Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2007

உயர் நீதிமன்றத்தில் தமிழ்

நாட்டு விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது
நாட்டு விடுதலையுடன்
மொழியும் விடுதலை பெற்று வளரும் என
நம்பிக்கை வலிமை பெற்றது.
இதனாலேயே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்

“தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா”
என பாடினார்.
இருப்பினும் 1937 ஆம் ஆண்டு
முதலமைச்சராகயிருந்த இராஜாஜி
கட்டாய இந்தியைத் திணித்தார்.

“தமிழெனும் அளப்பரும் சலதி” எனக் கம்பனும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனப் பாரதியும் “தமிழுக்கு அமிழ்தென்றுபேர்” எனப் பாரதிதாசனும் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்து சொல்லி வந்துள்ளனர்.

காலனி ஆதிக்கக் காலத்தில் கிருத்துவம் பரப்ப இந்தியா வந்த பார்த்தலோமியா சீகன்பால்கு முதல் கால்டுவெல் வரையிலான மேல்நாட்டு அறிஞர் தமிழ்கற்று அதன் சிறப்பை உலகறியச் செய்தனர். 1856 ஆம் ஆண்டு கால்டுவெல் தமிழ் தனித்தியங்கவல்ல மொழி என்று சான்றுகளோடு நிறுவினார். இக்கால மேல்நாட்டுத் தமிழ் அறிஞர் தமிழ் செம்மொழியாக ஏற்புப் பெறுவதற்கு அரும் பணியாற்றியுள்ளனர்.

அண்மையில் தமிழ் உயர்நீதிமன்ற மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்னும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு ஏ.பி. ஷா ஒப்புக் கொண்ட பின்புலம்.
சங்கம் மருவிய காலத்திலிருந்து தமிழ் மேல் பிறமொழிகளின் செல்வாக்குப் பெருகி வந்துள்ளது. பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம், அரபி, பாலஸ்தீனம் மொழிகளின் தாக்கமும், செல்வாக்கும் வரலாற்று நெடுகிலும் இருந்துவந்துள்ள காரணத்தினால் தமிழால் முழுவளர்ச்சி பெறமுடியவில்லை. எடுத்துக்காட்டாக ரோமிலாதாப்பர் “இந்திய வரலாறு” என்னும் நூலில் சோழர் காலத்தில் உயர்கல்வி மையங்களில் சமஸ்கிருதத்துக்கு ஒப்பத் தமிழ்க் கல்விக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தால் இன்று காண்பதைவிட தமிழ் வீரார்ந்த மரபைப் படைத்து கொண்டிருக்க முடியும் (பக்கம் 213) என்று கூறுகிறார். இது தமிழ் மன்னர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு இருந்த நிலை. காலனி ஆதிக்கக் காலத்திலும் தொடர்ந்தது எனலாம்.

தமிழ், தெய்வத்தமிழ், முதலை வாயிலிருந்து பெண்ணை உயிர்த்தெழச் செய்தது, திருகதவம் திறக்கச் செய்தது என அற்புதங்கள் செய்தது தமிழ்மொழி எனச் சான்றோர் பலர் கூறியுள்ளனர். இவை எல்லாம் புராணப் பழங்கதைகள் இக்காலத்துக்கு ஒவ்வாதவை.

நாட்டு விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது நாட்டு விடுதலையுடன் மொழியும் விடுதலை பெற்று வளரும் என நம்பிக்கை வலிமை பெற்றது. இதனாலேயே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” எனப் பாடினார். இருப்பினும் 1937 ஆம் ஆண்டு முதலமைச்சராகயிருந்த இராஜாஜி கட்டாய இந்தியைத் திணித்தார். அதேபோது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி ஆனதும் அக்காலத்தில்தான்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மும்மொழிக் கொள்கை உருவாயிற்று. அதில் வட மாநிலங்களில் தாய் மொழியும் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் ஆங்கிலமும் முதல் இடம் பெற்றன. நாளடைவில் கல்வி தனியார் மயமானதால், ஆங்கிலம் பயிற்று மொழியாக ஏற்றம் பெற்றது. மழலைப் பருவத்திலிருந்து இறுதிக் கல்விவரை ஆங்கிலவழிக் கல்வி வலியுறுத்தப்பட்டது. ஆனால் இடதுசாரி இயக்கம் தொடர்ந்து தமிழே பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும் என்று முயன்று வந்துள்ளது, கடந்த நூற்றாண்டு ஐம்பதுகளிலேயே என்.சி.பி.எச். “தமிழில் முடியும்” என்னும் நூல் வெளியிட்டது.

தனியார் மயமாதல், உலக மயமாதல் என்னும் கொள்கை ஆங்கில மொழிக் கல்விக்கு ஏற்றம் தந்து வந்துள்ளது. அதே போது தமிழுக்கான போராட்டமும் வலிமை பெற்று வந்துள்ளது. தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்கப்பட்டது. இதன் விளைவாகவே தமிழக அரசின் முன் முயற்சியினால் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி தமிழிலேயே வாதிடலாம் தமிழிலேயே தீர்ப்புகள் வழங்கலாம் என ஆதரவு நல்கியுள்ளார்.
ஆனால் இதற்கான வாய்ப்புகள் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தமிழ் மன்னர் ஆட்சிக் காலத்திலும், பின்னரும் தமிழே நீதிமன்ற வழக்காடுமன்ற மொழியாக இருந்து வந்துள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் கண்ணகி தன் கணவன் குற்றமற்றவன் என நிலை நாட்டத் தமிழில் வாதாடினாள் எனச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. அக்காலத்தில் நீதிமன்றங்களில் வழங்கிய தீர்ப்புகள் கிடைத்தபாடில்லை. இருப்பினும் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்னும் விதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் உருவாயிற்று. தீவினை வசமாக நாடு விடுதலை பெற்ற பிறகும் இது தொடர்கிறது.
இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்படும் போது மொழி பற்றி உறுதியான நிலை எதுவும் எடுக்கப் படவில்லை.

ஆனால் இந்தி பொது மொழியாக இருக்க வேண்டும் என்னும் மகாத்மா காந்தியின் கொள்கைக்கு முக்கிய இடம் தரப்பட்டது. அதேபோது ஐரோப்பிய மொழிகள் இலத்தின் மொழியின் துணைக்கொண்டு வளர்ந்ததுபோல இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தின் துணைக்கொண்டு அகராதிகளையும் சட்டங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்னும் நோக்கோடு பிரிவு 351 வரையப்பட்டது. இந்தப் பின்புலத்தில் இந்திய அரசியல் சட்டம் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட பின் அதைப் படித்த பண்டித ஜவாகர்லால் நேரு அதில் கண்ட ஒரு இந்தி சொல்லைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்று அன்று குடியரசுத் தலைவராகயிருந்த ராஜேந்திர பிரசாத்துக்குக் கடிதம் எழுதியது நினைவு கூரத்தக்கது.

மொழி பெயர்ப்புக்கு ஆக்கபூர்வமான முயற்சியும் மரபு சார்ந்த மொழியாக்கம் தேவை. மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய நடையில் இருக்க வேண்டும்.

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் தமிழிலேயே வழக்காடுவதும் சாட்சிகளை விசாரிப்பதும் இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள். மொழி பெயர்ப்பு இன்று எளிதாக்கப்பட்டு வருகின்றது. கணினியின் துணைக்கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான சட்டங்கள் இந்திய அரசியல் சட்டம், மாநிலச் சட்டங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே தமிழில் தீர்ப்பு வழங்க இடர்ப்பாடு ஏதும் நேராது. ஆனால் பிற மாநிலம் சார்ந்த தமிழ்மொழி அறிந்திராத நீதிபதிகள் தமிழில் நீதி வழங்குவது சற்று சிரமமாகயிருக்கும். இந்திய நிர்வாக சேவைத் துறை (Indian Administrative) தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பல்வேறு மாநிலங்களில் பணி செய்து வரும் போது மாநில மொழி கற்ற வல்லுநர் ஆகின்றனர். ஒரு மாநிலத்தின் நீதிமன்றத்தில் அந்த மாநில மொழி சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பதுதான் சிறந்த முறை. பிறமொழி சார்ந்தவர்கள் நீதிபதிகளாக வந்தே தீரவேண்டும் என்னும் நிலை ஏற்படுமானால் அரசும், நீதிமன்றங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும் எல்லா மட்டங்களிலும் தமிழே இடம் பெற வேண்டும் எளிய சாதாரண மக்களுக்காக நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் என்னும் கோரிக்கை நிறைவேற்றப்படும். தமிழின் மெலிவும் நலிவும் நீங்கும். வலிமை பெற்று வளரும்.

சென்னைப் புத்தகக்கண்காட்சி இருபத்து ஒன்பதாண்டுகளாகச் சீரும் சிறப்புமாக நடந்தேறி வருகிறது. ஜனவரி பத்து இரண்டாயிரத்து ஏழு அன்று 30வது புத்தகக் காட்சி சென்னைப் பச்சையப்பன் கல்லூரி எதிரில் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் தொடங்குகின்றது.

சென்னைப் புத்தகக் காட்சி வரலாறு படைத்த சிறப்புடையது. புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் அனைவரையும் ஈர்த்த பெருமையுடையது. பல சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் மாணவர்களும் பலன் பெற்றுள்ளனர். இதனை வழிகாட்டியாகக் கொண்டு அண்மையில் ஈரோடிலும், மதுரையிலும் நடைபெற்ற புத்தகக் காட்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளன. புத்தகத் திருவிழா என்று மதித்துப் பாராட்டத்தகுமாறு நடந்தேறிப் பெருமை பெற்றுள்ளன.

அண்மைக்காலத்தில் புத்தக வெளியீட்டாளர் எண்ணிக்கையும், பெருகி வந்துள்ளமை பாராட்டத்தக்கது. இது மாறிவரும் உலகில் அறிவுத்தேடல் பெருகும் என்பதனை எடுத்துக்காட்டுகிறது. பல ஆண்டுகளாகப் பட்டித்தொட்டிகளில், பாதை ஓரங்களிலும் புத்தகக் காட்சி நடத்தி மக்களிடைப் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் கடனாற்றியது என்.சி.பி.எச்.

இன்று விழாக்கோலமாகப் புத்தகக் காட்சி நடைபெறுவது கண்டு என்.சி.பி.எச். பெருமிதம் கொள்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com