Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007
தலையங்கம்

விடுதலை பெற்று அறுபதாண்டு நிறைவும்: அரசியல் சட்டமும் குடியரசு தலைவர் தேர்தலும்

“1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளான இன்று, இந்திய மக்களாகிய நாம், சமூக பொருளாதாரம், அரசியல், நீதி, எண்ண வெளிப்பாடு, நம்பிக்கை, ஈடுபாடு, வழிபாட்டுச் சுதந்திரம், வாழ்நிலை வாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் ஆகியவற்றைக் குடிமக்களுக்குப் பெற்றுத்தரவும், தனிமனித மதிப்பு தேசிய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிசெய்யும் சகோதரத்துவத்தை அடையவும், அரசியல் நிர்ணய அவையில், இந்த அரசியல் சட்டத்தை ஏற்று நிறைவேற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொண்டு, முழு அரசாண்மை உடைய ஜனநாயகக் குடியரசை அமைக்க உறுதியாகத் தீர்மானிக்கிறோம்” என்பது இந்திய அரசியல் சட்டத்தின் பாயிரம். இந்திய தேசிய காங்கிரசின் ஆவடி மாநாட்டுக்குப் பின் “சோசலிசக் குடியரசு” என்னும் திருத்தமும் இப்பாயிரத்தில் இடம் பெற்றது.

இந்த அரசியல் சட்டம் ஏறத்தாழ இரு நூற்றாண்டுகால இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகவும் வளர்ந்து முதிர்ந்த மேலை நாடுகளின் அரசியல் சட்டங்களைக் குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் அரசியல் சட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டும் உருவாக்கப்பட்டது. நம்முடைய இந்த அரசியல் சட்டம், நம் விடுதலைப் போராட்டமும், உலக அரசியல் இயக்கங்களும் வழங்கிய அனுபவ அறிவுக் கருவூலம் என்பதனை எடுத்துகாட்டுகிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசியல் பிதாமகர்களும் சட்ட அரசியல் வல்லுநர்களும் அளித்த நல்ல கருத்துக்களும், குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பரிந்துரைகளும் இந்திய அரசியல் சட்டத்தின் உரமாக அமைகின்றன என்பது நினைவு கூரத்தக்கது. இந்திய நாடு சுதந்திரம் பெற்ற 60 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கும் இத்தருணத்தில் குடியரசு தலைவர் தேர்தலும் நடைபெறுகிறது.

விடுதலை வேள்வியில் புடம் போட்டு எடுக்கப்பட்ட சட்ட அரசியல் வல்லுநர் ராஜேந்திரபிரசாத் முதல் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல்கலாம் வரை குடியரசு தலைவர் பதவியை அணி செய்து வந்துள்ளனர். குடியரசு தலைவர்களில் தென்னகம் சார்ந்த தத்துவமேதை இராதாகிருஷ்ணன், தொழிற்சங்கத் தலைவர்களான வி.வி.கிரி, ஆர். வெங்கட்ராமன், அரசியல் மேதை கே.ஆர். நாராயணன் போன்றோரும் குடியரசு தலைவராகப் பணி செய்து பதவிக்குச் சிறப்புச் சேர்த்துள்ளனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் முன்னிருந்தவர்களிலிருந்து சற்று வேறானவர். அவர் அரசியல் பாரம்பரியமோ உயர் மாந்தர் குழுத் தொடர்போ, உறவோ இல்லாதவர், ராமேஸ்வரத்தில் பின்தங்கிய ஏழை எளிய இஸ்லாமியக் குடியில் பிறந்து தன் இடையறா முயற்சியால் அறிவியல் உலகில் மேதையாகி அணுகுண்டு காணும் அளவுக்கு விஞ்ஞானத்தில் உயர்ந்து எழுந்தவர்.

உங்கள் நூலகம்


இரு திங்கள் இதழ்

கௌரவ ஆசிரியர்
முனைவர். அ.அ. மணவாளன்

ஆசிரியர்
ஆர். பார்த்தசாரதி

நிர்வாக ஆசிரியர்
ஆர். சாரதா

ஆலோசகர் குழு
ஏ.எஸ். மணி
ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி
கல்பனாதாசன்

ஆசிரியர் குழு
கே.ஜி.சத்தியநாராயணன்
எஸ். சண்முகநாதன்
பா. பாஸ்கர்
சண்முகம் சரவணன்
சி.பி. ராணி

இதழ் வடிவமைப்பு
மாரிமுத்து

உங்கள் நூலகம்
நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்
41-B, சிட்கோ இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600 098.
தொலைபேசி: 044-26251968
Email: [email protected]

தனி இதழ்: ரூ.10
ஓராண்டு சந்தா: ரூ.100
வெளிநாட்டு சந்தா: 12 டாலர்

அதே போல தமிழர்களின் வாழ்க்கை நெறி வகுத்த வள்ளுவம் கூறியாங்கு வாழ்ந்து காட்டியவர். தனக்கென மனைவி மக்களோ, குடும்பப் பற்றோ எதுவுமில்லாது வாழ்பவர். காட்சிக்கு எளியவர். பழகுவதற்கு இனியவர். மணற்கேணியன்ன அறிவினர். ஆனால் அவருக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது கண்கூடு. இந்திய நாடு 2020-ல் உலக நாடுகள் எல்லாம் மதிக்கத்தக்க வலிமை வாய்ந்த அரசாக அறிவு, பொருளாதாரம் என்னும் எல்லாத் துறைகளிலும் வளர்ந்த உயர்ந்தோங்கிய முதன்மை நாடாக மிளிர்தல் வேண்டும் என்பதுவே என்சிபிஎச் வெளியிட்ட அவருடைய நூல்கள் இந்தியா 2020 என்பதே சான்று.

அவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இமயம் முதல் குமரிவரை கல்வி கற்கும் இந்தியச் சிறார்களை, இளைஞர்களை, மாணவர்களை அவர் சென்ற இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக (திரளாக) சந்தித்து ஊக்குவித்து எதிர் காலம் பற்றிச் சிந்திக்கச் செய்தது அவருடைய ஈடிணையற்ற பங்களிப்பு, இளைஞர்களே “மூலப் பொருள்” எனக் கண்டார். ஆசிரியர் தொழிலுக்கு முதலிடம் தந்த பெருமகனார் இவர்.

இத்தகைய சான்றோர் இரண்டாம் முறையாகக் குடியரசு தலைவராகத் தொடர விருப்பமில்லை என்று உறுதியாகச் சொல்லிய போதிலும் அண்மையில் உருவான சில நிகழ்ச்சிகள் அவர் மேல் அரசியல் சேற்றை வாரிவீசின. இது வருந்தத்தக்கது.

ஐந்து ஆண்டுக் காலமாக அவர் உருவாக்கிய ஜனநாயக மரபுகள் - குடியரசு தலைவரின் மாளிகையில் யார் வேண்டுமானாலும் சென்று அவரைக் காணலாம், நூலகம் எல்லா மாணவர்களாலும் சிந்தனையாளர்களாலும், விஞ்ஞானிகளாலும், பயன்படுத்தப்படலாம். அவர் அமைத்த நூலகமும், தோட்டமும் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்பனவெல்லாம் கட்டிக் காக்கப்படும் என நம்புகிறோம்.

என்சிபிஎச் இன் வாழ்விலும் வளர்ச்சியிலும் ஈடுபாடும் அக்கறையும் காட்டிய குடியரசு தலைவர் பதவிக்குச் சிறப்புச் சேர்த்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் ஓய்வு பெற்று நெடுநாள் வாழ்ந்து தம்முடைய ஆசிரியப் பணியைத் தொடர வேண்டும் என உங்கள் நூலகம் நெஞ்சார வாழ்த்துகிறது.

அடுத்து வரும் குடியரசு தலைவர், பெண்மணியாக இருக்கவேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பம். இந்திய மாதர் இயக்கம் பல ஆண்டுகளாக மாதர் முன்னேற்றத்திற்காக அரும் பணியாற்றி வந்துள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியினரான பெண்கள் சமூக வாழ்வில் மூன்றில் ஒரு பங்காவது வேண்டும் எனக் கேட்கின்றனர். இந்த நியாயமான கோரிக்கையைக் கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் படிப்படியாகப் பெற்றுவந்துள்ள அனுபவமும் சாதனைகளும் நியாயப்படுத்துகின்றன.

கல்வி, விளையாட்டு, நிர்வாகம், செயற்கைக் கோள்களில் பறப்பது ஆகிய துறைகளில் திறமையானவர்கள், பெண்கள் சிறந்து விளங்க முடியும் என்னும் உண்மை நிலை நாட்டப்பட்டு வருகிறது. இந்தப் பின்புலத்தில் ஒரு பெண்மணி குடியரசு தலைவராகத் தேர்வு பெறுவது பாராட்டி வரவேற்கத்தக்கது. திருமதி பிரதிபா பட்டேல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான முற்போக்குக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வெற்றி வாய்ப்பு உள்ளது. இவ்வம்மையார் இந்திய நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவர் என்பது இவருக்குப் பெருமை சேர்க்கும். நல்ல மரபுகளைத் தொடர்ந்து காப்பார் என்ற நம்பிக்கையில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் நூலகம் நெஞ்சார வாழ்த்துகிறது.

அரசியல் சட்டம் பாயிரம் காட்டும் இலக்குகள் இலட்சியங்களை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணமிது. அறுபதாண்டுக்குப் பிறகாவது

தனியார்மயமாதல், தாராளமயமாதல் உலகமயமாதல் என்னும் பொய் முழக்கம் உலகை உறக்கத்திலாழ்த்தும், நாட்டைக் கவ்வி நாசமாக்கும். நாடு சுதந்திரம் பெற்று அறுபதாண்டு நிறைவு நாளில் - ஆண்டில் நாடு எதிர்காலத்தில் முன்னேறிச் செல்ல வேண்டிய திசை வழிபற்றி இந்திய மக்கள் சிந்தித்துத் தெளிவு பெற வேண்டிய இன்றியமையாத கடமை எழுந்துள்ளது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com