Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
தமிழக முதல்வருக்கு இரு விண்ணப்பங்கள்
தியாகு


1. ஏழாண்டு சிறைத் தண்டனை கழித்த ஆயுள் கைதிகள் விடுதலை என்பது அனைத்து ஆயுள் கைதிகளுக்கும் பொருந்தும்படிச் செய்யுங்கள். குற்றத்தின் தன்மை, சட்டப்பிரிவு, அரசியல் சார்பு எதையும் இந்த நேரத்தில் கருத வேண்டாம். ஏழாண்டு கழித்தவன் விடுதலையாகும்போது 17 ஆண்டு கழித்தும் விடுதலை பெறாமல் இருப்பவன் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.

2. காந்தி நூற்றாண்டு போலவே அண்ணா நூற்றாண்டும் மரண தண்டனை ஒழிப்புக்கு உதவ வேண்டும். காந்தியைப் போலவே அண்ணாவும் மரண தண்டனைக்கு எதிரானவர். புற்றுநோயின் வாயில் சிக்கி அமெரிக்க மருத்துவமனையில் படுத்துக் கிடந்தபோதும் தமிழ்நாட்டுச் சிறையில் ஒருவரைத் தூக்கிலிட விடாமல் தடுத்தவர் அண்ணா என்பது எண்ணிப் பார்க்கத்தக்கச் செய்தி. அண்ணா போலவே நீங்களும் மரண தண்டனைக்கு எதிரானவர் என்பதை அனைவரும் அறிவர். எதிர்க் கட்சிக்காரர்களாக இருந்தாலும், மூன்று மாணவியரை உயிரோடு கொளுத்திய குற்றவாளிகள் என்றாலும் அவர்களுக்கும் தூக்குத் தண்டனை கூடாது என்றீர்கள். கலைஞரே! இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அளவில் தூக்கைத் தூக்கிலிடக் குரல் கொடுங்கள். தமிழகச் சிறைகளில் தூக்குமர நிழலில் நிற்கும் ஒன்பது உயிர்களைக் காப்பாற்றுங்கள்.

கலைஞரே நீங்கள் செய்திருப்பது நன்று! சிறைத் தமிழர்களின் நன்றி! 1405 குடும்பங்கள் இழந்த ஒளியை மீட்டுக் கொடுத்தீர்கள். இன்னும் சில குடும்பங்கள் உங்கள் முகம் பார்த்துக் காத்துள்ளனர் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்.

- நக்கீரன். 24-09-2008


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.