Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

நூலகம் ஓர் அறிமுகம்:

கிருஷ்ணகோவிந்தன்

பொது நூலகங்கள் வளர்ச்சி அடைந்து, அவை நிறுவியவர்களின் பயனுக்காக, பெருமையைப் புலப்படுத்த அவர்களோடு சார்ந்த பிரபுக்களுக்கு பயன்பட்டன. ஏதோ ஓரிரு சமயத்தில் சாதாரணக் குடிமகனும் நிரம்பப் படித்து அறிஞன் ஆக இருந்தால் அதன் பெயர் பெற்றான். எனவே அவை பொது மக்களின் அறிவை வளர்க்க, கல்வியைப் பரப்ப உதவும் சாதனங்களாகப் பணியாற்றவில்லை.

Men பொது நூலகங்களில் ஒரு மறுமலர்ச்சி :

கி.பி. 18-வது நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டில் இந்த நூற்றாண்டில் தான் நூலகத் துறையில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டதெனக் கூறலாம். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் டாக்டர் பிரேயும் (Bray) தாமசுகிர்க்வுட்டுமாகும் (Thomas kirkwood) இவர்களது சலியாத உழைப்பின் காரணமாய் கிராமிய நூலகங்கள் பல திறக்கப்பட்டன. வில்லியம் ஈவர்ட் (William Ewart) என்பவரது பெரு முயற்சியும் இங்குப் பாராட்டுதற்குரியதாகும். இவர் ‘டம்ப்ரய்சு’ என்ற பகுதியில் வாழும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் ஆவர். பொது நூலகங்கள் மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப் பெற வேண்டும் என்ற கொள்கைக்காகப் பெரிதும் உழைத்து வெற்றியும் கண்டவராவார். மக்களுக்காக இந்த நூற்றாண்டில் தொடங்கப் பெற்ற பொது நூலகங்களின் ஆட்சிப் பொறுப்பினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிக் குழுவினரே (elected local council) மேற்கொண்டிருந்தனர். ஒரு பகுதி நூலகச் செலவிற்கு ஒதுக்கப்பட்டது. இது பற்றிய வரவு செலவுத் திட்டம் ஊராட்சிக் குழுவினரது முடிவுகளைப் பொறுத்ததாகும். நூலகக் கட்டணம் ஏதுமின்றி மக்கள் இந்த நூலகங்களைப் பயன்படுத்தும் முறையினைப் பெற்றுப் பேரின்படைந்தனர்.

இதற்கு பின்னரே இவ்வடிப்படையில், நூலகத் துறையில் சிறந்ததொரு வளர்ச்சியினைக் காணுகின்றோம். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம் பிறந்தது. திருப்பம் உண்டாயிற்று. நூலகம் பொது மக்களின் அறிவை வளர்க்கவும், கல்வியைப் பரப்பவும் நல்லதொரு சாதனம் என்று ஆளவந்தவர்கள் கண்டார்கள், மக்களுக்கும் உணர்த்தப்பட்டன.

எனவே 1808-ல் இலக்கிய ஆக்க நிதியிலிருந்து அச்சான நூல்களை விநியோகிக்கும் போது, அதைப் பெறுவதற்கான தகுதியுள்ள நூலகங்களைத் தொகுக்கத் தொடங்கியதும் பம்பாய் அரசு கி.பி. 1784-ல் கல்கத்தாவில் நிறுவப்பட்ட வங்க இராயல் ஆசியக் கழகம் 1808-ல் ஒரு நூலக கட்டிடத்தைக் கட்டி முடித்தது. அது பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டு உபயோகிக்கும் நடைமுறையை 1820-ல் வெளியிட்டது. இந்த நூலகம் பெரும்பாலும் வெள்ளையர்களின் உபயோகத்திற்கே பயன்பட்டது.

கி.பி. 19-வது நூற்றாண்டின் மத்தியில் தேர்ந்து எடுக்கப்பட்ட நூலகக் குழுவினரால் (select commitee) பொது நூலகங்களைப் பற்றி அறிக்கை ஒன்று கி.பி. 1849-ல் வெளியிடப்பட்டது. வில்லியம் ஈவர்ட்டே இக்குழுவின் தலைவராவார். இதற்கு நாலாண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட பொருட்காட்சிச் சாலைச் சட்டத்திற்குக் (Museum Act) காரணமாக இருந்தவரும் இவரே. இச்சட்டத்தின் படி ஊராட்சிக் குழுவினர் மக்களுக்காக வேண்டி, அவர்களது வரிப்பணத்திலிருந்து செலவு செய்து பொருட்காட்சிச் சாலைகளைத் திறந்தனர். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக ஏழு நகரங்களில் பொருட்காட்சிச் சாலைகள் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட பொருட்காட்சிச் சாலைகளில் ஒன்றுதான் இது. இன்று உலகோர் உயர்த்திப் பேசும் பிரிட்டிசு பொருட்காட்சி சாலையாகும். (British Museum London) இங்குப் பணியாற்றிய எட்வர்ட் எட்வர்ட்சு (Edward Edwards) என்பவர் பிற நாட்டு நூலகத்துறை பற்றிய புள்ளி விவரங்களை எல்லாம் சேகரித்து வெளியிடச் செய்தார். இவர் தந்த புள்ளி விவரங்கள் எல்லாம் ஒன்று விடாது படித்து ஈவர்ட், பொது நூலக மசோதா ஒன்றினைத் தயாரித்து கி.பி. 1850-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பாராளுமன்றம் முன் கொண்டு வந்தார். சூலை மாதத்தில் இம் மசோதா பல எதிர்ப்புக்களிடையே நிறை வேறவே ஆகஸ்ட் 14-ல் இம்மசோதா நூலகச் சட்டமாக (Library Act) ஆகியது.

10,000க்கு மேற்பட்ட மக்கள் தொகை உடைய இங்கிலாந்து நாட்டு நகரங்களிலெல்லாம் இச்சட்டம் நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி சொத்து வரியுடன் “அரைப்பென்னி” நூலக வரியாக மக்களிடமிருந்து வாங்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். நூலகக் கட்டிட வாடகைக்கும், நூலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குச் சம்பளத்திற்கும்தான் இப்பணம் போதுமானதாயிருந்தது. நூல்களை நன்கொடையாக மக்களிடமிருந்து பெற்றனர். மக்களது அளவிடற்கரிய ஆர்வத்தினைக் கண்ட அரசியலார், ‘அரைப் பென்னி’ வரியினை ஒரு பென்னியாக உயர்த்தினர். 1853-ல் அயர்லாந்து, ஸ்காட்லாந்து இவ்விரண்டு இடங்களிலும் கூட இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

தொடக்கத்தில் நூலக வளர்ச்சி ஆமை வேகத்தில் தான் இருந்தது. முதல் பத்தாண்டுகளில் இருபத்து நான்கு இடங்களில்தான் இச்சட்டம் அமலிலிருந்தது. நார்ஷச் நகரில்தான் முதன் முதலில் இச்சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் முதல் முதலில் நூலகங்களைத் தொடங்கிய பீடும் பெருமையும் வின் செஸ்டர், மான்செஸ்டர் நகரங்களைத்தான் சாரும். மான்செஸ்டர் நூலகத் தலைவராய் ‘எட்வர்ட் எட்வர்ட்சு’ நியமிக்கப்பட்டார். இந்த நூலகங்களில் தான் பிரிட்டிசு நூலக நலப் பணிகள் உருவாவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நார்விச், சால்போர்டு, பிரிட்டன், பால்டன், வால்சால் போன்ற இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. காலமும் அறிவும் வளர்ந்து வருதல் போல நூலகத்தின் எண்ணிக்கையும் வளருவதாயிற்று. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் தொண்ணூற்றிரண்டு நூலகங்கள் சிறந்து விளங்கின.

நூலகச் சங்கம் (Libracy Association)

1897-ல் நூலகச் சங்கம் (Library Association) ஒன்று தொடங்கப்பட்டது. பொது நூலகத் தலைவர்களும், பிற நூலக அலுவலர்களும், நூலக வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர்களும், இச்சங்க உறுப்பினர்களாயினர். இச்சங்க உறுப்பினர்களில் செப்பீல்டு நகரப் பொது நூலகத்தில் பணியாற்றிய “தாமசு கிரீன்” (Thomas Green) குறிப்பிடத்தக்க வராவர். மேடைகள் தோறும் பேசியும், ஏடுகள் தோறும் எழுதியும், மக்களின் உள்ளந்தோறும் நூலகங்களின் சிறப்பினைப் பதிய வைத்தவர் இவரே.

இலவசப் பொது நூலகங்கள் என்ற 463 பக்கங்கள் கொண்ட, நூலகத் துறை நூல்களுள் தலை சிறந்த நூலாகக் கருதப்படும் நூலொன்றை எழுதி வெளியிட்டார். நூலகங்களை பற்றிய செய்திகளையும் அவை புரியும் சேவைகளையும் விளக்கிப் புதிய முறையில் வெளியிடப்பட்ட இந்த நூல் பல்வேறு தலைப்புகளில் பல பதிப்புகளாக உலகெங்கும் பரவின, பரப்பினர்.

கி.பி. 1910-லிருந்து 1937 ஆம் ஆண்டு வரை இப்புத்தகத்தின் பல பதிப்புக்களை வெளியிட்டவர் “பிலிப்சு” என்பராவர்.

1948-ல் இறுதியாக வெளிவந்த பதிப்பின் பதிப்பாசிரியர் ஜேம்சு கிளார்க்காவர். எண்ணிறந்த மக்களுக்கு நூலகத்தை பற்றிய அரிய செய்திகளை விளக்கி ஆயிரம் ஆயிரம் மக்களை அந்த அறப்பணியில் ஈடுப்படுத்திய அருமையும், பெருமையும் அந்த நூலுக்கு உரியன. நூலகத் துறையைப் பற்றிய புள்ளி விவரங்களைச் செயல் முறைகளையும் விளக்கமாக இந்த நூல் எடுத்துரைக்கின்றது.

மேலும் இத்துறையில் ஈடுபடுவோர்க்குரிய தொழில் நுணுக்கங்களையும் தெளிவுபட இந்த நூல் தெரிவிக்கின்றது. 1890-ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்றாவது பதிப்பில், நூலாசிரியர் “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 133 இடங்களில் தான் நூலகச் சட்டம் நிறை வேறியிருந்தது; இன்று 208 இடங்களில் இந்த நூலகச் சட்டம் அமலிலிருக்கின்றது” என்று எழுதியுள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கும் அறிவு மலர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் அவரே. அத்தகைய பெரியாருக்கு நூலக உலகம் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது என்பதை அறியலாம். வளர்ந்து வரும் நூலகத்துறையில் 1892-ல் மற்றொரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இந்த மறுமலர்ச்சிக்கு “ஜேம்சு டப் பிரவுன்” என்பவர் தந்தையாவர். இவரால் எழுதப்பட்ட நூலகத்துறை பற்றிய அளவில் சிறந்த கட்டுரைகள் மக்களிடையே அறிவாற்றலையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தின. நூலகத்திற்கு வரும் மக்கள் பிறர் உதவியின்றி உளம் விரும்பிய நூல்களோடு உறவாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் “விரும்பின படிக்கும் நூலக முறையினை” (Open Access system) உருவாக்கியவர் இவரே. முதன் முதலில் இதை நடைமுறைக்குக் கொண்டு வந்து வெற்றியும் பெற்றவர் இவரே ஆவார். இன்றும் இம்முறைதான் உலகில் பெரும்பான்மையான நூல்கங்களில் நடைமுறையில் உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com