Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
தோழர் பொழிலனைச் சிறையில் பார்த்தபின் எழுதிய கவிதை

இனமே உயிரித்திடு
பரணிப்பாவலன்


தந்தையை விஞ்சும் தனையனாய் - ஈன்ற
தாய்க்குப் புகழேந்தும் தலைவனாய் - தொல்வரவுச்
சிந்தைக்கு வற்றா நிலவனாய் - செந்தமிழ்
சிறக்கச் செய்திடும் புலவனாய் - இந்திய
மந்தைக்குப் பணியா வலவனாய் - பூம்பொழில்
மண்ணைக் காக்கும் உழவனாய் - அறிவில்
முந்தைக்குக் குறையாத் தமிழனாய் வாழ்ந்திடும்
முகிலே, பொழிலே வாழிய! வாழியவே!!
வேழம் மிரளும் நடையும் - காட்டு
வேங்கை அஞ்சும் கதைப்பும் - என்றும்
தாழாத் தமிழின் எடுப்பும் - அழகிய
தாமரை இதழின் நகைப்பும் - நாட்டை
ஆழமாய் எண்ணிடும் நோக்கும் - உறங்கா
ஆழ்கடல் காட்டும் சீற்றமும் - பகைக்கும்
தோழமை செப்பிடும் விழியும் கண்டு நான்
தோற்றேன் தோல்வியால் அகம்நெகிழ் வுற்றேன்.
கடுஞ்சிறைக் கம்பிக்கு உள்ளே - குறளைக்
கனிவாய் நடத்தும் பாங்கும் - கற்சுவர்
தடுப்பறை அடைத்து இருந்தும் - சங்கத்
தமிழைப் பரப்பும் பண்பும் - என்றும்
விடுப்பு இல்லா விழியும் - எங்கும்
விடுதலை முழங்கும் துடிப்பும் - சிறையைப்
படிப்பறை ஆக்கிய முதிர்வும் பார்த்து நான்
பசியற்றுப் போனேன் பித்தாய் அலைந்தேன்.
சிறைக்குள் இருப்பது பொழிலன் இல்லை!
சிதறிய மக்களாய் நாம்தான் - மூடிய
உறைக்குள் வாழ்வது மறமே இல்லை!
உயிர்க்கா சருகாய் நாம்தான் - வீட்டுக்
கரைக்குள் இருப்பது நாம்தான் - அவனோர்
காலக் கண்ணாடி! நிலத்தில் மண்ணில்
மறைந்து வாழ்வது நாம்தான் - அவனோ
“மறை”யாய் வாழ்வதைப் பாராய்! பாராய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.