Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
தீர்மானம் : கா.தமிழ்வேங்கை


உறுதிமொழி ஏற்று
ஊழியம் செய்ய வந்தவர்கள்
சட்டத்தின் துணையோடு மீறுகிறார்கள்
சட்டத்தை

இயற்கையின் இருப்பிடத்தையும்
இழந்த வாழ்வாதாரத்தையும்
மீட்கக் கோரும்
உரிமை முழக்கத்தை ஒடுக்குபவர்களை
அடக்கப் பிறந்ததே ‘தீவிரவாதம்'

இரண்டாம் தரக் குடிமக்களாய்
உரிமை இழந்த மண்ணில்
திசைமாறிய சிலர் போக்கிலியாய்
திசைவழி தெரிந்தவர்கள் போராளியாய்

தன் வலி தெரியாதவர்களை
தன் வயப்படுத்தியும்
தனிவழி கண்டவர்களை
தனிமைப்படுத்தியும்
அப்புறப்படுத்துவதே அரசாங்க உத்திகள்

சிறப்பு அதிரடிப்படையாய்
துணை நிலை ராணுவமாய்
ஸ்ரீநகரிலிருந்து தர்மபுரி வரை
நீண்டு செல்கின்றன
ஒடுக்குமுறையின் வடிவங்கள்

இனியும் இருக்கமாட்டோம் இயலாதோராய்
முறித்துப் போடுவோம்
நெஞ்சைக் குறிபார்க்கும் துப்பாக்கிகளை
சித்ரவதைதான் பரிசென்றால்
தீர்மானிப்போம்
தற்கொலைப் படையே தீர்வென்று...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.