர்களுக்கும் கேட்கும்.

ஆஸ்த்மா ஏற்படுவதற்கு மரபணுக்கள் மட்டுமே காரணி களாய் இருக்கமுடியாது. சுற்றுச்சூழலும் முக்கியமாகும். தூசி நாசித் துவாரங்களில் நுழைவதாலோ உறுத்தலை தோற்று விக்கக் கூடிய வாயுக்களை சுவாசிப்பதாலோ இந்நோய் தோன்றுகிறது.

காற்று சுவாசக்குழல் மற்றும் அதன் கிளைகளின் வழியாக நுரையீரலுக்குச் செல்லும். பல காரணங்களால் சுவாசக் குழல் அடைபடுவதாலும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இது அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையின் ஒரு வகையாகும். புதிதாகத் திருமணமான ஒரு இளைஞனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவனுக்கு மனைவியின் தலையிலுள்ள மல்லிகைப்பூ மணம் அலர்ஜி. சமையலின்போது தாளிக்கும் மணம் அலர்ஜி. ஒட்டடை அடித்தால் அலர்ஜி. இவற்றைத் தவிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் மருத்துவரின் அறிவுரை.

ஆஸ்த்மாவிற்கு காரணங்களாகப் பல கூறப்படுகின்றன. வீட்டுத் தூசுப் பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள், தொழிலில் ஏற்படும் ஆஸ்த்மா, உணவினால் ஏற்படும் ஆஸ்த்மா, மருந்தினால் ஏற்படும் ஆஸ்த்மா என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. உணர்ச்சி சம்பந்தப்பட்ட மற்றும் மனோரீதியான மாற்றங்களும் அதே அளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். அதேபோன்று வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களும் ஆஸ்த்மாவை உண்டாக்கும்.

இருமல் மற்றும் மூச்சிரைப்பு, மூச்சுவிடுவதில் குறைபாடு, மார்பு இறுக்கம், சளி உற்பத்தியாதல் ஆகியவை ஆஸ்த்மாவின் அறிகுறிகள்; எனினும் இருமலும் மூச்சிரைப்பும்தான் முக்கிய அறிகுறிகளாகும். ஆஸ்த்மாவினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நோயாளிகள் சகஜ வாழ்க்கை வாழ முடியும். ஒவ்வாப் பொருட்களைத் தவிர்த்துவிடுவதன் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

ஆஸ்த்துமாவிற்கு ஸ்டீராய்டு மருந்துகள்தான் மிக்க செயல்திறனுடைய மருந்துகளாகும் என்றும் தடுப்பு மருந்துகள் சுவாசக் குழாயை விரிவாக்கும் மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சைகள் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆஸ்த்மா நோயாளி களுக்கு உபயோகமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்த்மா நோயாளிகளுக்கு உள்ளிழுக்கும் சிகிச்சை முறைதான் சிறந்த சிகிச்சை முறையாக இந்நூல் குறிப்பிடுகிறது.

ஆஸ்த்மாவை தூண்டும் விசைகளை அடையாளம் கண்டுகொண்டு தவிர்த்துவிட்டால் நோயின் கொடுமை யிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயாளிகள் சகஜமான வாழ்வு வாழலாம் என்று இந்நூல் கூறுகிறது.

1995 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தினக் கொண் டாட்டத்தின் முக்கியக் கருவான ஆரோக்கியத்திற்கு அறிவியல் என்பதை ஒட்டி விக்யான் பிரசார் வெளியிட்டுள்ள தொகுதி வெளியீடுகளில் ஒன்றான Understanding Asthma என்ற நூலின் மொழி பெயர்ப்புதான் ஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் என்ற இந்த நூல். டாக்டர் எஸ். ராஜா அழகாக மொழி பெயர்த்துள்ளார்.

ஆஸ்த்மாவை அறிந்துகொள்வோம்
ஆசிரியர் : டாக்டர் எஸ்.கே. ஷர்மா,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 30/-
q


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com