Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
மும்பையும் கிளிநொச்சியும்

அமெக்காவுக்கு செப்டெம்பர் 11 என்றால் இந்தியாவுக்கு நவம்பர் 26. 2001 செப்டெம்பர் 9ஆம் நாள் புதுயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்த பயங்கரவாதத் தாக்குதல் 9/11 (செப்டெம்பர் 11) எனப் பெயர் பெற்றது போல் சென்ற நவம்பர் 26ஆம் நாள் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் 26/11 எனப் பெயர் பெற்று விட்டது. (அவர்களுக்கு மாதம்/நாள்; நமக்கு நாள் / மாதம்).


சிறப்பாசிரியர்

தியாகு

வெளியீட்டாளர் - ஆசிரியர்:

சிவ.காளிதாசன்

தொடர்புக்கு:

சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]


ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000

9/11 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசம் ஏட்டில் (2001 சூன் - நவம்பர்) "கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம். 9/11 போலவே நவம்பர் இருபத்தாறும் (26/11) வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை. அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கான தாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை.

பயங்கரவாதக் கொடுஞ்செயல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. மீறி ஒரு பயங்கரவாதம் நடந்து விடும் போது அதைச் செய்தவர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படிக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். எந்தப் பெயராலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதோ ஊக்குவிப்பதோ கூடவே கூடாது. அதே போது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது பயங்கரவாதியைச் சுட்டுக் கொல்வதோடு அல்லது சிறையில் அடைப்பதோடு முடிந்து விடாது. பயங்கரவாதத்தின் அரசியல்-சமூக வேர்களைக் களைந்திட வேண்டும். பயங்கரவாதிகள் உருவாவதற்கான களத்தை இல்லாமற் செய்ய வேண்டும்.

பிறவிப் பயங்கரவாதி யாருமில்லை. அவன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், எப்படி? பயங்கரவாதியால் அப்பாவிகளின் உயிரை ஈவிரக்கமின்றி பறிக்க முடிவதோடு, தன்னுயிரையும் தயக்கமேதுமின்றி அழித்துக் கொள்ள முடிவது எப்படி? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
மீண்டு வர முடியாது என்று தெந்தே சாவுக் கூண்டிற்குள் விரும்பி அடியெடுத்து வைக்கிற மனிதர்களின் உளவியல் எத்தகையது? அவர்களது துணிச்சல் மட்டும் உண்மையான பகைவர்களுக்கு எதிரானதாக அமையுமானால், அது ஒரு போர் முறையாக - தற்கொடைப் போர் முறையாக - மதிக்கப்படும், அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுவார்கள். மில்லர் முதல் மதியழகி ஈறாகக் கரும்புலிகள் இத்தகைய தற்கொடைப் போராளிகளே. இவர்களின் ஈகமும் வீரமும் வானும் கடலும் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.

Mumbai ஆனால் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பதின்மல் ஒன்பது பேர் பலியாகி விட்டாலும், அவர்கள் செய்த காயம் கோழைத்தனமானது. கண்மூடித்தனமாக மக்களைச் சுட்டுக் கொல்கிறவர்கள் - எவ்வளவு துணிச்சல்மிக்கவர்களாய் இருந்தாலும் - கோழைகளே. 9/11 குறித்து பாலத்தீன ‘ஹமாசு' இயக்கத்தின் ஆன்மிகத் தலைவர் சேக் அகமது யாசின் கூறியது ஈண்டு நினைவுகூரத் தக்கது: “எமது இயக்கம் இசுரேலிய இலக்குகளை எதிர்த்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது நியாயமானது. ஏனென்றால் நாங்கள் காலனி யாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். மறுபுறம், அமெக்காவில் தாக்குதல் நடத்தியவர்கள் எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்படிச் செய்யவில்லை.'' தற்கொலைத் தாக்குதல் என்பது ஒரு போர் முறை - அதனை விடுதலைப் போராளிகளும் பயன்படுத்தலாம், பயங்கரவாதிகளும் பயன்படுத்தலாம். தாக்கப்படுவது யார்? தாக்குதலின் குறிக்கோள் என்ன? என்பதைப் பொறுத்தே அச்செயலின் தன்மை கணிக்கப்படும்.

அமெக்காவின் 9/11 தாக்குதலுக்கும் இந்தியா வின் 26/11 தாக்குதலுக்கும் காரணமானவர்களின் அடிப்படைக் கருத்தியல் ஒன்றுபோல் தெகிறது. காசுமீரத்தை இந்திய அரசு வஞ்சித்ததும், இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிரான பாகுபாடும், பாபர் மசூதி இடிப்பு தொடங்கி இந்துத்துவ ஆற்றல்கள் நடத்திவரும் வன்பறிப்பும், நச்சுப் பரப்புரையும், பொய் வழக்குகளில் ஏராள மான இசுலாமியர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப் பதும், அனைத்துக்கும் மேலாக, இந்திய வல்லாதிக்கம் காசுமீர மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதும் இசுலாமியர்களிடையே ஒரு முற்றுகை மனநிலையை வளர்த்துள்ளன. இது அம்மக்களிடையே ஒரு மதத் தீவிரவாதத்தைத் தோற்றுவித்து, அதன்பால் சில இளைஞர்களை ஈர்த்து அவர்களை எதற்கும் துணிந்த பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளது.

இவர்களைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்பதாக இருந்தாலும் சரி, புதுப் பயங்கரவாதிகள் தோன்றுவதைத் தடுப்பதாக இருந்தாலும் சரி, மேற்கூறிய வேர்க் காரணங்கள் களையப்பட வேண்டும். வேறுவிதமாகச் சொன்னால் உறுதியான, முழுமையான சனநாயகமே பயங்கரவாதத்துக்கு நிலையான தீர்வு. இன்றைய இந்தியச் சூழலில் மொழிவழித் தேசியமும், சாதி ஒழிப்புக்கு அடிப்படையான சமூக நீதியும் முழுமையான சனநாயகத்தின் உயிர்க் கூறுகள். இவற்றுக்கான போராட்டமே மதத் தீவிரவாதத்தி லிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் மக்களை மீட்டெடுத்துப் பாதுகாக்கும்.
அமெக்க அதிபர் புஷ் 9/11 தாக்குதலின் படிப்பினைகளைச் சரியாக உள்வாங்கினால்லை.

இராக்கு மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெக்கப் படைகளை ஏவினார், மேலும் பல உயிர்கள் பறிபோவதற்கு வழி செய்தார். இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் புஷ்ஷிடம் ‘லவ்யூ' சொன்னவராயிற்றே, இதில் அவர் வழி தனி வழி, அதுவே புஷ் வழி. 26/11 தாக்குதலுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் சொல்லும் செயலும் அவரை இந்திய புஷ்ஷாகவே காட்டுகின்றன. இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள விவாதத்தைப் பார்க்கும் போது இந்த ‘புஷ் அணுகுமுறை'யில் மன்மோகன் சிங்கிற்கும் அத்வானிக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெயவில்லை. வலதுசாகளுக்கும் இடதுசாகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெயவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கே கூட மக்கள் விழிப்பும் மக்கள் பங்கேற்பும் தேவை என்ற புரிதலே இந்திய ஆளும் கும்பலிடம் இல்லை. எம்.கே. நாராயணன் போன்ற உதவாக் கரை ‘நிபுணர்'களைத்தான் இவர்கள் நம்பியுள்ளனர். இதன் விளைவு குடிப் பயங்கரவாதத்தை ஒடுக்குவதன் பெயரால் அரசப் பயங்கரவாதம் வளரப் போகிறது என்பதே. 9/11க்குப் பின் அமெக்காவிலும் உலகெங்கிலும் அரங்கேறிய அதே நிகழ்ச்சிப் போக்குதான் 26/11க்குப் பின் இந்தியாவிலும் அரங்கேறப் போகிறது. இதன் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாய் உள்ளது.

இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும், இவர்களின் ஊதுகுழலாய் விளங்கும் ஊடகங்களும் கூட மக்கள் சார்புச் சிந்தனையற்றவை என்பதை மறந்துவிடக் கூடாது. 26/11 மும்பைத் தாக்குதலிலேயே கூட சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி முனையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஏழை எளிய மக்களைக் காட்டிலும் தாஜ், ஓபராய் போன்ற ஏழு நட்சத்திர விடுதிகளில் சிக்கியவர்களைப் பற்றியே பரபரப்பாகச் செய்திகள் வந்தன என்பது கவனிக்கத்தக்கது. சீரழிந்த நுகர்விய - மேற்கத்திய ஆடம்பரப் பண்பாட்டின் உறைவிடமான தாஜ் விடுதிதான் மும்பையின் பெருமைச் சின்னமாகக் காட்டப்பட்டது. பயங்கரவாதிகள் பத்துப் பேர் இந்தியாவின் நிதித்துறைத் தலைநகரம் எனப்படும் மும்பைக்குள் ஆயுதங்களோடு எளிதில் நுழைந்து நூற்றுக்கு மேற்பட்டவர்களைச் சுட்டுக் கொல்ல முடிந்தது பற்றியும், இந்தியாவின் சிறப்பு அதிரடிப் படையினர் அவர்களை வென்று முடிக்க 48 மணி நேரத்துக்கு மேல் தேவைப்பட்டது பற்றியும் இந்தியா வெட்கப்பட வேண்டுமே தவிர வெற்றுப் பெருமை பேசக் கூடாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெக்க மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி அதிபர் புஷ் இராக் மீதும் ஆப்கானிஸ்தானம் மீதும் வன்பறிப்புப் போர் தொடுத்தது போலவே, மக்களின் இனம் புரியாத ஆத்திரத்தை பாகிஸ்தானுக்கு எதிராகத் திருப்பி விட சோனியா - மன்மோகன் - ராகுல் கும்பல் திட்டமிட்டே முயல்கிறது. (தேர்தல் நெருங்குகிறது அல்லவா?)

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பதற்காகவே ‘பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம்!' என்று மிரட்டல் விடுக்கும் இந்திய அரசு... சிங்களக் கடற்படையினர் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற பிறகும் ‘இலங்கை மீது போர் தொடுப்போம்' என்று அச்சுறுத்துவது பற்றி எண்ணிப் பார்த்ததும் இல்லை. மும்பை தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் தொடர்வசையாகக் குண்டு வெடிப்புகள் (இந்துத்துவக் குண்டு வெடிப்பு உட்பட) நிகழ்வதைத் தடுக்கத் துப்பில்லாத இந்திய அரசால் 26/11 போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க முடியாமற் போகுமோ என்பது நம் கவலை.

மும்பைத் தாக்குதலில் உயிர்ப் பலியான அனைவருக்காகவும் - தாஜ், ஓபராய் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் ஆனாலும், தொடர் வண்டி நிலையத்தில் தாங்கள் இறுதிப் பயணத்துக்காகக் காத்திருப்பதை அறியாமலே காத்திருந்தவர்கள் ஆனாலும், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட காவல் படையினர் ஆனாலும், மறைந்த அனைவருக்காகவும் - நாம் உளமார வருந்துகிறோம். இந்தத் துயரமான சூழலையும் சிங்கள அரசு தன் புலி எதிர்ப்புப் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கண்டோம். மும்பைப் பயங்கரவாதிகளைப் போலத்தான் ‘புலிப் பயங்கரவாதிகளும்' என்று காட்ட அது முயல்கிறது. இழவு வீட்டில் ஒப்பாரி பாடச் சென்றவள் பந்தலில் தொங்கும் பாகற்காய் மீது கண் வைத்த கதையைத்தான் இது நினைவுபடுத்துகிறது.

இறுதியாக ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டாமலிருக்க முடியவில்லை. மும்பையைத் தாக்கிய குடிப் பயங்கரவாதத்தைப் போல் பன்மடங்குக் கொடியதான சிங்கள அரசப் பயங்கரவாதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மும்பையில் பலியானவர்கள் 200 பேருக்குள் தான். ஈழத்தில் மாண்ட வீரர்கள் 23,000 பேருக்காக வேண்டாம், அப்பாவித் தமிழர்கள் 80,000 பேருக்காக ‘இந்தியா' ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்ததுண்டா? ஒரு கண்டனச் சொல் உதிர்த்ததுண்டா? கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக என்று சொல்லித் தமிழர்கள் மீது முப்படைத் தாக்குதல் தொடுத்துள்ள அரச பயங்கரவாதி இராசபட்சர் கும்பலுக்கு மன்மோகன் சிங் - பிரணாப் முகர்ஜி கும்பல் ஆயுதமும் பயிற்சியும் கொடுப்பதை எதிர்த்துத் தமிழகத்துக்கு வெளியே இந்தியா எதிர்ப்புத் தெவித்ததுண்டா? மும்பைக்கு ஒரு நீதி, கிளிநொச்சிக்கு ஒரு நீதி என்பதுதான் இந்தியத் தன்மை என்றால், நமக்கு வேண்டும் மனிதத் தன்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com