Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
நவம்பர் 2008
சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே, சிங்கள அரசுக்குக் கொடுத்த ஆயுதங்களைத் திரும்பப் பெறு என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் (மெமோரியல் கூடம்) அருகில் சென்ற 13-10-2008 திங்கள் மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ததேபொக பொதுச்செயலாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். தோழர்கள் இகக தமிழகத் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன், ததேவிஇ பொதுச் செயலாளர் தியாகு, பெதிக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிகட்சித் துணைப் பொதுச் செயலாளர் க. சோழநம்பியார், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் இன்குலாப், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி பா. செயப்பிரகாசம், எழுத்தாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜீதா, திரை இயக்குநர் சீமான், ஓவியர் புகழேந்தி, தஒவிஇ சென்னை மாவட்டச் செயலாளர் செய்யாளன், சட்டக் கல்லூரி மாணவர் அலை பாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சமூகநீதித் தமிழ்த்தேசம் வெளியீட்டாளர் தோழர் சிவ. காளிதாசன் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தார். மக்கள் எழுச்சி இயக்கத் தோழர்கள், திரைப்பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட பலரும் திரளாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் தோழர் மு. மோகன்ராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ததேவிஇ, ததேபொக, தஒவிஇ, பெதிக, திக, விசிக, மசிஉக, ததொமு, ஆதித் தமிழர் பேரவை, சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெதிக, ததேவிஇ, பாமக, ஆதபே, ஆதவிமு, விசிக, புஇமு, ததேபொக, புஜதொமு, தஒவிஇ ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டன.

தஞ்சையில் ததேபொக, ததேவிஇ, தமிழர் கழகம், தமஉக, பெதிக, உதபே, ஆதபே, இகக(மாலெ), இசிஏபா ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டன.

மதுரையில் ததேவிஇ, ததேபொக, பெதிக, தஒவிஇ, ததேஇ, புஇமு, ஆதபே, தமஉக, வன்கொடுமை எதிர்ப்பு வழக்கறிஞர் மையம், மகளிர் ஆயம், புகபே ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டன.



வழிபாட்டு உரிமை கோரி ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னையை அடுத்த பொன்னேரியில் சேலம் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடும் உரிமையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2-10-08 காலை 10 மணியளவில் அம்பேத்கர் சிலை முன் நடைபெற்றது.

தோழர் மாறன் தலைமை வகித்தார். தோழர் தமிழரசு சிறப்புரையாற்றினார். தோழர் நிலவழகன் நன்றி தெரிவித்தார். நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com