Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
நம்மைப் போலில்லை நம் கொக்குகள்
புன்னகை சேது

குருதிக் கரைபடிந்த கொலைக்காடாய்
நிறம் மாறிக் கொண்டிருந்தது முல்லைத்தீவு
வழக்கத்தைப் போலவே நேற்று நிகழ்ந்த
ஈராயிர வெடிக் கொத்துக் குண்டில்
சிதறிச் சரிந்தது பெருமரமொன்று
பேரோலம் எழுப்பியபடி
இக்கொடூரத்தில் உருக்குலைந்து போயின
கூடுகளோடு கொக்குகளும்
சிறகு முளைக்காத சில குஞ்சுகளும்
நெடுங்கால மாயைப் போர்த்துறங்கும்
நம்மைப் போல் அல்லாமல்
செய்தியறிந்ததும் கொதித்தெழுந்தன
தமிழக வயல்களில் ஓவியப் புள்ளிகளாய்
நடனமிடும் கொக்குகள் யாவும்
அறப்போர் வீண் என்று...
தில்லி நேசத் தலைவர்கள்பால் நம்பிக்கையற்ற
அக்கொக்குகள் கிளம்பி விட்டன சாரைசாரையாக
துப்பாக்கிக் குழலொத்த தம் அலகுகளில்
குண்டுகளைக் கவ்வியபடி.
கரைபடியாத புரிதலையுடைய
அவ்வெண் கொக்குகள்
குண்டுகள் அனைத்தையும்
பொழிந்து விட்டுத் திரும்பி விட்டன
இந்தியக் கடற்படை மீது...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.