Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
செவ்வணக்கம் - வி.பி. சிங் மறைந்தார்

v.p.singh இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1960களில் "காகா கலேல்கர் கமிஷன்', பின்னர் 1970களில் "மண்டல் கமிஷன்' என்று இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலை குறித்து இரு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டன. ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனைச் செயலாக்கம் செய்தால் பா.ஜ.க.வின் ஆதரவை இழந்து தமது அரசு கவிழ்ந்துவிடும் என்பது தெரிந்தும், விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக அதை நிறைவேற்ற முன்வந்தவர் வி.பி. சிங், பா.ச.க. மண்டல் கமிஷனை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது இயல்பே.

ஆனால் பாரம்பய காங்கிரசு தலைவர், நேருவின் பேரன் திரு. ராஜீவ் காந்தி மண்டல் கமிஷனை எதிர்த்து 10 மணி நேரம் பாராளுமன்றத்தில் பேசினார் என்பது வரலாறு. போதாததற்கு காங்கிரசின் வசந்த சாத்தேயும் பேருரையாற்றி எதிர்த்தார் என்பது காங்கிரசின் துடைக்க முடியாத களங்கமாகும். தாம் பதவியேற்ற ஓராண்டுக்குள்ளாகவே, 1990ஆம் ஆண்டு, நவம்பர் 10ந் தேதி பதவியிழந்தார் வி.பி. சிங். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் எந்தப் பிரதமரும் செய்யத் துணியாத ஓர் அரும்பெரும் செயலைச் செய்து மக்கள் நாயகனாகத் திகழ்ந்தார். சிறந்த கவிஞராக, ஓவியராக, மனிதநேயராக, பதவி ஆசை அற்றவராக, மதச்சார்பின்மையில் உறுதி கொண்டவராக, ஜனநாயகக் கொள்கைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த அவர் மறைந்தது நமக்குப் பேரிழப்பாகும். அவருக்கு நம் செவ்வணக்கம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com