Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
அடைமழை தந்த அவலம்
அமரன்

Flood

அமெக்கர்கள் போல் தமிழ் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் அண்மையில் தமிழகத்தில் வீசிய புயலுக்கு "நிஷா' என்று பெயட் டிருந்தனர். பெயடுவதில் காட்டிய ஆர்வத்தைப் பேய் மழையில் சிக்கித் தவிக்கும் ஐந்து இலட்சம் மக்களின் அவசரத் தேவையில் காட்டவில்லை. ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலங்களில் பெரும் பாதிப்புக் குள்ளாகும் குடிசைப்பகுதி மக்கள், ஆட்சியாளர்களால் தரப் படும் துயர்துடைப்பு உதவி களைப் பெறுவதோடு மறு ஆண்டு மழைக்காலத்தை நோக்கி நகர்கின்றனர். இது தமிழகத்தில் வழமையான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அடைமழைக் காலங் களில் தாழ்வானப் பகுதிகளில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக மேட்டுப் பகுதியில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, ஓரண்டு நாட்களுக்கு உணவு அளித்து மழைவிட்டபின் அவரவர் இடங்களுக்கு அகதிகள் போல் அனுப்பி வைக்கப்படுவது, தமிழ்நாட்டில் ஆண்டிற்கொரு முறை நிகழும் அவலக்கேடு.

இது இவ்வாறு இருக்க, அண்மைக் காலத்தில் ஏற்படும் புதிய மழைக்கால அவலம், நகர விவாக்கம், மாற்றுப்பாதை, நூறு அடிச் சாலை எனப் புதிய புதிய பெயல் நகர்ப் புற மழைநீர் வடி கால்கள் முழுவது மாக மூடப்பட்டு நகரமும் மழை வெள்ளத்தில் மாட்டிக் கொள்ளும் அவலக் காட்சியைக் காணமுடிகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாய் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சாவூர் - திரு வாரூர் - நாகை) காவியாற்றின் முழு அளவிலான வேளாண்மைக் குய மருத நிலமாகும். சிற்றாறு கள், வாய்க்கால்கள், வடிகால்கள் என மிகச் சிறந்த உள் கட்டமைப்பைக் கொண்டிருந்த இம் மாவட்டத்தின் நீர்வழிப் பாதைகளை முதலில் மனை வணிகம் (யல் எஸ்டேட்) என்ற பெயலான நிலக்கொள்ளையர் கள் சீரழித்தனர். எந்தச் சமூக விழிப்புணர்வும் அற்ற புதிய செல் வந்தர்கள் நகர் விவாக்கத்தைப் பெரும் தொழிலாக மாற்றியதன் விளைவாக, நகன் பழைய மழைநீர் வெளியேற்ற வழிகள் முற்றாக அழிக்கப்பட்டு, நகரை அண்மித்த வேளாண் நிலங் களைச் செயற்கையாக மண் மேடாக்கி, புதிய வீடுகளைக் கட்டி நகரைச் சுற்றி வீடுகளினால் வேலியமைத்ததின் எதிர்வினையாக நகரங்கள் இன்று மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

பெரு நகரங்களை இணைக்கும் பெரும் சாலை வசதித் திட்டங்கள் என்ற பெயலான அகலச்சாலை அமைப்புப் பணிகளில், நகரைச் சுற்றி அமைக்கப்படும் மண் அரண்களும் மழை நீரை நகருக்குள் தேக்கி விடுகின்றன. உயரமான இப்பெரும் சாலைகளில், மழை நீர் வெளியேறப் போதுமான வடிகால் குழாய்கள் அமைக்காததே இதற்குய முதன்மைக் காரணம். மணல் கொள்ளையர்கள் ஆறுகளில் மணலை அள்ளிச் சென்ற பின்னர் ஆறுகளில் மண்டிவிடும் பேய் காட்டாமணி (சென்னைக் காட்டாமணி) ஆகாயத் தாமரை மழைக் காலத்தில் பெருக்கெடுத்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் திருப்பி விடுகிறது.

நாகையிலிருந்து வேதாரண்யம் வரையிலான ஐம்பது கி.மீ. நீளமுள்ள கடற்கரையின் அருகில் தொடர்ந்தாற்போல் எண்ணற்ற செயற்கை இறால் பண்ணை களும் மழை வெள்ளத்தைக் கட லுடன் கலக்கவிடாமல் தடுத்து, கடற்கரையை ஒட்டிய ஊர்களை மழை வெள்ளத்தில் மூழ்கடிக் கின்றன. பழைய தஞ்சை மாவட் டத்தின் வேளாண்மை நிலங் களில் அமைந்திருந்த இயற்கை யான வடிகால் வசதிகள் அழிக்கப் பட்டதின் எதிர்வினையாகவே பத்து இலட்சம் ஏக்கல் பயிரான நெல் விளைச்சல் இம்முறை பெய்த அடைமழைக்கு இரையாகி அழிந்து போய் உள்ளது. வெள்ள நிவாரணம் என்ற பெயல் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆட்சியாளர்களுக் கும், அரசியல்வாதிகளுக்கும் இரையாகிப் போவதும் இதன் மறு பக்க உண்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com