Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

நூல் அறிமுகம்

மந்திரச்சிமிழ் (வடதிசை மக்களின் தேவதைக் கதைகள்) (பாகம் 1, 2)

ஆசிரியர்: ஜரினா ஜெலிஸ்நோவா,
தமிழில்: கயல்விழி, விலை : ரூ. 70.00, 60.00

இக்கதைகள் கவித்துவமும், கற்பனையும் கதை கூறலின் சுதந்திரத்தைக் கொண்டாட்டத்துடன் கூறுபவை. வேறுபட்ட கலாச்சாரப் பின்புலமாயினும் மாய நிகழ்வு களும் உணர்வோட்டமும் நம் கதை மரபோடு மிக இணக்கமாக இளம் வாசகர்களுக்கு விருந்தாக அமைகின்றன.



அவன் விதி

ஆசிரியர் : மிகயீல் ஷோலகவ்,
மொழி பெயர்ப்பு : மீனவன்,
விலை : ரூ. 30.00

நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளரான மிகயீல் ஷோலகவின் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் இது.

வெண்ணிற இரவுகள்

ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி,
மொழி பெயர்ப்பு : ரா. கிருஷ்ணையா,
விலை : ரூ. 40.00

உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான ருஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவல் இது. என்றைக்கும் எப்போதும் புதிய பரிமாணங்களை, அனுபவங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கும் காதல் கதை.

வானம் பார்த்த பூமி

ஆசிரியர்: வஞ்சி நாயகன், விலை : ரூ. 50.00

கொங்கு நாட்டின் மண்ணையும், மண் சார்ந்த வட்டாரச் சொற்களையும் கொண்டு கதை மாந்தர்களின் வழியே விவசாய நிலங்கள் பறிபோவதைக் கூறும் நாவல்.

ஓட்டகக் கண்

ஆசிரியர் : சிங்கிஸ் ஐத்மாத்தவ்,
தமிழில் : யூமா. வாசுகி, விலை : ரூ. 30.00

லெனின் பரிசு பெற்ற நாவலாசிரிய ரான சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல் இது.
சிக்கலான கண நேர பொழுதுகளை சரியாக கணிக்க முடியாமல் வாழ்வின் திசைகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை கூறுகிறது இக் குறுநாவல்.

கவிதை வளர்த்த மணிக்கொடி

ஆசிரியர்: க. உமாமகேஸ்வரி, விலை : ரூ. 50.00

கலை கலைக்காகவே என்று செயல்பட்டு வந்த அரசியல் பேசாத இலக்கியவாதிகளின் இதழான மணிக்கொடி இதழைப் பற்றிய ஆய்வேடான இந்நூலில் கவிஞர் சிற்பியின் முன்னுரை சேர்க்கப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP